Saturday, September 25, 2010

யா‌ரும்‌ தப்‌பா‌க நி‌னை‌க்‌கவி‌ல்‌லை‌


சன் டிவியில் இரவுவேளையில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இரண்டு தொடர்களிலும் பெரும்பாலான ரசிகர்களின் பரிதாபத்தைச் சம்பாதித்து வருபவர் காவ்யா. "திருமதி செல்வ'த்தில் ப்ரியாவாகவும், "செல்லமே' தொடரில் அஞ்சலியாகவும் வந்து எல்லோர் மனதிலும் இடம் பிடித்துவரும் அவரைச் சந்தித்துப் பேசினோம்:
* "செல்லமே' தொடரின் அனுபவம் பற்றி சொல்லுங்களேன்?
"செல்லமே' தொடரில் நடிப்பது ஒரு நல்ல அனுபவத்தைத் தருகிறது. ராதிகா மேடத்தோடு நடிப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. அவர்களிடமிருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்கிறேன்.
எப்போது நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்தது?
அடிப்படையில் நான் ஒரு பாடகி. கூடவே மேடையில் சில நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் ஜெயா டிவியில் "ஸ்டார்ஸ் கப்புள்' என்கிற நிகழ்ச்சியை வழங்குவதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலமாகத்தான் தொடரில் நடிக்க வந்தேன்.
* சினிமாவில் பாடியிருக்கிறீர்களா?
இல்லை. அதற்குச் சந்தர்ப்பம் இதுவரை கிட்டவில்லை. மேடை கச்சேரிகள், சில விழா நிகழ்ச்சிகளில், திருமண வைபவங்களில் பாடிவருகிறேன். பாட்டு என்றால் எனக்கு உயிர். ஏதாவது ஒரு பாட்டை முணுமுணுத்துக் கொண்டே இருப்பேன்.
* "செல்லமே', "திருமதி செல்வம்' இரண்டிலுமே உங்கள் பெண்மையைப் பறிப்பது போன்ற கதாபாத்திரம் அமைந்திருக்கிறது. இதில் நடிக்க எப்படி ஒப்புக்கொண்டீர்கள்?
இதுபோன்ற அழுத்தமுள்ள கதாபாத்திரத்துக்குத்தான் எப்போதுமே வலிமை அதிகம். எனக்கு அமைந்தது ஒரு சவாலான ரோல் என்றுகூட சொல்லலாம். வழக்கமான கதாபாத்திரமாக அமையாமல் வித்தியாசமாக அமைந்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. முதலில் கொஞ்சம் தயக்கமாகத்தான் இருந்தது. இருந்தாலும் என் கதாபாத்திரத்தைப் பற்றி எல்லோரும் எடுத்துச் சொன்ன பிறகு நடிக்க முடிவெடுத்தேன். ரசிகர்களின் பரிதாபத்தைப் பெறுவதுதான் ஒரு நல்ல நடிகருக்குக் கிடைக்கும் மிகப்பெரிய வெற்றி.
* "திருமதி செல்வம்' தொடரில் ப்ரியாவாக நடிக்கும் அனுபவம்?
கடந்த ஒரு மாதமாகத்தான் இந்தத் தொடரில் என் கேரக்டர் ஆரம்பித்திருக்கிறது. ஆரம்பத்திலிருந்தே என் கதாபாத்திரம் ரொம்ப அழுத்தமாக அமைந்திருக்கிறது. காதலனை நம்பி ஏமாந்து போய்விடும் ஒரு பெண்ணின் மனநிலை, அவள் சந்திக்கும் பிரச்னை, அதனால் அவளுக்கு ஏற்படும் பாதிப்பு இதை வெளிப்படுத்தக்கூடிய ரோல். இதற்கு முன்பே கே. பி. ஸôரின் "சொல்லத்தான் நினைக்கிறேன்' என்ற தொடரிலும் இது போன்று நடித்திருக்கிú றன்.
அது "கல்கி' படத்தைப் பின்னணியாகக் கொண்ட கதை. ஒரு பெண்ணுக்கு நல்லது செய்வதற்காக, ஒரு பையனைக் கல்யாணம் செய்துகொண்டு அவனைத் திருத்திக் கொண்டு போய் அவளிடம் ஒப்படைப்பது போன்ற கதை. இதில் நடித்ததால் இப்போது நடிப்பதில் எனக்கு அவ்வளவாகக் கஷ்டம் தெரியவில்லை.
* ரசிகர்கள் உங்கள் நடிப்பைப் பற்றி என்ன சொல்கிறார்கள்?
ஷாப்பிங் போகும்போது, மேடைக் கச்சேரிகளில் பாடுவதற்காகச் செல்லும் இடங்களில் எல்லாம் ரசிகர்கள் ஆர்வத்தோடு வந்து சூழ்ந்துகொண்டு பேசுகிறார்கள். "நீங்க ரொம்ப நல்லா நடிக்கிறீங்க. உங்களைப் பார்க்கும் பொழுது ரொம்ப பரிதாபமாக இருக்கிறது. உங்களுக்கு ஏன் இந்த மாதிரி கஷ்டங்கள் வருகிறது' என்று சொல்வார்கள். உங்களை ஏமாற்றியவர்களைச் சும்மாவிடக்கூடாது, கண்டிப்பாக நீங்கள் பழிவாங்க வேண்டும் என்று சொல்கிறார்கள். யாரும் என் கதாபாத்திரத்திரத்தைப் தப்பாக பார்க்கவில்லை.
* சினிமாவில் நடிக்க ஆர்வம் உண்டா?
இப்போதைக்குச் சினிமா பக்கம் போகிற எண்ணம் இல்லை. தொடர்களிலேயே நிறைய நல்ல வித்தியாசமான, சேலஞ்சிங்கான பாத்திரங்களில் நடித்துச் சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

ராதிகாவோடு சண்டை போடுவேன்: கன்யா


"செல்லமே' தொடரில் எப்பொழுதும் மது பாட்டிலும் கையுமாகத் திரியும் (மதுமிதா)கன்யாவைப் படப்பிடிப்பில் சந்தித்தோம். அவர் மீது மது வாடை வீசுமே என்கிற தயக்கத்துடனே பக்கத்தில் அமர்ந்து பேசினோம். வாசனைத் திரவியம் மணக்க எவ்வித ஆக்ரோஷமும் இல்லாமல் அமைதியாகப் பேசினார்:
சினிமாத்துறைக்கு எப்படி வந்தீர்கள்?


முதன் முதலில் டெலி ஃபிலிம் மூலமாக தான் என் வாழ்கையை ஆரம்பித்தேன். டெலி ஃபிலிம் நடிக்கும்போது, "நங்கூரம்' என்ற மலையாளப் படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. அதன் பிறகு நிறைய படங்களில் கேரக்டர் ரோலில் நடித்திருக்கிறேன். அப்போது நிம்பஸ் டெலிவிஷன் மூலம் தொடரில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. தமிழில் "நீதி' என்ற தொடரில் ஷோபனா மேடம் நடித்திருந்த கதாபாத்திரத்திற்கு மலையாளத்தில் நான் நடித்தேன். அதன் பிறகு சன் டிவியில் "நீலவானம்' என்ற தமிழ்த் தொடரில் நடிக்கக் கூப்பிட்டார்கள். அது எனக்கு ஒரு பெரிய பிரேக் கொடுத்தது. அதன் பிறகு "காவ்யாஞ்சலி' தொடரில் நடித்தேன். ஒரு பெண்ணுக்கு எவ்வளவு பொறுமை இருக்குமோ அவ்வளவு அமைதியான பெண்ணாக அஞ்சலி என்ற கேரக்டர் செய்திருந்தேன். பேரும், புகழும் வாங்கி கொடுத்த கேரக்டர் அது. அதன் பிறகு இப்பொழுது "செல்லமே' தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.



"செல்லமே' தொடரில் மதுமிதா கேரக்டருக்கு உங்களை எப்படித் தேர்வு செய்தார்கள்?



அந்த கேரக்டருக்கு நான் பொருத்தமாக இருப்பேன். என்னால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்ததினால்தானே என்னைக் கூப்பிட்டிருப்பார்கள்? அந்த நம்பிக்கையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று நினைத்தேன். முதலில் கதையைக் கேட்கும் பொழுது தயக்கமாக இருந்தது. ஒரு குடும்பப் பெண் இப்படி இருப்பாளா இந்த மாதிரி நடித்தால் நம்மையும் இப்படி தான் நினைப்பார்களோ என்று நினைத்தேன். என் கணவரிடம் கேட்டேன். அவர் உனக்கு விருப்பமிருந்தால் செய் என்று சொன்னார். அதன் பிறகு தான் ஒத்துக்கொண்டேன்.



உங்களுடைய உடை, அலங்காரம் எல்லாம் ரொம்ப வித்தியாசமாக இருக்கே?எல்லோரையும் டாமினேட் செய்யும் கேரக்டர். சாதாரணமாக இருந்தால் பொருத்தமாக இருக்காது. மற்றவர்களைக் காட்டிலும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று தோன்றியது. அதனால் நானேதான் என் காஸ்ட்யூமை டிசைன் செய்துகொண்டு போய் நின்றேன். ராதிகா மேடம், டைரக்டர் எல்லோருமே பார்த்துவிட்டு இந்த கேரக்டருக்குப் பொருத்தமாக இருக்கும் இப்படியே செய்திடுங்கள் என்று சொல்லிவிட்டார்கள். அதே மாதிரி ஸ்கிரீனில் பார்க்கும்போது ரொம்ப பொருத்தமாக இருந்தது. என்னைப் பார்க்கிற நிறையபேர் என்னிடம் உடைகளைப் பற்றித்தான் முதலில் விசாரிக்கிறார்கள்.



தொடரில் கணவரையும், பிள்ளைகளையும் எப்போதும் திட்டிக் கொண்டே இருக்கிறீர்களே உங்களுக்குக் கஷ்டமாக இல்லையா?



எனக்குக் கணவராக அபிஷேக் ஸôர் ரொம்ப பொறுமையான கேரக்டரில் நடிக்கிறார். ரொம்ப நல்ல நடிகர் அவர். அப்படி அவர் திட்டு வாங்குவதனாலதானே அவருடைய கேரக்டரும் என்னுடைய கேரக்டரும் பேசப்படுகிறது. அதேபோல தான் அதில் என் பிள்ளைகளுக்கும் பெயரும் புகழும் கிடைக்கிறது.



உங்கள் நடிப்பைப் பார்த்துவிட்டு வீட்டில் என்ன சொல்கிறார்கள்?



வீட்டில் உள்ள எல்லோருக்கும் என்னைப் பற்றி நன்றாகத் தெரியும். என் கணவர் கவிதாபாரதியும் சரி, என் அம்மாவும் சரி நான் ஏதாவது சரியாகச் செய்யவில்லை என்றால் உடனே சொல்லிவிடுவார்கள். அதுவே நன்றாக நடித்திருந்தால் எதுவுமே சொல்ல மாட்டார்கள். அதைக் கொண்டே நான் என்று நன்றாக நடித்திருக்கிறேன் என்று தெரிந்துகொள்வேன்வேறென்ன தொடரில் நடிக்கிறீங்க?இப்பொழுது விஜய் டிவியில் ஆரம்பமாகி இருக்கிற மீரா தொடரில், என் கணவர் கவிதா பாரதி இயக்கத்தில் நடிக்கிறேன். இதிலும் ஒரு மாதிரி நெகட்டீவ்வான கேரக்டர்தான். அமைதியான குடும்பப் பெண்ணாக இருந்து கொண்டு உள்ளுக்குள் குத்திவிடுவது போன்ற கேரக்டர். செல்லம்மாவுடன் சண்டை போடும்போது உங்கள் மனநிலை எப்படியிருக்கும்?



ராதிகா மேடம் ரொம்ப சீனியர் ஆர்ட்டிஸ்ட். இந்தத் தொடரைப் பொருத்தவரை எங்களுக்கு முதலாளியாக இருந்தாலும் நடிப்பு என்று வரும்போது அவுங்க செல்லம்மா என்ற கேரக்டர்... நான் மதுமிதா என்ற கேரக்டர் அவ்வளவுதான். இயக்குநர் சொல்கிறபடி ராதிகாவோடு தொடர்ந்து சண்டை போடுவோம்.

Friday, July 30, 2010

'வேடிக்கை பார்க்கப் போனேன்... வேஷம் கட்டி வந்தேன்!'


ஜெயா டிவியில் ​ தற்போது புதிதாக ஆரம்பித்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் 'வந்தாளே மகராசி' என்ற தொடரின் மூலம் நடிகையாகி எல்லோரையும் கவர்ந்து வருகிறார் ஐஸ்வர்யா.​ இவர் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருந்தார்.​ விளம்பரம் ஒன்றில் நடித்துக் கொண்டிருந்த அவரை சந்தித்துப் பேசினோம்:
எப்படி நடிக்க வந்தீர்கள்?
என் அண்ணனுக்குக் காம்பியராக ஆக வேண்டும் என்று நிறைய ஆசையிருந்தது.​ ஒரு முறை விஜய் டிவியில் அதற்கான ஆடிஷன் நடந்தது.​ அதில் கலந்துகொள்ள அண்ணன் போனார்.​ அவரோடு நானும் சும்மா வேடிக்கை பார்க்கப் போயிருந்தேன்.​ ஆனால் அவர் தேர்வாகவில்லை.​ எதிர்பாராதவிதமாக நான் தேர்தெடுக்கப்பட்டேன்.​ வேடிக்கை பார்க்க போன இடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.​ அப்படித்தான் நடிப்புப் பக்கம் வந்தேன்.
தொகுப்பாளினியாக இருந்து 'வந்தாளே மகராசி' தொடருக்குத் தாவியது எப்படி?
மூன்று வருடமாக விஜய் டிவியில் வரும் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்தேன்.​ அதேபோல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு காம்பயரிங் செய்துள்ளேன்.​ ​ அப்போதிலிருந்தே தொடர்களில் நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தன.​ அதில் கொஞ்சமும் விருப்பமில்லாமல் இருந்தேன்.​ ஆனால் இந்தத் தொடருடைய கதை எனக்கு மிகவும் பிடித்தது.​ அதனால் இத்தொடரில் நடிக்கச் சம்மதித்தேன்.
நடிக்கும் அனுபவம் எப்படி?
காம்பயரிங் செய்வதற்கும்,​​ நடிப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.​ ​ காம்பயரிங் நம் வீட்டிலோ,​​ நண்பர்களிடமோ பேசுவது போன்று இயல்பாகப் பேசினால் போதும்.​ அதே சமயம் சில நேரங்களில் சரியாக நிகழ்ச்சியை வழங்கவில்லை என்றால் ​ உடனே முகத்துக்கு நேரே திட்டிவிடுவார்கள்.​ அதே சமயம் நன்றாக இருந்தால் உடனே வாழ்த்துவார்கள்.​ ​ ஆனால் நடிப்பு அப்படியில்லை.​ நடித்து முடித்து,​​ நாடகம் ஒளிபரப்பாகி,​​ வெளி இடங்களுக்குச் செல்கையில்,​​ ரசிகர்களைச் சந்திக்கும்போதுதான் ​ நம்ம என்ன செய்திருக்கிறோம் என்று தெரியும்.​ நடிக்கும்போது அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிட வேண்டியிருக்கிறது.​ இது ஒரு வித்தியாசமான,​​ புதுமையான நல்ல அனுபவமாக இருக்கிறது.
வேறென்ன தொடர்களில் நடிக்கிறீர்கள்?
தற்போது இந்த ஒரு தொடரில்தான் நடிக்கிறேன்.​ நான் விஸ்காம் ரெகுலரில் படித்துக் கொண்டிருக்கிறேன்.​ அதனால் நடிப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை.​ இதற்கே ரொம்ப போராடித் தான் கல்லூரியில் அனுமதி வாங்க வேண்டியிருக்கிறது.​ அதனால் கல்லூரியை முடித்த பிறகே முழுமையாக நடிப்பில் கவனம் செலுத்தலாம் என்றிருக்கிறேன்.​ ​ ​ ஆரம்பத்தில் இருந்தே பெரியதிரையில் நிறைய வாய்ப்புகள் வருகின்றன.​ 'சுப்பிரமணியபுரம்',​ 'சரோஜா' போன்ற படங்களிலும் வாய்ப்புகள் வந்தன.​ படிப்பு காரணமாகவே அந்தப் படங்களில் எல்லாம் நடிக்க முடியாமற் போய்விட்டது.​ இதை தவிர விளம்பரப் படங்களிலும் நடிக்கிறேன்.
வருங்காலத் திட்டம்?
வருங்காலத்தில் திரைக்கு முன் வருவதா அல்லது திரைக்குப் பின் நிற்பதா என்று இன்னும் முடிவு செய்யவில்லை. படிப்பை முடித்த பிறகுதான் அதை முடிவு செய்ய வேண்டும். தொடர்ந்து நடிக்க வாய்ப்புக் கிடைத்தால் சிறிது காலம் நடித்துவிட்டு பிறகு டைரக்ஷன் பக்கம் போகலாம் என்று எண்ணியிருக்கிறேன்.
குடும்பம்?
நான் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண். அப்பா பிரபாகர் மளிகை கடை வைத்திருக்கிறார். அம்மா ராணி குடும்பத் தலைவி. கலைஞர் டிவியில் காம்பயரிங் செய்யும் சந்தோஷ் என் அண்ணன்தான். அவர் நடிப்பதற்கு நிறைய டிப்ஸ் கொடுப்பார். நான் பாட்டி, தாத்தா செல்லம். அவர்கள்தான் என்னை அதிகம் ஊக்கப்படுத்துகிறார்கள்.

"பெண் தாதா நான்!''


கலைஞர் தொலைக்காட்சியில் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் "மகாலட்சுமி' தொடரில் ஹார்பர் சிங்காரியாக வந்து குள்ளநரித்தனமான வேலைகளை
செய்யும் பெண் தாதாவான பத்மினியை சந்தித்தோம். பக்கத்தில் அமர பயந்து, சற்று தள்ளி அமர்ந்தே பேச்சை ஆரம்பித்தோம்.
எப்படி சின்னத்திரை பக்கம் வந்தீர்கள்?
நான் சிறுவயது முதல் நடித்துக் கொண்டிருக்கிறேன். "மாயக்கண்ணாடி' "தில்' போன்ற படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்திருக்கிறேன். எதையாவது சாதிக்க வேண்டும் என்ற ஆசையினால்தான் நடிப்புத் துறையை தேர்ந்தெடுத்தேன். நான் நடித்த முதல் தொடர் கே.ஆர்.விஜயா அம்மாவோட "மடிசார் மாமி' தொடர்தான். அதை தவிர "சித்தி' தொடரிலும் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கிறேன்.
"மகாலட்சுமி' தொடரில் நடிக்கும் அனுபவம் பற்றி சொல்லுங்கள்?
லட்சுமி மேடம் மெயின் கேரக்டராக நடிக்கிற தொடர்தான் "மகாலட்சுமி'. அதில் ஹார்பர் சிங்காரி என்ற பெயரில் ஒரு பெண் தாதா கேரக்டரில் வருகிறேன். அதாவது லட்சுமியம்மா வீட்டில் இருக்கும் ஒரு பெண்ணை கடத்தி வந்து விற்று விடுவது போல கதை. ஆனால் இதுவரை எனக்கும் லட்சுமி அம்மாவுக்கும் காம்பினேஷன் உள்ள காட்சிகள் வரவில்லை. இப்போது என்னுடைய டிராக் மட்டும்தான் போய்கிட்டு இருக்கிறது.
இந்த மாதிரி பெண் தாதாவாக நடிப்பது எப்படி இருக்கிறது?
அந்தக் காலத்தில் இருந்த டி.ஆர். ராஜகுமாரி, சுந்தரிபாய் போன்ற வில்லி கேரக்டர் செய்ய வேண்டும் என்ற ஆசையில்தான் இந்த மாதிரி வில்லத்தனமான கேரக்டரில் நடிக்கிறேன். வில்லி கேரக்டர் என்றால், "பத்மினியை கூப்பிடுங்க' என்று சொல்ல வேண்டும். பாஸிட்டிவ்வான கேரக்டர்ஸ் செய்ய நிறைய பேர் இருக்காங்க. ஆனால் நெகட்டிவ் கேரக்டர் செய்ய ஒரு சிலர்தான் இருக்காங்க.
நெகட்டிவ் கேரக்டர் என்றால் பலர் வேண்டாம் என்று சொல்லி விடுவார்கள். ஆனால், உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் நெகட்டிவ் கேரக்டர்கள் செய்பவர்கள்தான் சீக்கிரம் ரீச் ஆகிவிடுவார்கள். அதனால்தான் நெகட்டிவ் கேரக்டர் செய்ய வேண்டும் என்று ஆசைபடுகிறேன்.
இவ்வளவு வில்லத்தனமான கேரக்டர் எதிர்பார்க்கும் நீங்கள் நிஜத்தில் எப்படி?
நடிக்கிற கேரக்டர்தான் வில்லத்தனமே தவிர, நிஜத்தில் நான் ரொம்ப சாஃப்ட்டான கேரக்டர்.
வேறு என்ன தொடர்களில் நடிக்கிறீர்கள்?
விஜய் டிவியில் ஏழு மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சித்தர்கள் சம்பந்தப்பட்ட "யாமிருக்க பயமேன்' என்ற ஆன்மீக தொடரிலும் நடிக்கிறேன்.அதில் மகாலட்சுமிக்கு அம்மாவாக நடிக்கிறேன். ஹார்பர் சிங்காரிக்கும் இந்த தொடருக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். அப்படியே ரொம்ப அமைதியான கேரக்டர் செய்கிறேன்.
பெரிய திரையில் படங்கள் எதுவும் நடித்துக் கொண்டிருக்கிறீர்களா?
ஒரு படம் நடிக்கிறேன். "ஈரம்' படத்தில் நடித்த ஆதி ஹீரோவாக நடிக்கும் "அய்யனார்' படத்தில் நடிக்கிறேன். அடுத்து நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறேன். அப்படி வந்தால் நடிப்பேன்.
நீங்கள் நடிக்கும் தொடர்களைப் பார்த்ததுண்டா?
நேரம் கிடைக்கும்போது பார்ப்பேன்முக்கியமாக ஏதாவது தவறு செய்திருந்தால் திருத்தி கொள்ளலாம் என்பதற்காகவே பார்ப்பேன். என் கணவரும் பார்த்து விட்டு உதவி செய்வார்.
குடும்பம்?
என் கணவர் சரவணன் "கிள்ளாதே' என்று ஒரு படம் டைரக்ட் பண்ணிக்கிட்டு இருக்காருஅந்தப் படம் அடுத்த மாதம் ரிலிஸ் ஆக உள்ளது. இரண்டரை வயதில் லட்சுமி நாராயணி என்ற குழந்தை இருக்கிறது.
உங்கள் கணவரும் சினிமாத்துறையில் இருப்பதால்,உங்களுக்கு டைரக்ஷன் செய்கிற எண்ணம் உண்டா?

டைரக்ஷன் செய்கிற எண்ணம் இல்லை. ஆனால் புரொடக்ஷன் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு.அதற்கான முயற்சிகள் செய்து கொண்டிருக்கிறேன்.

Thursday, June 24, 2010

குழந்தை நக்மாவாக நான்

9.00 மணிக்கு சன் டிவியில் விறுவிறுப்பாக ஒளி
பரப்பாகிக் கொண்டிருக்கும் "தென்றல்' தொடரில் நல்ல பரிச்சயமான கதாபாத்திரம் தீபா. அத்தொடரின் கதாநாயகி துளசியின் தோழியாக வந்து "நிழல்கள்' ரவியை படாதபாடுபடுத்தும் கதாபாத்திரம் கலக்கிக் கொண்டிருக்கும் ஹேமா ஒரு சந்திப்பு..
சின்னத்திரையில் தொடர்கள் பக்கம் எப்போது வந்தீர்கள்?
ராடன் நிறுவனத்தின் "சித்தி' தொடர்தான் எனக்கு முதல் தொடர். அந்த முதல் தொடரிலேயே எனக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தது. அடுத்து "மனைவி' என்ற தொடரில் நடித்தேன்.
அதன்பிறகு ஒரு சிறிய இடைவெளி. "விஜய்' டிவியில் "கனா காணும் காலங்கள்' தொடரில் நடித்தேன். எனக்கு அதில் நன்றாக நடிக்கக் கூடிய வேடம் கிடைத்தது. அந்தத் தொடர் என் வயதுக்குரிய தொடராக அமைந்தது. பள்ளியில் படிக்கும் பெண்ணாக நடித்திருந்தேன். அதற்குப் பின் இப்போது "தென்றல்' தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.
"தென்றல்' தொடரில் நடிக்கும் அனுபவம் பற்றி சொல்லுங்கள்?
"கனா காணும் காலங்கள்' தொடரில் எனக்கு அமைதியான கேரக்டர். அதற்கு நேர் எதிரான கேரக்டர் "தென்றலி'ல் வரும் தீபா கேரக்டர். வெளியே எங்காவது போகும் போது "தீபா வராங்கன்னு' சொல்கிறார்கள். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது கேட்பதற்கு. அதுதான் இந்த கேரக்டருக்குக் கிடைத்த வெற்றி என்று நினைக்கிறேன்.
சினிமாத் துறைக்கு எப்போது வந்தீர்கள்?
என் அம்மாவோட தம்பிகள் உதய்குமார்- சுரேஷ் என்ற என் மாமா இருவரும் சினிமாத்துறையில்தான் இருக்கிறார்கள். ஒரு மாமா, மணிரத்னம் சார் இயக்கிய "நாயகன்' படத்தில் நடித்திருக்கிறார். அவர் ஷூட்டிங் போகும் போது என் பாட்டி எங்களை எல்லாம் அங்கு அழைத்துப் போவார்கள்.
இப்படி போன போது எனக்கு ரஜினி சாரோட "பாட்ஷா' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தில் ரகுவரன் சாரோட பெண்ணாக வரும் சின்னகுழந்தை நான்தான். இப்படித்தான் சினிமாத் துறைக்குள் வந்தேன். "சூர்ய வம்சம்' போன்ற படங்களிலும் நடித்துள்ளேன். நடிப்பு என் ரத்தத்தோடு கலந்துவிட்டது.
மறுபடியும் பெரிய திரை பக்கம் போகும் எண்ணம் உண்டா?
பெரிய திரையில் இருந்து வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. எனக்கு பொருத்தமான நல்ல ரோலில்தான் நடிக்கவேண்டும் என்று ரொம்ப உறுதியாக இருக்கிறேன். சும்மா வந்து நின்றுவிட்டுப் போக எனக்கு ஆசையில்லை. ஒரே படம் நடித்தாலும் எல்லாருடைய மனதிலும் நிற்கும்படி நடிக்கவேண்டும்.
வேறு என்ன தொடர்கள் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள்?
சன் டிவியில் காலை பத்தரை மணிக்கு ஒளிபரப்பாகும் "மகள்' தொடரில் நடிக்கிறேன். அதில் சந்திரா லக்ஷ்மன் அவங்களோட உறவுக்கார பெண்ணாக நடித்து வருகிறேன்.
என்ன மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க விருப்பப்படுவீர்கள்?
நடிக்க வந்தாச்சு. இதில் இந்த மாதிரியான கேரக்டரில்தான் நடிக்கவேண்டும் என்று நினைக்காமல் எல்லாவிதமான கேரக்டர்களும் நடிக்கணும்.
சின்ன வயதிலிருந்தே நடிப்பின் மீது எனக்கு ஆர்வம் அதிகம். ஒரு நல்ல நடிகையாகத்தான் வரவேண்டும் என்று எப்போதுமே நினைத்துக் கொண்டிருப்பேன். அந்த ஆசை இன்று ஓரளவு நிறைவேறியிருக்கிறது.
உங்கள் குடும்பத்தில் உங்களுக்கு யாருடைய சப்போர்ட் அதிகமாகக் கிடைக்கும்?
எங்கள் குடும்பம் பெரியது. எனக்கு இரண்டு அண்ணன், இரண்டு அக்கா இருக்கிறார்கள்.
நான்தான் வீட்டில் கடைசி பெண். அண்ணன்கள், அக்காவுக்கு எல்லாம் திருமணம் ஆகிவிட்டது. எல்லாருமே எனக்கு ரொம்ப துணையாக இருப்பாங்க. நான் நடிப்பது எல்லாருக்குமே ரொம்பப் பிடிக்கும். அக்கா, மாமா, சித்தப்பா, சித்தி என்று எல்லாருமே என் நடிப்பை விரும்பிப் பார்ப்பார்கள்.
பங்குச் சந்தை விவரங்கள் என்றாலே பெரும்பாலானோருக்கு எட்டிக்காய் கசப்பாக இருக்கும்.​ அதை அழகுத் தமிழில் விவரித்து அசத்தி வருகிறார் அருள்செல்வி.​ மக்கள் தொலைக்காட்சியில் தினமும் காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை 'வளாகம்' நிகழ்ச்சியின் மூலம் எடுத்துச் சொல்லும் அவரைச் சந்தித்தோம்.
நிகழ்ச்சி தொகுப்பாளினியானது எப்படி?​​
நான் கல்லூரி முடித்துவிட்டு பள்ளி ஆசிரியையாக வேலை பார்த்துக்கொண்டிருந்தேன்.​ திருமணமானதால் ஆசிரியை வேலையைத் தொடர முடியாமல் வீட்டில் இருந்தேன்.​ அந்த நேரத்தில் மக்கள் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் தேவை என்று விளம்பரப் படுத்தியிருந்தார்கள்.​ எனக்குத் தமிழ் மீது இருந்த ஆர்வத்தினால் அதற்கு விண்ணப்பித்தேன்.​ ஆடிஷனுக்குக் கூப்பிட்டார்கள்.​ சென்று வந்த இரண்டு நாளில் நான் தேர்வாகி என்னுடைய நிகழச்சியைத் தொகுத்து வழங்க ஆரம்பித்துவிட்டேன்.​ ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.
​ ​தற்போது என்னென்ன நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறீர்கள்?​​
காலை 8.30 முதல் 9.30 வரையில் ஒளிபரப்பாகும் பங்குச் சந்தை தொடர்புடைய 'வளாகம்' நிகழ்ச்சியும்,​​ வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகும் 'கை மணம்' என்ற நிகழ்ச்சியும் வழங்கிக் கொண்டிருக்கிறேன்.​ ஒரு சில நேரங்களில் வழக்கமான தொகுப்பாளர்கள் வரவில்லை என்றால் வேளாண் சந்தை,​​ ஏற்றுமதி இறக்குமதி,​​ வேலைவாய்ப்பு தகவல் போன்ற ​ நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குவேன்.
​ ​பொதுமக்களிடம் நேரடித் தொடர்பு கொண்டு உரையாடும்போது என்ன உணர்வு ஏற்படும்?​​
சந்தோஷமாக இருந்தாலும் சரி,​​ கோபமாக இருந்தாலும் சரி கேமிரா முன் வந்து நின்று விட்டால் எல்லாவற்றையும் மறந்து நிகழ்ச்சியில் மட்டுமே கவனம் இருக்கும்.​ சில சமயங்களில் ஊர் பக்கத்தில் இருந்து மக்கள் பேசும் போது அவர்கள் தமிழைக் கேட்டதும்,​​ முகம் தெரியாத நபராக இருந்தாலும் ஓர் இனம் புரியாத சந்தோஷம் ஏற்படும்.​ நம்ம சொந்த ஊரில் இருந்து தொடர்பு கொண்டு பேசுகிறார்கள் என்று ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கும்.​ அதே சமயத்தில் கிராமத்து மக்களிடம் ஏற்பட்டிருக்கும் ​ வளர்ச்சியையும்,​​ விழிப்புணர்வையும் தெரிந்துகொள்ள முடியும்.​ ​
தொடர்களில் உங்களைப் பார்க்க முடியவில்லையே?​​
தொடர்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வருகின்றன.​ ஆனால் எனக்கு நடிப்பதில் அவ்வளவாக விருப்பமோ,​​ ஆர்வமோ இல்லை என்பதால் வாய்ப்புகளை ஏற்றுக் கொள்வதில்லை.​ ஆனால் எனக்கு சிறு வயது முதலே விளம்பரப் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.​ அதற்கு இது வரை சரியான வாய்ப்பு அமையவில்லை.
மக்கள் தொலைக்காட்சியைப் பொருத்தவரை தமிழுக்கு முன் உரிமை அதிகமாக இருக்குமே எப்படிச் சமாளீக்கிறீர்கள்?​​
ஆங்கிலம் கலக்காமல் நல்ல தமிழில் பேசி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவது எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது.​ நிகழ்ச்சி வழங்கும் ஒரு மணி நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் ஆங்கிலம் கலந்து பேசுவதை நினைத்தால் சில நேரம் வெட்கமாக இருக்கும்.​ பொதுவாக நிறைய பேர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள் ​ எப்படி ஆங்கிலம் கலக்காமல் உங்களால் தமிழில் மட்டுமே பேச முடிகிறது என்று.​ எனது குடும்பம் தமிழ் பாரம்பாரிய மிக்க குடும்பம்.​ என் வீட்டில் உள்ளவர்கள் எல்லாருமே தமிழ் எம்.ஏ.​ படித்தவர்கள்.​ அதனால் பொழுதுபோக்குக்காக அமர்ந்து பேசும்போது கூட சிலப்பதிகாரம்,​​ மணிமேகலை போன்றவற்றைப் பற்றிப் பேசுவார்கள்.​ அதுதான் எனக்கு தமிழ் மீது பற்று ஏற்பட ஒரு காரணம் என்று நினைக்கிறேன்.​ இப்படி ஒரு மணி நேரம் தமிழிலேயே பேசுவதை எனக்குக் கிடைத்த அரிய வாய்ப்பாக நினைக்கிறேன்.​ ​
உங்களுடைய பொழுதுபோக்கு என்ன?​​
எனக்கு கைவினைப் பொருட்கள் செய்வதில்,​​ ஓவியம் வரைவதில்,​​ தஞ்சாவூர் ஓவியங்கள் வரைதல் போன்ற கலைநயம் மிக்க வேலைகள் மீது ஈடுபாடு அதிகம்.​ அதற்கான பயிற்சி வகுப்புகளும் நடத்தி வருகிறேன்.​ யோகா முறைப்படி கற்றுக்கொண்டிருக்கிறேன்.​ அதனால் யோகா பயிற்சியும் அளித்து வருகிறேன்.
உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?​​
ஒரு தயாரிப்பாளராக நிகழ்ச்சிகளைத் தயாரித்துக் கொடுக்க வேண்டும் என்கிற ஆசை நிறைய இருக்கிறது.
-ஸ்ரீதேவிகுமரேசன்

சஹானா சாரல் தூவுதோ..!

சின்னத்திரை தொடர்கள் மூலம் தனது அமைதியான நடிப்பால் ரசிகர்களின் மனதை கவர்ந்த பிரபல கர்நாடக இசை பாடகியான அனுராதா கிருஷ்ணமூர்த்தியை ஒரு திரைவிழாவில் சந்தித்தோம்.
பிரபல பாடகியான நீங்கள் சின்னத்திரை பக்கம் வந்தது எப்போது, எப்படி?
ஜெயா டிவியில் "சஹானா' என்ற தொடர் மூலம் சின்னத்திரையில் என்னை அறிமுகப்படுத்தியவர் பாலசந்தர் சார்தான். "சிந்து பைரவி' படத்தின் இரண்டாம் பகுதிதான் அந்தத் தொடர். சுஹாசினி செய்த அந்தக் கதாபாத்திரத்தை நான் செய்தேன். அந்தக் கதைக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று என்னை நடிக்க வைத்தார் பாலசந்தர். அதுவே எனக்குப் பெருமையாக இருந்தது.
இப்போது என்ன என்ன தொடர்கள் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள்?​​
கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்யராஜ் சாரோட "விளக்குவெச்ச நேரத்துல', பாலிமர் சேனலில் ஒளிபரப்பாக உள்ள "மூன்று முகம்' தொடரில் நடித்துள்ளேன். தற்போது இந்த இரண்டு தொடர்கள்தான்.
அரசி தொடரில் உங்கள் நடிப்பை பார்த்துவிட்டு உங்கள் நண்பர்கள், வீட்டில் உள்ளவர்கள் என்ன சொன்னார்கள்?​​
ராதிகாவுடன் நடிதது நல்ல அனுபவமாக இருந்தது.புரொடியூசரா,நடிகையா ரொம்ப சாலியான அவரகளுடன் நடித்தது ரொம்ப நம்பிக்கையாக இருந்தது. அந்தத் தொடரில் என்னை கொடுமைப்படுத்துவது போல் வரும் காட்சிகளையெல்லாம் என் மாமியார், என் நண்பர்கள் எல்லாம் பார்த்துவிட்டு இந்த மாதிரி கேரக்டர் எல்லாம் செய்ய வேண்டாம் என்று சொல்வார்கள்.
மேடையில் பாடல்கள் பாடுவதற்கும், திரையில் நடிப்பதற்கும் என்ன வித்தியாசம் உணர்ந்தீர்கள்? எது சுலபமாக இருப்பதாக நினைக்கிறீர்கள்?​​
மேடை கச்சேரிகள் மக்களின் பார்வையில் நேரடியாக செய்கிறோம். ஆனால் திரையில் அப்படியில்லை. நம்ம மனதிற்குள் ஒரு கேரக்டரை சித்திரிச்சு அதை நடித்து மக்களிடம் டிவியின் மூலமா கொண்டு செல்கிறோம். இரண்டுமே சுலபம் இல்லை. இரண்டிலுமே கஷ்டங்கள் இருக்கின்றன. இரண்டிலுமே முழுமையான கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.
நீங்கள் நடித்த கேரக்டரில் ரொம்பவும் விரும்பி நடித்த கேரக்டர் எது?​​
"சஹானா' சிந்து, "திருப்பாவை' ரங்கநாயகி, "விளக்குவெச்ச நேரத்துல' ஞானாம்பிகாவாக, பாலிமர்காக இப்போது நடித்திருக்கும் திலகவதி கேரக்டர்... எல்லாமே நான் ரொம்ப விரும்பி நடித்தவைதான். அதில் ரொம்ப பிடித்தது "சஹானா' தொடர். ஏன் என்றால் அதுதான் நான் முதன் முதலில் நடித்த தொடர். நடிப்பே தெரியாமல் செய்தது அந்த கேரக்டர். அதே மாதிரி எனக்கு அமைந்த கதாபாத்திரங்களின் பெயர்களும் கடவுள் கிருபையால் கிடைத்தது என்று நினைக்கிறேன்.
நீங்கள் விரும்பி ரசிக்கும் சங்கீதம் யாருடையது?​​
நான் எப்பவுமே சொல்வது போல் எம்.எஸ்.அம்மாவின் இசையும்என் தந்தையின் இசையும்தான் மிகவும் விரும்பி ரசிப்பேன். ஆனால் விதவிதமான சங்கீதங்களைக் கேட்க கேட்க நான் புரிந்து கொண்ட ஒரு விஷயம் என்னவென்றால் சங்கீதம் ஒரு வாகனம் போல பயணம் செய்து கொண்டே இருக்கும். அதில் உங்கள் மனதை தாக்கி ஒரு சங்கீதம் ஈரப்படுத்தியது என்றால் அது யார் பாடினாலும் ரசிக்க தோன்றும். அப்படி பாதித்தவர்கள் ஒவ்வொருத்தர் பெயராக சொல்ல வேண்டும் என்றால் நேரம் போதாது.
சாந்தமான குரலால் உங்கள் ரசிகர்களை ஈர்த்து வைத்திருக்கும் ரகயம் என்ன?​​
என் இசை அப்படி ரசிகர்களை ஈர்த்து வைத்திருந்தால் கடவுளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். அதே போல எனக்கு இந்த சங்கீதத்தை அளித்த என் தாய் தந்தைக்கும், எம்.எஸ்.அம்மாவுக்கும் தான் நன்றி சொல்லணும். சங்கீதம் என்று இல்லை எந்த ஒரு வேலையாக இருந்தாலும் அதை முழு மனதோடு, ஆத்மார்த்தமாக செய்தால் வெற்றி நிச்சயம். அதே போல நம் தன்மானத்துக்கு எந்த பாதிப்பும் இல்லால் செய்தால் நம் உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
உங்கலுடைய இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருப்பவர்கள் யார்?​​
என் கணவர், புகுந்த வீட்டு நபர்களும், பிறந்த வீட்டு நபர்களும் ரொம்ப துணையாக இருக்கிறார்கள். அதேபோல் சினிமாத் துறையில் இருந்து நிறைய பேர் உறுதுணையாக இருக்கிறார்கள். எனக்கு கச்சேரிகள் வரும் நாட்களில் டேட்களை மாற்றி கொடுத்து நிறைய ஒத்துழைப்பு தருகிறார்கள்.இந்த நேரத்தில் அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்ள வேண்டும்.
உங்கள் ஓய்வு நேரத்தை எப்படிச் செலவிடுகிறீர்கள்?
கற்றது கையளவு, கல்லாதது உலகளவு என்பார்களே அது போல சங்கீதத்தில் பாடம் செய்து கொள்வேன். புத்தகங்கள் படிப்பேன். இப்போது சமீப காலமாக நிறைய படங்கள் பார்க்க ஆரம்பித்துள்ளேன். எனக்கென்று ஒரு சிறிய நண்பர்கள் வட்டம் இருக்கிறது. அவர்களோடு அமர்ந்து நிறைய நல்ல விஷயங்களைப் பகிர்ந்து கொள்வேன்.

கா‌தல் !

நி‌த்‌தம்‌ நி‌த்‌தம்‌ என்‌ நி‌னை‌வி‌ல் ‌வந்‌து
யு‌த்‌தம் ‌செ‌ய்‌தா‌ய்‌ என்‌உயி‌ரே‌!
ஒரா‌யி‌ரம்‌ முறை ‌எனக்‌கு‌
நா‌னே‌கே‌ட்‌டு கொ‌ண்‌டே‌ன்‌
நீ ‌எனக்‌குள்‌இருப்‌பது நி‌ஜம்‌ தா‌னா‌ என்‌று!
எத்‌தனை ‌முறை‌ நீ‌ சொ‌ல்‌ல கே‌ட்‌டி‌ருந்‌தா‌லும்‌
மறுபடி‌யு‌ம்‌ மறுபடி‌யு‌ம்‌ கே‌ட்‌டு தூ‌ண்‌டுகி‌றது
உனக்‌குள்‌ நா‌ன் ‌வந்‌ததை‌ பற்‌றி‌!
உரை‌ந்‌து கி‌டக்‌கி‌றே‌ன் ‌உன்‌னுள் ‌நா‌ன்‌
பி‌ரி‌த்‌து எடுப்‌ப‌து உன்‌னா‌ல்‌ சா‌த்‌தி‌யமா?
அழகே ‌என்‌றா‌ய் ‌நா‌ன்‌அழகி‌ல்‌லா‌த போ‌தி‌லும்‌.
அன்‌பே‌ என்‌றா‌ய்‌ நா‌ன்‌கோ‌வப்‌பட்‌ட போ‌தி‌லும்‌.
தொ‌ட்‌டும்‌, தொ‌டா‌மலும்‌‌ நீ ‌உரசி‌ய போ‌தெ‌ல்‌லா‌ம்‌
எனக்‌குள் ‌உயி‌ர்‌த்‌து எழுந்‌தது கா‌தல்‌!
உன்‌ ஸ்‌பரி‌சம் ‌நி‌னை‌வி‌ல் ‌வந்‌து
உரசி‌ய போ‌தெ‌ல்‌லா‌ம் ‌பட்‌டா‌ம்‌பூ‌ச்‌சி‌யா‌ய்‌
சி‌றகடி‌த்‌தது என்‌மனம்‌!.

Tuesday, April 13, 2010

சிரிப்பை நிறுத்தலாமா சோனியா?



'செல்லமே'- தொடரில் சம்பந்தமே இல்லாமல் சிரிச்சுக்கிட்டே இருக்கும் சோனியாவை அவரது வீட்டில் சந்தித்தோம்.​
''என்னங்க இப்படித் திடீர்ன்னு சிரிப்பதை விட்டு விட்டு பழிவாங்குதில் இறங்கிட்டீங்க'' என்றவுடன் கலகலவெனச் சிரிக்கத் தொடங்கி விட்டவரை நிறுத்தி சற்று சீரியஸôகப் பேச வைத்தோம்:​ ​
'ஆமாம்.​ இப்போது சிரிக்க முடியவில்லையே என்று கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது.​ கதையோட களம் எல்லாம் மாறிப்போனதுனால இப்போது சிரிக்க முடியவில்லை.​ இருந்தாலும் சிரிப்பதற்கு முயற்சி செய்துகிட்டுத்தான் இருக்கிறேன்.​ இந்தத் தொடரில் என் அம்மா இறந்துபோன பிறகு கதை கொஞ்சம் மாறி ரொம்ப சீரியஸôன சீன்ஸ் போய்க்கிட்டு இருக்கிறது.​ ராதிகா மேடமை எதிர்த்து யாராவது சண்டை போட வேண்டியிருப்பதினால்,​​ அது நாத்தனாராக இருந்தால் நன்றாக இருக்கும் என்பதால் என்னால் சிரிக்க முடியாமல் போய்விட்டது.​ எவ்வளவு கஷ்டமான கதாபாத்திரமாக இருந்தாலும் செய்துவிடலாம்.​ ஆனால்,​​ எல்லாரையும் சிரிக்க வைப்பதுதான் சிரமம்.​ ​ ​
இந்தச் சிரிப்பு பாத்திரத்திற்காகவே வீட்டிற்குப் போய் கண்ணாடி முன்னால நின்று ஒரு மணிநேரம் சிரித்துப் பழகுவேன்.​ என் கணவர் பார்த்துவிட்டு உனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா என்று கேட்பார்.​ கொஞ்ச நாள் அந்த மாதிரியேதான் திரிந்தேன்.​ வெளியில் போகிறபோது சின்னச்சின்ன குழந்தைகள்கூட என்னைப் பார்த்ததும் சிரிக்கத் தொடங்கிவிடுவார்கள்.' ​
இப்பொழுது எத்தனை தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள்?
'செல்லமே', ​ 'மாதவி' என்று இரண்டு தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.​ இரண்டுமே வேறுவேறு வித்தியாசமான கதாபாத்திரங்கள்.​ 'செல்லமே'வில் எல்லாரும் திட்டுவது மாதிரி பாத்திரம்.​ மாதவியில் எல்லாரும் பார்த்து பரிதாபப்படுகிற பாத்திரம்.​ இப்படி ஒரே நேரத்தில் இரண்டு வித்தியாசமான பாத்திரங்கள் செய்வது நல்ல அனுபவமாக இருக்கிறது.​ அதோடு 'ராம ராவணன்','மூன்று முகம்' என சில மலையாள படங்களில் நடிச்சுக்கிட்டு இருக்கேன்.​ ​
உங்கள் கணவரை இப்பொழுது தொடர்களில் பார்க்க முடியலையே?​ ​
மூன்று வருடங்களாக அவர் தொடர்களில் நடிப்பதில்லை.​ இது வரை மூன்று தொடர்களில்தான் நடித்திருக்கிறார்.​ பெரியதிரை வாய்ப்பு வந்ததால் அங்கு சென்று விட்டார்.​ தற்போது 'ரசிக்கும் சீமானே',​​ 'ஆறாவது வரம்' போன்ற படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
உங்கள் கணவரும் நீங்களும் நடிப்பைப் பற்றி விவாதிப்பீர்களா?
நான் நடிக்கும் தொடரைப் பார்ப்பதற்கு அவருக்கு நேரம் இருக்காது.​ நான் சிறுவயதில் இருந்து நடிப்பதால் என்னிடம் ஆலோசனை கேட்பார்.​ விமர்சனங்கள் எதுவும் சொல்ல மாட்டார்.​ ஆனால் என் திறமைக்கேற்ற பாத்திரம் கிடைக்கவில்லை என்கிற வருத்தம் அவருக்கு உண்டு.​ ​
சின்னத்திரை அல்லது சினிமாத்துறை இப்பொழுது எப்படி இருக்கிறது என்று நினைக்கிறிர்கள்?
எல்லாத் துறையும் நன்றாக வளர்ந்திருக்கிறது.​ ஆரோக்கியமாகவும் இருக்கிறது.​ நான் குழந்தை நட்சத்திரமாக நடித்தபோது பேபி அஞ்சு,​​ மீனா,​​ சாலினி என்று மூன்று நான்கு பேர் தான் இருப்போம்.​ இப்போது ஏகப்பட்ட படங்கள் வருகின்றன.​ ஏகப்பட்ட பேர் நடிக்கிறார்கள்.​ இது வளர்ந்திருப்பதைத்தானே காட்டுகிறது.​ இடையில் ​ கொஞ்ச நாள்களுக்கு முன் கிளாமருக்குத்தான் வாய்ப்பு அதிகமாக இருந்தது.​ ஆனால் இப்போது அந்த நிலைமையும் மாறிவிட்டது.​ புதுமுகங்களும் திறமை காட்டுவதற்கு ​ ​ நிறைய வாய்ப்பு இருக்கிறது.​ அதுபோல சினிமா என்றாலே ஒரு தப்பான துறை என்கிற மாதிரியான கருத்துகள் இருந்தன.​ அதுவும் இப்போது மாறிப்​ போய்விட்டது.
உங்கள் குழந்தைகள் பற்றி சொல்லுங்க?
என் மகன் தேஜஸ்வின்னுக்கு ஐந்து வயதாகிறது.​ என் மகள் பவதாரணிக்கு ஒரு வயது தான் ஆகிறது.​ என் அப்பா,​​ அம்மாவும் என் சித்தியும்தான் பார்த்துக் கொள்கிறார்கள்.​ பெரியவனாவது என்னோடு கொஞ்சம் நாள் இருந்தான்.​ ஆனால் மகள் தான் எட்டு மாதத்தில் இருந்தே அம்மாவிடம் வளர்ந்து வருகிறாள்.
-​ ஸ்ரீதேவிகுமரேசன்

லட்சிய நடிப்பு


"கோலங்​கள்" தீபா வெங்​கட் என்​றால் தெரி​யா​த​வர்​களே
"தங்கம்' தொடரில் வரும் வடிவு என்றாலே இளவஞ்சிக்கு வயிற்றில் புளிதான். வடிவைக் கொஞ்சம் நமது வாசகர்
களுக்காக சீண்டி பார்ப்போமே என்று சின்னத்திரை நடிகை வர்ஷாவை தொடர்பு கொண்டோம். இன்று
ஷூட்டிங் இல்லை ஜாலியா வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று சுந்தர தெலுங்கு கலந்த தமிழில் கூறினார். அவரைச் சந்தித்தோம்.
உங்கள் குடும்பத்தினர் பற்றி சொல்லுங்கள்?
என் குடும்பத்தைச் சேர்ந்த எல்லாரும் ஹைதராபாதில் உள்ளார்கள். நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் அங்குதான். நான் முஸ்லீம் மதத்தை சார்ந்தவள். இங்கே சென்னையில் என் அத்தை, மாமாவோடு தங்கியிருக்கேன்.
என்ன என்ன தொடர்கள் நடிச்சுகிட்டு இருக்கீங்க?
"தங்கம்', "இதயம்', "அம்மன்', "கஸ்தூரி' என நான்கு தொடர்கள் நடிக்கிறேன். இந்த நாலு தொடரிலுமே நான்கு வித்தியாசமான கதாபாத்திரங்கள் செய்துகிட்டு இருக்கேன். இப்படி வேற வேற டிபரண்ட்டா செய்வது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. "தங்கம்'ல கிராமத்துப் பெண்ணாக நடிக்கிறேன். "கஸ்தூரி'யில் மென்மையான கேரக்டர், "அம்மன்' தொடரில் போலீஸ் ஆபிசரா வருவேன். "இதயம்' தொடரில் இப்பொழுது தான் என் போர்ஷன் ஆரம்பமாகி இருக்கு அதுவும் நெகட்டீவ் ரோல் தான். அதற்கு எப்படி வரவேற்பு இருக்கும் என்று இனிமேதான் தெரியும்.
"தங்கம்' தொடரில் இளவஞ்சியை எதிர்த்து வெளுத்து வாங்குறீங்களே, எப்படி?
அந்த சீரியலில் காவேரி அக்காதான் எப்பவுமே எல்லாரையும் டாமினேட் செய்வாங்க. ஆனா நான் அவுங்களுக்கு டென்ஷன் கொடுக்கிற மாதிரி எதிர்த்து சண்டை போடுவேன். இது ஒரு வித்தியாசமான அனுபவமா இருக்கிறது. அதனாலயே என் கேரக்டர் மக்கள்கிட்ட நல்லா ரீச் ஆகியிருக்கிறது. வெளியே எங்கயாவது ஆடியன்ஸ் பார்த்தாகூட "எப்பங்க உங்களுக்கு கல்யாணம். நீங்க கல்யாணமாகி அங்கே போங்க அப்ப தான் நல்லா இருக்கும். நீங்க ரெண்டு பேரும் ஸ்கிரீன்ல வந்தாலே ரொம்ப இன்ட்ரஸ்ட்டா பார்ப்போம்'னு சொல்லுவாங்க.
நீங்கள் எப்படி சினிமாவைத் தேர்ந்தெடுத்தீங்க?
சின்னவயதில் எங்கள் வீட்டில் டிவி எல்லாம் பார்க்க கூடாது. ஒரே ஒரு ரேடியோ தான் இருக்கும் அது கூட எங்க அப்பாதான் வைத்திருப்பார். சின்ன வயதில் இருந்தே எனக்கு டிவியில் வருபவர்கள் போட்டிருக்கும் நகைகள்,டிரஸ் எல்லாம் பார்க்க ரொம்ப ஆசையாக இருக்கும்.
அதற்காகவே டி.வி. பார்ப்பேன். காலேஜ் முடிச்சதும் மாடலிங் துறையை தேர்ந்தெடுத்தேன். மாடலிங்கில் இருக்கும்போதுதான் "லட்சியம்' என்ற தொடரின் டைரக்டர் என்னைப் பார்த்துவிட்டு இந்தக் கேரக்டரை நான் செய்தால் நல்லா இருக்கும் என்று சொன்னார். அதுதான் என்னோட ப்ர்ஸ்ட் சீரியல். அதன் பிறகு பாலாஜி டெலி ஃபிலிம்ஸ் மூலமாக மற்ற தொடர்களில் நடிக்க ஆரம்பித்தேன்.
ஓய்வு நேரங்களில் என்ன செய்வீர்கள்?
நடனம் என்றால் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஏதாவது பாட்டுபோட்டுவிட்டு நானும் என் சிஸ்டரும் ஆடிக்கிட்டு இருப்போம். கலா மாஸ்டரோட சிஸ்டர் ஜெயந்தி அக்காவிடம் தான் நடிகர் சங்கத்துல போய் டான்ஸ் கற்றுக்கொண்டேன். நடிப்புக்கு அடுத்தபடியா எனக்கு டான்ஸ்தான் ரொம்ப பிடிக்கும்.
டான்ஸ் மீது இவ்வளவு ஆர்வமாக இருக்கும் நீங்கள் டிவியில் வரும் நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லையே ஏன்?
தொடர் முடிந்ததும், டான்ஸ் பிராக்டிஸ் போகணும். ஏற்கனவே இத்தனை தொடர்கள் போய்கிட்டு இருக்கு. நேரம் கிடையாது. இதற்கு மேல டான்ஸ் எடுத்துகிட்டா ரொம்ப கஷ்டமாகிவிடும். நடிப்பில் சரியா கவனம் செலுத்த முடியாது. ஒர்க் லோட் அதிகமாகிவிடும். சின்னத்திரை நிகழ்ச்சி, நட்சத்திர விழா எல்லாம் வரும் போது டான்ஸ் நிகழ்ச்சிகள் செய்யணும்னு ஆசை இருக்கு. ஆனால் போட்டிகள்ல கலந்துக்க விருப்பமில்லை.
ரம்யாகிருஷ்ணோட நடிக்கும் அனுபவம் எப்படி?
நான் அவருடைய படங்கள் நிறைய பார்த்திருக்கிறேன். அப்பவே எனக்கு அவரைப் ரொம்ப பிடிக்கும். ஆனால் படத்தில் பார்த்ததற்கும் இப்போது நேரில் பார்ப்பதற்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கு. ஒரு சாதாரண குடும்ப பெண் எப்படி இருப்பாங்களோ, பழகுவாங்களோ
அப்படிதான் பழகுவாங்க. பெரிய ஹீரோயின் என்ற பந்தாஎல்லாம் அக்காவிடம் கிடையாது. யார் எந்த சீன் நல்லா நடித்தாலும் உடனே நீ நல்லா செய்த நல்லா இருந்தது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது என்று பாராட்டுவாங்க.
பொட்டு வைத்து பூ வைத்துக் கொண்டு தமிழ் பெண்ணாக நடிக்கும்பொழுது உங்கள் நடிப்பைப் பார்த்து வீட்டில் என்ன சொல்லுவார்கள்?
சொல்லப் போனால் எங்கள் குடும்பத்தில் பலருக்கு நான் நடிப்பதே தெரியாது. எனக்கு பொட்டு வைத்துக் கொள்வது, பூ வைத்து கொள்வது எல்லாம் ரொம்ப பிடிக்கும்.
சமீபத்தில் பெண்கள் தினம் வந்ததில்லையா அதைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?
ரொம்ப சந்தோஷமாக இருந்தது. பெண்களுக்காக ஒரு தினம் வைத்து கொண்டாடுவது பெண்களுக்குக் கிடைத்த அங்கீகாரம் தானே? என்னை பொருத்தவரை பெண்கள் யாரும் அடிமையாக இருக்க கூடாது. சுதந்திரமா செயல்படணும். எப்பவும் தன்னம்பிக்கையோட இருக்கணும்,யாரையும் சார்ந்து வாழக் கூடாதுன்னு நினைப்பேன்.

திருமணம் திருப்பு முனையாக இருக்கும்!


"கோலங்​கள்" தீபா வெங்​கட் என்​றால் தெரி​யா​த​வர்​களே
கிடை​யாது.​ அந்த அள​வுக்கு இல்​லத்​த​ர​சி​க​ளின்
மனங் ​க​ளை​யும் கொள்ளை கொண்​ட​வர்.​ பெரி​ய ​தி​ரை​யில் பின்​ன​ணி​கு​ரல் கொடுப்​ப​வ​ரா​க​வும்,​​ ரேடி​யோ​வில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் வலம் வரு​கி​றார் தீபா.​ இதோ அவ​ரது வசீ​க​ரக் குர​லில் ​ நமது கேள்​வி​க​ளுக்குப் பதி​ல​ளிக்​கி​றார்..​ ​ ​
* தொலைக்​காட்சி தொடர்​க​ளில் உங்​களை நிறைய பார்க்க முடி​ய​வில்​லையே,​​ ஏன்?​​
இது ​வரை நிறைய தொடர்​க​ளில் நல்ல நல்ல ரோல்ஸ் ​ நடித்​தி​ருக்​கி​றேன்.​ அதற்​காக ஆடி​யன்ஸ் ​ கிட்ட பாராட்​டு​க​ளும் வாங்​கி​யி​ருக்​கி​றேன்.​ இப்​போது என்​னு​டைய எதிர்​பார்ப்​புக்கு ​ ஏற்ற மாதிரி ரோல் அமை​ய​வில்லை.​ நிறைய தொடர்​கள் நடிக்​க​வேண்​டும் என்​ப​தில்லை.​ ஒரு சில தொடர்​கள் நடித்​தா​லும் அது மக்​கள் மன​தில் நிற்க வேண்​டும் என்று நினைக்​கி​றேன்.​
நான்கு மாதங்​கள் வரை தொடர்​கள் நடிக்க வேண்​டாம் என்று முடிவு செய்​தி​ருந்​தேன்.​ அந்த நேரத்​தில்​தான் டைரக்​டர் விஸ்​வ​நா​தன் "வாடகை வீடு' தொட​ரைப் பற்றி சொன்​னார்.​ அது இரண்டு நாய​கி​கள் கதை.​ இருந்​தா​லும் இரண்டு பேருக்​குமே முக்​கி​யத்​து​வம் உள்ள கதை.​ அந்த ஸ்கி​ரிப்ட் எனக்​குப் பிடித்​தி​ருந்​தது.​
சந்​தோ​ஷி​யும் நானும் நடிக்​கி​றோம்.​ வாடகை வீட்​டில் குடி​யி​ருப்​ப​வர்​க​ளின் சொந்த வீடு பற்​றிய கன​வு​ம் அதற்​காக அவர்​கள் சந்​திக்​கும் பிரச்​னை​யும்​தான் கதை.​ அது ஒரு காமெடி தொடர்.​ இதில் நான் ஒரு மிடில் கிளாஸ் குடும்​பத்தைச் சார்ந்த பெண்​ணாக நடிக்​கி​றேன்.​ என் கேரக்​டர் பெயர் பூஜா.​ ​
* இன்​றைய ​ சின்​னத்​தி​ரை​யில் நடிப்​ப​தற்கு நிறைய பெண்​கள் வந்​து​விட்​டார்​கள்.​ அது உங்​க​ளுக்​குப் போட்​டி​யாக இருக்​கும் என்று நினைக்​கி​றீர்​களா?​​
அப்​படி யாரை​யும் நான் போட்​டி​யாக ​ நினைப்​ப​தில்லை.​ இது ​ போன்று நிறைய புது​மு​கங்​கள் ​ வரும்பொழுது அது ஒரு ​ ஆராக்​கி​ய​மான போட்​டி​யாக ​ தான் இருக்​கும்.​ என் திறமை ​ மீது எனக்கு நிறைய ​ நம்​பிக்கை இருக்​கி​றது.​ இந்த மாதிரி ஆரோக்​கிய போட்​டி​கள் வரும்​போ​து​தான்,​திற​மை​கள் வெளியே தெரி​யும்.​ அதுவே தங்​களை இந்த பீல்​டில் தக்க வைத்​துக் கொள்ள ஒரு முயற்​சி​யாக இருக்​கும்.​ ​
* பெரி​ய ​தி​ரை​யில் ​ நடிப்​ப​தற்குச் சின்​னத்​திரை நடி​கை​கள் விரும்​பு​வ​தில்​லையே?​ ஏன் நீங்​க​ளும் சின்ன சின்ன கதா​பாத்​தி​ரத்​தில்​தான் வரு​கி​றீர்​கள் அதைப் பற்றி என்ன நினைக்​கி​றீர்​கள்?​ ​
பெரி​ய ​தி​ரை​யில் ​ நீடிக்க வேண்​டும் ​ என்​றால் கொஞ்​சம் கிளா​ம​ரா​க​வும் நடிக்க வேண்​டும்.​ கிளா​ம​ரா​க​வும் ரொமான்​ஸô​க​வும் நடித்​தால்​தான் மக்​கள் ஏற்​றுக்​கொள்​கி​றார்​கள்.​ இது தவிர்க்க முடி​யா​தது.​ ஒரு படத்​தில் இரண்​டா​வது நாய​கி​யாக நடித்​து​விட்​டால் அதற்குப் பிறகு சில வரை​மு​றை​களைக் கடை​ப்பி​டிக்க வேண்​டி​யி​ருக்​கி​றது.​ என்​னு​டைய லிமிட்டுக்​குள்ள வரு​கிற படங்​க​ளில் மட்​டுமே நான் நடிக்​கி​றேன்.​ அப்​படி என்​னு​டைய லிமிட்டைத் தாண்டி நடித்​தால் எனக்​கும் ​ நிறைய வாய்ப்​பு​கள் வரும்.​ இப்​போது தங்கை கேரக்​டர்​கள் நடித்​துக் கொண்​டி​ருக்​கி​றேன்.​ ​
* நீங்​கள் டைரக்ட் செய்ய ​ போகி​றீர்​க​ளாமே?​​
உண் ​மை​யைச் சொல்ல வேண்​டு​மென்​றால் ஒரு ​ நடி​கை​யாக ஜெயிப்​ப​தற்கே நிறைய போராட வேண்​டி​யி​ருக்​கி​றது.​ எத்​தனையோ பிரச்​னை​களைச் சந்​திக்க வேண்​டி​யி​ருக்​கி​றது.​ இதை​யெல்​லாம் தாண்டி வந்​தால் தான் ஜெயிக்க முடி​யும்.​ அதுபோல ஒரு டைரக்​டர் ஆவது சுல​ப​மல்ல.​ நிறைய பொறுப்​பு​களைச் சுமக்க வேண்​டி​யி​ருக்​கும்.​ அப்​படி நான் டைரக்​ஷ​னில் இறங்​கி​னால் எப்​படி நடி​கர், நடி​கை​களை வேலை வாங்​கு​வ​தில் இருந்து மற்ற எல்​லா​வற்​றை​யும் தெரிந்து கொண்டு,​​ கற்​றுக் கொண்​டு​தான் வரு​வேன்.​ ​
* உங்​கள் வருங்​கால திட்​டம் என்ன?​​
எந் ​தத் துறை​யாக இருந்​தா​லும் நல்ல பேர் வாங்​கு​வ​தற்​கும்,​​ ஒரு நல்ல இடத்​திற்கு வரு​வ​தற்​கும் ​ நிறைய உழைக்க வேண்​டி​யி​ருக்​கும்.​ ஆனால் சினி​மாவைப் பொருத்​த​வரை அது ரொம்ப ஈசி.​ இப்​போ​தைக்கு எனக்கு நல்ல நடிகை என்று பெயர் இருக்​கி​றது.​ அதை கடை​சி​வரை காப்​பாற்ற வேண்​டும் என்று நினைக்​கி​றேன்.​ மக்​கள் என்னை அவர்​கள் குடும்​பத்​தில் ஒருத்​தி​யாக நினைக்​கி​றார்​கள் அதை தக்கவைத்துக் கொள்​வ​து​தான் இப்​போ​தைய பிளான்.​ ​
* நடிப்பைத் ​ தவிர வேறு எந்த துறை​யில் ஆர்​வம் இருக்கு?​​
நடிப்பைத் ​ தவிர பெரி​ய ​தி​ரை​யில் நாய​கிக்கு ​ டப்​பிங் குரல் கொடுக்​கி​றேன்.​ ​ சினி​மா​வில் நடிக்க வந்​த​தில் இருந்து டப்​பிங் பேசிக் கொண்​டி​ருக்​கி​றேன்.​ இதை தவிர ஹலோ ஒன் எப் எம் ரேடி​யோ​வில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்​கி​றேன்.​ ரேடி​யோ​வி​லும் ​ நிறைய ரசி​கர்​கள் இருக்​கி​றார்​கள்.​ அது எனக்கு ரொம்ப சந்​தோ​ஷ​மாக இருக்​கி​றது.​ ​
* உங்​கள் ​ திரு​ம​ணம் எப்​போது?​ காதல் திரு​ம​ண​மாக ​ இருக்​குமா?​​
கல் ​யா​ணம் என் வாழ்க்​கை​யில் ஒரு திருப்​ப​மாக இருக்​கும்.​ நான் காத​லித்​தா​லும் இல்லை என்​றா​லும் அது என் பெற்​றோர்​கள் சம்​ம​தத்​து​டன் நடக்​கும்.​ காதல் திரு​ம​ணம் செய்து கொள்​ப​வர்​கள் சந்​திக்​கும் நிறைய பிரச்​னை​களை நான் பார்த்​தி​ருக்​கி​றேன்.​ பெற்​ற​வர்​கள் வாழ்த்​துக்​க​ளோட நடக்​கிற திரு​ம​ணம்​தான் சந்​தோ​ஷ​மா​ன​தாக இருக்​கும்.​ என் திரு​ம​ணம் என் அப்பா அம்​மா​வின் விருப்​ப​ப​டி​தான் இருக்​கும். அந்த பொறுப்பை அவர்​க​ளி​டமே ஒப்​ப​டைத்​து​விட்​டேன்.​ திரு​ம​ணத்​திற்குப் பிறகு நடிப்​ப​தில் எனக்கு விருப்​ப​மில்லை.​

நடிப்பதில் ஆர்வம் இல்லை! - ஷில்பா



விஜய் டிவி​யில் நிகழ்ச்சி தொகுப்​பா​ளி​னி​யாக கொஞ்​சும் தமி​ழில் பேசி மக்​கள் மன​தில் இடம் பிடித்​த​வர் ஷில்பா.​ "நம் வீட்டு கல்​யா​ணம்' நிகழ்ச்​சி​யின் படப்​பி​டிப்பு தளத்​தில் அவ​ரைச் சந்​தித்​தோம்.​ நம்​மி​ட​மும் கொஞ்​சும் தமி​ழில் பேசி​னார்.​ இனி அவ​ரு​டன்..​
* உங்​க​ளைப் பற்றி சொல்​லுங்​கள்?​​
எனக்கு பூர்​வீ​கம் கேரளா.​ நான் ஆங்​கில இலக்​கி​யம் படித்​தி​ருக்​கி​றேன்.​ ஐந்து வரு​ட​மாக இந்​துஸ்​தானி மியூ​சிக் கற்று வரு​கி​றேன்.​ என் தங்கை என்​ஜி​னீ​ய​ரிங் படிக்​கி​றாள்.​ எங்​க​ளு​டை​யது சிறிய அன்​பான குடும்​பம்.​ ​
* தற்​போது என்​னென்ன நிகழ்ச்​சி​கள் தொகுத்து வழங்​கு​கி​றீர்​கள்?​​
"நம் வீட்டு கல்​யா​ணம்' நிகழ்ச்​சியை ஒன்​றரை வரு​ட​மாக தொகுத்து வழங்​கிக் கொண்​டி​ருக்​கி​றேன்.​ அதைத்​த​விர டிவி நிகழ்ச்​சி​க​ளைத் தொகுத்து வழங்​கு​கி​றேன்.​ தற்​போது விஜய் டிவி​யில் புதி​ய​தாக தொடங்​கி​யி​ருக்​கும் "சினிமா சினிமா' நிகழ்ச்​சி​யின் தொகுப்​பா​ளி​னி​யா​க​வும் இருக்​கி​றேன்.​
* பிர​ப​லங்​க​ளின் திரு​ம​ணத்தை "நம் வீட்டு கல்​யா​ணம்' நிகழ்ச்சி மூலம் தொகுத்து வழங்​கும் அனு​ப​வம் பற்றி சொல்​லுங்​கள்?​​
புது ​மை​யான அனு​ப​வம்.​ பிர​ப​லங்​க​ளின் திரு​ம​ணத்தை நேரில் சென்று பார்க்க முடி​யா​த​வர்​கள் தங்​கள் வீட்​டில் இருந்தே அவர்​க​ளு​டைய சடங்​கு​கள்,​​ சம்​பி​ர​தா​யங்​க​ளைப் பார்ப்​பது ​ நன்​றாக இருக்​கி​றது.​ அதைத் தவிர திரு​ம​ணத்​தில் கலந்து கொள்​ளும் பிர​ப​லங்​க​ளைப் பார்க்​கும் வாய்ப்​பும் கிடைக்​கி​றது.​ இந்​தக் கான்​சப்ட்டே ரொம்ப புது​மை​யா​னது.​ மக்​க​ளி​டம் நிறைய வர​வேற்பு இருக்​கி​றது.​
* தொடர்​க​ளில் ஏன் நீங்​கள் நடிக்​க​வில்லை?​​
தொடர்​க​ளில் நடிக்க நிறைய வாய்ப்​பு​கள் வரு​கின்​றன.​ ஆனால் நடிப்​ப​தில் எனக்கு அவ்​வ​ளவு ஆர்​வம் இல்லை.​ ​
* நிகழ்ச்சி தொகுப்​பா​ளினி தவிர வேறு எதில் கவ​னம் செலுத்​து​கி​றீர்​கள்?​​
ஸ்டேஜ் ஷோக்​க​ளில் இந்​துஸ்​தானி இசை​யில் பாடல்​கள் பாடு​கி​றேன்.​ பாட்டு தான் ரொம்ப பிடித்​தி​ருக்​கி​றது.​ இப்​போ​தைக்கு முழுக்க முழுக்க இந்​துஸ்​தானி இசை பாடல்​க​ளில்​தான் கவ​னம் செலுத்​து​கி​றேன்.​ ​
* பின்​னணி பாடகி ஆவ​தற்கு ஏதும் முயற்சி செய்​கி​றீர்​களா?​​
கன் ​ன​டப் படம் ஒன்​றில் ஒரு பாடல் பாடி​யி​ருக்​கி​றேன்.​ தமி​ழில் பாடு​வ​தற்​கான முயற்​சி​கள் செய்து வரு​கி​றேன்.​ அதற்​காக இசை​ய​மைப்​பா​ளர்​க​ளி​டம் டெமோ சிடி​கள் கொடுத்து வரு​கி​றேன்.​ ​
* இந்​துஸ்​தானி இசை​யைத் தேர்​தெ​டுத்​தது ஏன்?​​
என் குர​லுக்கு இந்​துஸ்​தானி இசை பொருத்​த​மாக இருக்​கி​றது.​ சிறு​வ​ய​தில் கர்​நா​டக இசை கொஞ்​சம் கற்​றுக்​கொண்​டேன்.​ மேற்​கத்​திய மற்​றும் இந்​துஸ்​தானி இசை பிடித்​த​மா​னவை.​ எனவே அவற்றை விரும்பி கற்​றுக்​கொண்​டேன்.​ பொது​வா​கவே எனக்கு ​ மெலோ​டி​யான இசை​யைக் கேட்க ரொம்ப பிடிக்​கும்.​
* நிகழ்ச்​சி​க​ளின் மூலம் மக்​க​ளி​டம் நேர​டி​யாக தொடர்பு கொண்டு பேசும் அனு​ப​வம் ​ ​ பற்றி சொல்​லுங்​கள்?​​
மக் ​களை நேர​டி​யாக தொடர்பு கொண்டு பேசு​வ​தால்,​​ ​ நிதா​ன​மா​க​வும்,​​ கவ​ன​மா​க​வும் பேச​வேண்​டி​யுள்​ளது.​ ஏதா​வது தவ​றாகி போனா​லும் திருத்​திக் கொள்ள முடி​யாது.​ மக்​கள் நம்மை நேர​டி​யாக திட்​டி​வி​டு​வார்​கள்.​ அத​னால் மிக கவ​னத்​து​டன் பேச வேண்​டும்.​ சிர​மங்​க​ளுக்கு ஆண்,​பெண் என்ற வேறு​பாடு தெரி​யாது.​ பிற துறை​க​ளில் உள்ள சிர​மங்​கள் இத்​து​றை​யி​லும் இருக்​கின்​றன.​
* உங்​க​ளைப்​பற்றி ரசி​கர்​கள் என்ன சொல்​லு​கி​றார்​கள்?​​
நிகழ்ச் ​சி​யைத் தொகுத்து வழங்​கும்​போது என் உச்​ச​ரிப்பு நன்​றாக இருக்​கி​றது எனச் சொல்​லு​கி​றார்​கள்.​ மேலும்,​​ நளி​ன​மா​கப் பேசு​வ​தா​க​வும் சொல்​லு​கி​றார்​கள்.​ ​ இப்​படி மக்​கள் நம்​மி​டம் நேர​டி​யாக சொல்​லும்​போது ரொம்ப சந்​தோ​ஷ​மாக இருக்​கி​றது.​ ​ இதை எனக்கு கிடைக்​கும் பரி​சாக நினைக்​கி​றேன்.​

தங்கம் தந்த தங்கை!



சன் டிவியில் இரவு 8.30 மணிக்கு
பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும்
"தங்கம்' தொடரில் ரம்யாவின்
தங்கையாக வந்து எல்லோர் மனதிலும்
இடம் பிடித்த ஜோதியை அத் தொடரின்
படப்பிடிப்பு தளத்தில் சந்தித்தோம்.
சின்னத்திரையில் நடிக்க வந்தது எப்படி?
நான் ஆந்திராவைச் சேர்ந்த தெலுங்கு பெண். என்ஜினீயரிங் படித்துவிட்டு ஹைதராபாத்தில் உள்ள மல்டி நேஷனல் கம்பெனியில் வேலை பார்க்க வேண்டும் என்பதுதான் என் ஆசையாக இருந்தது. ஆனால் விதி என்னை சினிமாவில் கொண்டு வந்து விட்டுவிட்டது.
ஒருமுறை ராதிகா மேடம் "தாலிபிரமா' என்கிற தெலுங்கு தொடருக்காக மேக் - அப் டெஸ்ட் எடுத்துக்கிட்டு இருந்தார்கள் என்று கேள்விப்பட்டு என் பெற்றோர்கள் சம்மதத்துடன் போய் பார்த்தேன்.
அந்தத் தொடரில் எனக்கு நிரோஷாவோட மகளாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ராடான் மீடியாவில்தான் நான் முதன் முதலில் நடித்தேன். இப்படி தான் என் சின்னத்திரை பயணம் தொடங்கியது. படிப்பை விட்டுவிட்டு நடிகையாக வருவேன் என்று நான் நினைத்து கூட பார்த்ததில்லை.
முதல் தொடரே எனக்கு ஆந்திராவில் நல்ல பெயரைக் கொடுத்தது. அதன் பிறகு ஹன்ஷா விஷன் தயாரித்த தொடரில் வாய்ப்பு கிடைத்தது. அதை தொடர்ந்து ஏ.வி.எம்.மின் "சொர்க்கம்' தொடர் மூலமாக தான் முதன் முதலில் தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்போழுது நிறைய தமிழ் தொடர்களில் நடித்து வருகிறேன்.
தற்போது என்ன தொடர்களில் நடித்து
வருகிறீர்கள்?
தங்கம் தொடரில் ரம்யாகிருஷ்ணன் தங்கையாக நடித்து வருகிறேன். அவங்களைப் போல பெரிய ஹீரோயின்கூட நடிப்பது ரொம்ப சந்தோஷமா இருக்கு. அதை அடுத்து கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ஏ.வி.எம்.மின் "உறவுக்கு கை கொடுப்போம்' என்கிற தொடரில் நடித்து கொண்டிருக்கிறேன்.
ஒரே நேரத்தில் தமிழ்,தெலுங்கு இரண்டிலும் நடிப்பது கஷ்டமாக இல்லையா எப்படி நேரம் கிடைக்கிறது?
தெலுங்கு எனது தாய் மொழி என்பதால் அதில் நடிப்பதில் எனக்கு அவ்வளவு பெரிய சிரமம் ஒன்றும் தெரியவில்லை. தமிழில் நடிக்க வந்த புதிதில் எனக்குத் தமிழே தெரியாது. எங்கே எப்படி பேச வேண்டும் என்று தெரியாது. இப்போது கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழ் கற்றுக் கொண்டிருக்கிறேன். இப்போது நான் ரொம்ப நன்றாகவே தமிழ் பேசுவதாக எல்லோரும் சொல்கிறார்கள்.
எனக்கு தமிழ் இன்டஸ்ட்ரி ரொம்ப பிடித்திருக்கிறது. நிறைய தமிழ் தொடர்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசையிருக்கிறது. தமிழ் மக்கள் மரியாதையாகப் பழகுகிறார்கள். "தங்கம்' தொடருக்குப் பிறகு நிறைய தமிழ் மக்களிடம் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.
தெலுங்கில் இரண்டு தொடர்கள் நடித்துக் கொண்டிருக்கிறேன். தமிழில் முன்று தொடர்கள் நடிக்கிறேன். இரண்டு மொழிகளிலும் நடிப்பது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
சென்னைக்கும், ஆந்திராவுக்கும் மாறி மாறி போய் வரும் போது சில நேரங்களில் நான் சென்னையில் இருக்கிறேனா அல்லது ஆந்திராவில் இருக்கிறேனா என்று குழப்பமாக இருக்கும். இரண்டு மொழியிலும் நடிப்பதில் என்ன கஷ்டம் வந்தாலும் அதை எதிர்த்து போராடி பெரிய இடத்துக்கு வர வேண்டும். சாதிக்க வேண்டும் என்கிற எண்ணம் நிறைய இருக்கிறது.
பெரியதிரைக்குச் செல்லும் எண்ணம் உண்டா?
நல்ல கம்பெனி, பெரிய டைரக்டர், நல்ல ஹீரோ இந்த மாதிரி வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன். பெரிய திரையில் இருந்து நிறைய வாய்ப்புகள் வருகின்றன. வருகிற வாய்ப்புகள் எல்லாம் கிளாமர் ரோலாகவே வருவதால் எனக்கு நடிக்க விருப்பமில்லை. கதையை ஒட்டி கிளாமராக இருந்தால் பரவாயில்லை.
ஒருமுறை கிளாமராக நடித்து விட்டால் அதை தொடர்ந்து அது போன்ற வாய்ப்புகள்தான் அமையும் என்பதால் நல்ல வாய்ப்பு வரும் போது நடிப்பேன். இப்போதைக்கு சின்னத்திரையில் மட்டும்தான் கவனம் செலுத்தி
வருகிறேன்.
உங்களுக்கு என்ன மாதிரி கேரக்டர்கள் நடிக்க பிடிக்கும்?
எனக்கு ஹோம்லியான கேரக்டர் நடிக்க ரொம்ப பிடிக்கும். கிராமத்துப் பொண்ணா நடிக்க பிடிக்கும். எந்த மாதிரி கேரக்டர் ஒத்து வருமோ அது மாதிரி நடிக்க வேண்டும். இப்பொழுது நடித்து கொண்டிருக்கிற தொடர்களும் என் எண்ணம் போலவே கிடைத்திருக்கின்றன. இப்படி ஒவ்வொரு தொடரில் வேறு வேறு மாதிரி நடிப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நெகட்டீவ் ரோல்ஸ் நடிக்க வேண்டும் என்ற ஆசையிருக்கிறது.
ரசிகர்களைச் சந்தித்தது உண்டா, என்ன சொல்லுவார்கள்?
ஆந்திராவில் உள்ள மக்களுக்கு என்னை நன்றாக அடையாளம் தெரியும். பொது இடங்களில் அல்லது ஷாப்பிங் போகும் போது எங்காவது பார்த்து விட்டால் என் பக்கத்தில் வந்து பேசுவார்கள், நலம் விசாரிப்பார்கள், என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள் நான் நடிக்கும் தொடர்களைப் பற்றி விமர்சிப்பார்கள்.
இப்படி அவர்கள் என் மீது அன்பு செலுத்தும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும். அதே போல் தங்கம் தொடரில் நடிக்க ஆரம்பித்த பிறகு தமிழ் மக்களிடம் இருந்தும் நல்ல வரவேற்பு இருக்கிறது.

Thursday, January 14, 2010

நா‌லு நா‌ள்‌ சூ‌ட்‌டி‌ங்‌
மகா‌பலி‌பு‌ரமே‌ களை‌க்‌கட்‌டி‌வி‌ட்‌டது
-சந்‌தி‌ரா‌ லக்‌ஷ்‌மண்‌
ஜெ‌யா‌ டி‌வி‌யி‌ல்‌ சி‌வபக்‌த்‌தை‌யா‌கவு‌ம்‌, சன்‌டி‌வி‌யி‌ல்‌ குழந்‌தை‌யை‌ தொ‌லை‌த்‌துவி‌ட்‌டு தே‌டும்‌ தா‌யா‌கவு‌ம்‌ அந்‌தந்‌த கதா‌பா‌த்‌தி‌ரத்‌தி‌ற்‌கு ஏற்‌றா‌ற்‌ போ‌ல்‌ தன்‌னை‌ மா‌ற்‌றி‌க்‌கொ‌ள்‌ளும்‌ சந்‌தி‌ரா‌ லக்ஷ்‌‌மனை‌ மலை‌யா‌ள மணம்‌ கமழும்‌அவரது இல்‌லத்‌தி‌ல்‌ சந்‌தி‌த்‌தோ‌ம்‌‌. சூ‌ட்‌டி‌ங்‌ இல்‌லை‌யா‌ ‌ என்‌றதும்‌ பள்‌ளி‌க்‌ குழந்‌தை‌களை‌ப்‌ போ‌ல்‌ ரெ‌ண்‌டு நா‌ள்‌ பி‌ரே‌க்‌ என்‌று உற்‌சா‌கத்‌தோ‌டு சொ‌ல்‌லி‌வி‌ட்‌டு நம்‌மோ‌டு ஜா‌லி‌யா‌க பே‌சி‌னா‌ர்‌…
முதல்‌ல உங்‌களை‌ப்‌ பற்‌றி‌ செ‌ல்‌லுங்‌க? எப்‌படி‌ இந்‌த பி‌ல்‌டுக்‌கு வந்‌தீ‌ங்‌க?
நா‌ன்‌ ஒரு கே‌ரளா‌ பி‌ரமணப்‌பெ‌ண்.‌ ‌ ஓட்‌டல்‌ மே‌னே‌ஜ்‌மண்‌ட்‌ படி‌ச்‌சி‌ருக்‌கே‌ன்‌ தி‌ரை‌த்‌துறை‌க்‌கு வந்‌து பத்‌து வருடங்‌கள்‌ ஆகி‌றது. ஆரம்‌பத்‌தி‌ல்‌ மலை‌யா‌ள படங்‌கள்‌ , தொ‌டர்‌கள்‌ நடி‌த்‌துக்‌கொ‌ண்‌டி‌ருந்‌தே‌ன்‌. ஒரு மூ‌ன்‌று வருடங்‌களா‌க தமி‌ழ்‌ இன்‌டஸ்‌ட்‌ரி‌யி‌ல்‌ நடி‌த்‌துக்‌ கொ‌ண்‌டி‌ருக்‌கி‌றே‌ன்‌.எங்‌க அப்‌பா‌ இந்‌துஸ்‌தா‌ன்‌ லீ‌வரி‌ல்‌ ஓர்‌க்‌ பண்ணி‌னா‌ர்‌,அம்‌மா‌ பே‌ங்‌க்‌ல ஓர்‌க்‌ பண்‌றா‌ங்‌க.என்‌னோ‌ட கூட பி‌றந்‌தவங்‌க யா‌ரும்‌ இல்‌லை‌ நா‌ன்‌ ஒரே‌ பெ‌ண்‌. பரதநா‌ட்‌டி‌யம்‌ இரண்‌டரை‌ வயதி‌ல்‌ இருந்‌து கற்‌றுக்‌கொ‌ண்‌டடே‌ன்‌.
எல்‌லா‌ரும்‌ சொ‌ல்‌லுவது மா‌தி‌ரி‌ தா‌ன்‌ ஆக்‌ஸி‌டன்‌ட்‌டா‌ நா‌னும்‌ வந்‌தே‌ன்‌. ஓட்‌டல்‌ மெ‌னே‌ஜ்‌மண்‌ட் ‌படி‌க்‌கும்‌ போ‌து ஆறு மா‌தம்‌ ஏதா‌வது ஒரு ஓட்‌டல்‌ல டி‌ரை‌னீ‌ங்‌ போ‌டுவா‌ங்‌க. அந்‌த மா‌தி‌ரி‌ எனக்‌கு பா‌ர்‌க்‌ ஷர்‌டன்‌ ஓட்‌டல்‌ போ‌ட்‌டா‌ங்‌க. அங்‌கே‌ நி‌றை‌ய சி‌னி‌மா‌ ஆட்‌கள்‌ வருவா‌ங்‌க. அதி‌ல்‌ யா‌ரோ‌ என்‌னை‌ பா‌ர்‌த்‌து வி‌ட்‌டு சி‌னி‌மா‌வு‌க்‌கு அழை‌த்‌தா‌ர்‌கள்‌. அதற்‌கு முன்‌னா‌டி‌யே‌ ஒரு முறை‌ நண்‌பர்‌களோ‌ட ஒய்‌.எம்‌.சி‌.ஏ போ‌ய்‌ இருந்தோ‌ம்‌ அங்‌கே‌ “ஏப்‌ரல்‌ மா‌தத்‌தி‌ல்”‌ சூ‌ட்‌டி‌ங்‌ நடந்‌தது அப்‌போ‌ அந்‌த இடத்‌தி‌ல்‌ என்‌னை‌ பா‌ர்‌த்‌துவி‌ட்‌டு நடி‌க்‌க கே‌ட்‌டா‌ங்‌க எனக்‌கு டி‌ரை‌னீ‌ங்‌ போ‌ய்‌கி‌ட்‌டு இருந்‌தா‌ல முடி‌யா‌துன்‌னு சொ‌ல்‌லி‌ட்‌டே‌ன்‌.‌ எல்‌லா‌ரும்‌ ரொ‌ம்‌ப கம்‌பல்‌ பண்‌ணதா‌ல ரெ‌ண்‌டு ஷா‌ட்‌ ஸ்ரீகா‌ந்‌த்‌ கா‌ம்‌பி‌னே‌ஷன்‌ல நடி‌த்‌தே‌ன்‌‌. அதுக்‌குபி‌றகு கா‌ண்‌டி‌னி‌யூ‌ பண்‌ணல. ஸ்‌டே‌ன்‌லி‌ சா‌ர்‌ இப்‌போ‌ ரி‌சன்‌ட்‌டா‌ பா‌ர்‌த்‌தப்‌போ‌ கூட கே‌ட்‌டா‌ர்‌ சி‌னி‌மா‌வு‌க்‌கு வரமா‌ட்‌டே‌ன்‌னு சொ‌ல்‌லி‌ட்‌டு இப்‌போ‌ பா‌ருங்‌க அதே‌ பீ‌ல்‌டுக்‌கு தா‌ன்‌ வந்‌தி‌ருக்கே‌ன்‌னு. “மனசெ‌ல்‌லா‌ம்”‌ படத்‌துக்‌கு கூப்‌பி‌ட்‌டப்‌போ‌ தா‌ன்‌ நி‌னை‌த்‌தே‌ன்‌ நமக்‌கு நடி‌கை‌யா‌கனும் தா‌ன்‌ தலையி‌ல்‌‌ எழுதியி‌ருக்‌கு போ‌ல என்‌று நி‌னை‌த்‌து கொ‌ண்‌டு. எனக்‌கு பி‌லி‌ம்‌ பே‌க்‌ ரவு‌ண்‌ட்‌ கி‌டை‌யா‌து. யா‌ர்‌கி‌ட்‌ட கே‌ட்‌பதுனு தெ‌ரி‌யல அதனா‌ல சா‌மி‌ முன்‌னா‌டி‌ சீ‌ட்‌டு குலுக்‌கி‌ப்‌ போ‌ட்‌டு பா‌ர்‌த்‌தோ‌ம்‌. அதி‌ல்‌ முன்‌று முறை‌யு‌ம்‌ நடி‌கை‌ன்‌னு தா‌ன்‌ வந்‌தது. பி‌றகு தா‌ன்‌ இந்‌த பீ‌ல்‌டுக்‌கு வந்‌தே‌ன்‌.

ஜெ‌யா‌ டி‌வி‌யி‌ல்‌ வருகி‌ற “பூ‌வு‌ம்‌ பொ‌ட்‌டும்‌” தொ‌டரி‌ல்‌ என்‌ன மா‌தி‌ரி‌யா‌ன கே‌ரக்‌டர்‌?
“பூ‌வு‌ம்‌ பொ‌ட்‌டும்”‌ தொ‌டரி‌ல்‌ சி‌வபக்‌ததை‌யா‌க பக்‌தசி‌ரோ‌ன்‌மணி‌யா‌க நடி‌க்‌கி‌றே‌ன்‌. அச்‌சா‌ரமா‌ன தமி‌ழ்‌ப்‌ பெ‌ண்‌ணா‌க வருவே‌ன்‌. பெ‌ரி‌ய பெ‌ரி‌ய குங்‌குமப்‌ பொ‌ட்‌டு வை‌த்‌துக்‌கொ‌ண்‌டு தழை‌ய தழை‌யே ஜடை‌ப்‌ போ‌ட்‌டுக்‌ கொ‌ண்‌டு வருவது போ‌ல்‌ இருக்‌கும்‌.

“வசந்‌தம்”‌ தொ‌டரி‌ல் குழந்‌தை‌யை‌ தொ‌லை‌த்‌துவி‌ட்‌டு தே‌டும்‌போ‌து உங்‌கள்‌ மனநி‌லை‌ எப்‌படி‌ யி‌ருந்‌தது?
இது வரை‌துறுதுறுவெ‌ன்‌று வருவது போ‌லவு‌ம்‌ போ‌ல்‌டா‌க வருவது போ‌லவு‌ம்‌ யங்‌ கே‌ரக்‌டர்‌ தா‌ன் நடி‌த்‌துக்‌கொ‌ண்‌டி‌ருந்‌தே‌ன்‌.‌ “வசந்‌தம்”‌ தா‌ன்‌ என்‌ முதல்‌ மெ‌ச்‌சூ‌ரா‌ன‌ ரோ‌ல்‌.எல்‌லா‌வி‌தமா‌ன தி‌யா‌கமும்‌ சகி‌த்‌துக் கொ‌ள்‌ளும்‌ கே‌ரக்‌டர்‌.குழந்‌தை‌யை‌ தொ‌லை‌த்‌துவி‌ட்‌டு தே‌டும்‌ அந்‌த கா‌ட்‌சி‌களி‌ல்‌ எல்‌லா‌ம்‌ ஒரு தா‌யி‌ன்‌ வலி‌யை‌ உணர்‌ந்‌தே‌ன்‌‌. நி‌றை‌ய பே‌ர்‌ எனக்‌கு போ‌ன்‌ செ‌ய்‌து பா‌ரா‌ட்‌டி‌னா‌ங்‌க. அந்த‌ சீ‌ன்‌ ரொ‌ம்‌ப நல்‌லா‌ செ‌ய்‌தி‌ருந்‌தீ‌ங்‌கன்‌னு சொ‌ன்‌னா‌ங்‌க.
“கா‌தலி‌க்‌க நே‌ரமி‌ல்‌லை”‌ தொ‌டர்‌ ஏன்‌ பா‌தி‌யி‌ல்‌ நி‌ன்‌றுவிட்‌டது? அதி‌ல்‌ உங்‌கள்‌ நடி‌ப்‌பு‌ பி‌ரமா‌தமா‌க இருந்‌தே‌? சி‌ங்‌கப்‌பூ‌ரி‌ல்‌ நடந்‌த மறக்‌க முடி‌யா‌த அனுபவம்‌ என்‌ன?
பா‌தி‌யி‌ல்‌ நி‌ற்‌கவி‌ல்‌லை‌. பி‌ரஜனோ‌ட என்‌னோ‌ட டி‌ரா‌க்‌ மட்‌டும்‌ நி‌ன்‌றுவி‌ட்‌டது. கதை‌ மா‌றி‌போ‌னதுனா‌ல வி‌ரை‌வா‌க முடி‌த்‌துவி‌ட்‌டா‌ர்‌கள்‌.இப்‌போ‌ கூட நி‌றை‌ய பே‌ர்‌ என்‌னி‌டம்‌ கா‌தலி‌க்‌க நே‌ரமி‌ல்‌லை‌ தொ‌டர்‌ பற்‌றி‌தா‌ன்‌ ரொ‌ம்‌ப வி‌சா‌ரி‌ப்‌பா‌ர்‌கள்‌. அந்‌த தொ‌டரி‌ன்‌ டை‌ட்‌டி‌ல்‌ சா‌ங்‌ பற்‌றி‌ நி‌றை‌ய சொ‌ல்வா‌ர்‌கள்‌. அது ஒரு படத்‌தி‌ன்‌ பா‌டலுக்‌கு இணை‌யா‌க இருந்‌தது. இன்‌னமும்‌ நி‌றை‌ய பே‌ர்‌ அந்‌த டை‌ட்‌டி‌ல்‌ சா‌ங்‌கை‌ தா‌ன்‌ செ‌ல்‌போ‌ன்‌னி‌ல்‌ கா‌லர்‌ டி‌யு‌ன்‌னா‌க வை‌த்‌துக்‌கொ‌ண்‌டு இருக்‌கி‌றா‌ர்‌கள்‌. ஒரு தொ‌டருக்‌கா‌க சி‌ங்‌கப்‌பூ‌ர்‌ வரை‌ போ‌னதே‌ மறக்‌க முடி‌யா‌த அனுபவம்‌ தா‌ன்‌. அந்‌த தொ‌டருக்‌கா‌க என்‌சொ‌ந்‌த குரலி‌ல்‌ டப்‌ செ‌ய்‌ததும்‌, முதன்‌ முறை‌யா‌ என்‌குரலை‌ ஸ்‌கீ‌ரி‌ன்‌ல கே‌ட்‌டதும்‌ மறக்‌கவே‌ முடி‌யா‌து.
நா‌ங்‌கள்‌ கே‌ரளா‌வி‌ல்‌‌ இருந்‌த தமி‌ழ்‌ பி‌ரா‌மி‌ன்‌‌ என்‌பதா‌ல “மை‌க்‌கே‌ல்‌ மதன கா‌மரா‌ஜன்”‌ படத்‌தி‌ல் வருகி‌ற‌ கமல்‌ போ‌ல தா‌ன்‌ வீ‌ட்‌டி‌ல்‌ தமி‌ழி‌ல்‌ பே‌சி‌க்‌கொ‌ள்‌வோ‌ம்‌. எப்‌பவு‌மே‌ ஆத்‌துக்‌கு போ‌றே‌ன்‌, போய்‌ன்‌றி‌ருக்‌கே‌ன்‌.இப்‌படி‌ தா‌ன்‌ வரும்‌ ஆனா‌ல்‌ அந்‌த தொ‌டரி‌ல்‌ தே‌‌வர்‌ பொ‌ண்‌ணு கே‌ரக்‌டர்‌. அந்‌த சா‌லங்‌கே‌ வே‌ற மா‌தி‌ரி‌ இருக்‌கனும்‌. அடி‌க்‌கடி‌ பே‌சும்‌ போ‌து என்‌ தமி‌ழ்‌ வந்‌தி‌டும்‌. பி‌ரஜன்‌ மலை‌யா‌ளி‌ ஆனா‌ அவர்‌ மலை‌யா‌ளத்‌தை‌ வி‌ட தமி‌ழ்‌ தா‌ன்‌ நல்‌லா‌ பே‌சுவா‌ர்‌. அதே‌ மா‌தி‌ரி‌ அந்‌த தொ‌டரி‌ன்‌ டை‌ரக்‌டரும்‌ ஒரு மலை‌யா‌ளி‌ நா‌ன்‌ பே‌சும்‌ போ‌து தப்‌பு‌ வந்‌தா‌ க்‌ரை‌க்‌ட்‌டா‌ கண்‌டு பி‌டி‌ச்‌சி‌டுவா‌ர்‌. இப்‌போ‌இந்‌தளவு‌க்‌கு தமி‌ழ்‌ பே‌சுறே‌ன்‌னா‌ அது அந்‌த தொ‌டர்‌ முலமா‌ தா‌ன்‌.

மலை‌யா‌ளத்‌தி‌ல்‌ சி‌னி‌மா‌வி‌ல்‌ நடி‌த்‌துவி‌ட்‌டு‌, இங்‌கே‌ சீ‌ரி‌யலி‌ல்‌ நடிக்‌க வந்‌த போ‌து எப்‌படி‌ பீ‌ல்‌ பண்‌ணிங்‌க?‌ என்‌ன வி‌த்‌தி‌யா‌சம் உணர்‌ந்‌தீ‌ங்‌க?
மலை‌யா‌ளத்‌தி‌லும்‌ சீ‌ரி‌யல் நி‌றை‌ய‌ நடி‌த்‌தி‌ருக்‌கி‌றே‌ன்‌. அங்கே‌ ஒரு படத்தோ‌ட செ‌ட்‌டப்‌ எப்‌படி‌யி‌ருக்‌குமோ‌ அந்‌த செ‌ட்‌டப்‌ இங்‌கே‌ சீ‌ரி‌யலுக்‌கே‌ இருக்‌கும்‌. அங்‌கே‌ படத்‌தி‌ற்‌கு இருக்‌கும்‌ பி‌ரமாண்‌‌டம்‌ இங்‌கே‌ சீ‌ரி‌யல்‌ல இருக்‌கும்‌.
நி‌றை‌ய வி‌த்‌தி‌யா‌சம்‌ இருக்‌கு. ஓர்‌க்‌கி‌ங்‌ ஸ்‌டை‌ல்‌, பட்‌ஜட்‌, ஓர்‌க்‌கி‌ங்‌ டை‌ம்‌ என எல்‌லா‌த்‌துலை‌யு‌ம்‌ வி‌த்‌தி‌யா‌சம்‌ இருக்‌கும்‌. மலை‌யா‌ள, கன்‌னட இண்‌‌டஸ்‌ட்‌ரி‌ ‌ கொ‌ஞ்‌சம்‌ சி‌றி‌யது கா‌ம்‌பெ‌க்‌ட்‌டா‌ இருக்‌கும்.‌ அதே‌ சமயத்‌தி‌ல்‌ ரொ‌ம்‌ப நல்‌ல ஸ்‌டப்‌பு‌ள்‌ள‌ படங்‌களை‌ தயா‌ரி‌ப்‌பா‌ர்‌கள்‌. தமி‌ழ்‌ இண்‌‌டஸ்‌ட்‌ரி‌ பெ‌ரி‌ய இன்‌‌டஸ்‌ட்‌ரி‌ . இங்‌கே‌‌ டெ‌க்‌னீ‌க்‌கல இருந்து எல்‌லா‌வற்‌றி‌லும்‌ ரொ‌ம்‌ப அட்‌வா‌ன்‌ஸா‌ இருக்‌கும்‌. இங்‌கே‌ நி‌றை‌ய டை‌ம்‌ கி‌டை‌க்‌கும்‌. அங்‌கே‌ கா‌ல்‌ஷி‌ட்‌ எல்‌லா‌ம்‌ கி‌டை‌யா‌து. இரவு‌ ஒன்‌பதரை‌,பத்‌துவரை‌க்‌கும்‌ ஓர்‌க்‌ பண்‌ண வே‌ண்‌டி‌யி‌ருக்‌கும்‌. இங்‌கே‌ கா‌ல்‌ஷி‌ட்‌ வை‌த்‌து ஓர்‌க்‌ பண்‌றது ரொ‌ம்‌ப கா‌ம்‌பட்‌டபு‌ளா‌ இருக்‌கு.

“ஜோ‌டி‌ நம்‌பர்‌ ஒன்‌” நி‌கழ்‌ச்‌சி‌யி‌ல்‌ கலந்‌து கொ‌‌ண்‌டு பா‌தி‌யி‌ல்‌ வெ‌ளி‌யே‌றி‌ வி‌ட்‌டீ‌ர்‌களே‌ அப்‌போ‌ என்‌ன நி‌னை‌த்‌தீ‌ர்‌கள்‌?
பா‌தி‌யி‌ல்‌ வெ‌ளி‌யே‌ற வி‌ல்‌லை‌. அந்‌த நே‌ரத்‌தி‌ல்‌ எங்‌களுக்‌கு டை‌ட்‌ ஷெ‌ட்‌‌யூ‌ல்‌ போ‌ய்‌கி‌ட்‌டு இருந்‌ததா‌ல அதி‌ல்‌ கலந்‌து கொ‌ள்‌ளவே‌ ரொ‌ம்‌ப யோ‌சி‌த்‌தோ‌ம்‌. இருந்‌தா‌லும்‌ எல்‌லா‌ரும்‌ நி‌றை‌ய நம்‌பி‌க்‌கை‌ கொ‌டுத்‌தா‌ர்‌கள்‌. அப்‌போ‌ நா‌ங்‌கள்‌ தா‌ன்‌ ஹி‌ட்‌ஜோ‌டி‌யா‌க இருந்‌ததா‌ல கட்‌டா‌யமா‌க கலந்‌து கொ‌ள்‌ள வே‌ண்‌டி‌ருந்‌தது. டா‌ன்‌ஸ்‌பி‌ரா‌க்‌டி‌ஸ்‌ பண்‌ண எங்‌களுக்‌கு நே‌ரமே‌ கி‌டை‌யா‌து . முதல்‌ ரவு‌ண்‌டி‌லே‌யே‌ எளி‌மி‌னே‌ட்‌ ஆகி‌வி‌டுவோ‌ம்‌ என்‌று நி‌னை‌த்‌தோ‌ம்‌. இருந்‌தா‌லும்‌ டி‌ரை‌ப்‌ பண்‌ணி‌ப்‌ பா‌ர்‌க்‌கலா‌ம்‌ என்‌று தா‌ன்‌ கலந்‌து கொ‌ண்‌டோ‌ம்‌. அந்‌த சமயத்‌தி‌ல்‌ நா‌ன்‌ கே‌ரளா‌வி‌ல்‌ தா‌ன்‌ தங்‌கி‌யி‌ருந்‌தே‌ன்‌. கே‌ரளா‌வு‌க்‌கும்‌ செ‌ன்‌னை‌க்‌கும்‌ போ‌ய்‌ட்‌டு போ‌ய்‌ட்‌டு வருவது ரொ‌ம்‌ப கஷ்‌டமா‌க இருந்‌தது. நா‌ங்‌கள்‌ எதி‌ர்‌பா‌ர்‌த்‌த மா‌தி‌ரி‌ வெ‌ளி‌யே‌றி‌வி‌ட்‌டோ‌ம்‌.



பெ‌ரி‌யத்‌தி‌ரை‌யி‌ல்‌ வா‌ய்‌ப்‌பு‌கள்‌ வருகி‌றதா‌?
இப்‌போ‌ ரி‌சண்‌ட்‌டா‌ நி‌றை‌ய படத்‌தி‌ல்‌ இருந்‌து கூப்‌பி‌ட்‌டா‌ர்‌கள்‌. படங்‌கள்‌ நி‌றை‌ய நடி‌ப்‌பதற்‌கு ஆசை‌யி‌ருக்‌கி‌றது. ஆனா‌ல்‌ லீ‌ட்‌ ரோ‌ல்‌ தா‌ன்‌ பண்‌ணுவே‌ன்‌ கி‌டை‌யா‌து. ஒரு படத்‌தி‌ல்‌ நடி‌த்‌தா‌ல்‌ அதி‌ல்‌ என்‌னை‌ ஆடி‌யன்‌ஸ்‌ ஞா‌பகம்‌ வை‌த்‌துக்‌ கொ‌ள்‌ள வே‌ண்‌டும்‌. அந்‌த மா‌தி‌ரி‌ ரோ‌ல்‌ஸ்‌ பண்ணனும்‌.கி‌ளமர்‌ எல்‌லா‌ம்‌ ஒரளவு‌க்‌கு தா‌ன்‌பண்‌ணுவே‌ன்‌. சி‌னே‌கா‌ பண்‌றளவு‌க்‌கு தா‌ன்‌ எனக்‌கு இன்‌ட்‌ரஸ்‌ட்‌.
இப்‌போ‌ மூ‌ன்‌று படங்‌கள்‌ நடி‌த்‌துக்‌ கொ‌ண்‌டி‌ருக்‌கி‌றே‌ன்‌. ஒண்‌ணு “தி‌ல்‌லா‌லங்‌கடி”‌ அதி‌ல்‌ மூ‌வி‌‌ ஓப்‌பனி‌ங்‌கே‌ நா‌னும்‌, சத்‌தி‌யன்‌ சார்‌, தமன்‌னா‌‌ தா‌ன்‌ வருவோ‌ம்‌‌.”கி‌க்”‌ங்‌கி‌ற தெ‌லுங்‌கு படத்‌தோ‌ட ரீ‌மே‌க்‌ இது. ரொ‌ம்‌ப கா‌மடி‌யா‌ மி‌க்‌ஸ்‌டா‌இருக்கும்‌. நா‌லை‌ந்‌து நா‌ள்‌ சூ‌ட்‌டி‌ங்‌ மகா‌பலி‌பு‌ரத்‌தி‌ல்‌ இருந்‌தது மகா‌பலி‌பு‌ரமே‌ களை‌க்‌கட்‌டி‌ வி‌ட்‌டது. ரா‌ஜா‌ சா‌ர்‌ தா‌ன்‌ டை‌ரக்‌டர் பண்‌றா‌ர்‌. டை‌ரக்‌டர்‌, ஆர்‌ட்‌டி‌ஸ்‌ட்‌ன்‌னு இல்‌லா‌ம அந்த‌ டீ‌ம்‌மே‌ ரொ‌ம்‌ப ஜா‌லி‌யா‌ இருந்‌தது.
அடுத்‌தது சத்‌யஜோ‌தி‌ பி‌லி‌‌ம்‌ஸோ‌ட “டூ‌வன்‌ட்‌டி‌ டூ‌வன்‌ட்‌டி‌” நடி‌க்‌கி‌றே‌ன்‌. ஹீ‌ரோ‌வோ‌ட அக்‌கா‌வா‌ பண்‌றே‌ன்‌. அதற்‌கு அடுத்து பி‌.வா‌சு சா‌ரோ‌ட படம்‌ அது பி‌ப்‌ரவரி‌ தா‌ன்‌ ஸ்‌டா‌ர்‌ட்‌ பண்றா‌ங்‌க.

என்ன‌ மா‌தி‌ரி‌ கே‌ரக்‌டர்‌ஸ்‌ பி‌டி‌க்‌கும்‌? நடி‌க்‌க வி‌ரும்‌பு‌கி‌றீ‌ர்‌கள்‌?
ஆரம்‌பத்‌தி‌ல்‌ இருந்‌தே‌ ரொ‌ம்‌ப செ‌ல்‌க்‌டீ‌வ்‌வா‌ன கே‌ரக்‌டர்‌ஸ்‌ தா‌ன்‌ நா‌ன்‌ பண்‌றே‌ன்‌. ஒரு எக்‌ஸ்‌பி‌ரி‌மண்‌ட்‌டா‌ன கே‌ரக்‌டரா‌ இருக்‌கனும்‌. அதே‌ மா‌தி‌ரி‌ எல்‌லா‌வி‌தமா‌ன கே‌ரக்‌டரும்‌ பண்‌ணனும்‌. அப்‌போ‌ தா‌ன்‌ ஒரு ஆர்‌டி‌ஸ்‌ட்டா‌‌ கம்‌ப்‌ளி‌ட்‌‌ ஆவதா‌க அர்‌த்‌தம்‌.மலை‌யா‌ளத்‌தி‌ல்‌ என்‌ முதல்‌ படம்‌ பி‌ர்‌த்‌வி‌ரா‌ஜ்‌ கூட பண்‌ணி‌னே‌ன்‌, அதி‌ல்‌ ரொ‌ம்‌ப மெ‌ன்‌மை‌யா‌ன நன்‌ ரோ‌ல்‌ பண்‌ணி‌னே‌ன்‌. நா‌ன்‌ பெ‌ஸி‌க்‌கா‌வே‌ ரொ‌ம்‌ப ஸ்‌ஃபட்‌ என்‌பதா‌ல ரொ‌ம்‌ப கஷ்‌டமா‌ தெ‌ரி‌யவி‌ல்‌லை‌. அதை‌ தொ‌டர்‌ந்‌து உடனே‌ ஒரு சீ‌ரி‌யல்‌ல பக்‌கா‌ நெ‌கட்‌டீ‌வ்‌ ரோ‌ல்‌ வந்‌தது. அதுக்‌கு முன்‌னா‌டி‌ ரொ‌ம்‌ப மெ‌ன்‌மை‌யாபா‌ர்‌த்‌துவி‌ட்‌டு உடனே‌ அப்‌படி‌ உதா‌ரி‌த்‌தனமா‌ன ரொ‌ம்‌ப ஹா‌ர்‌டா‌ன கே‌ரக்‌டர்‌ல பா‌ர்‌க்‌கும்‌ போ‌து ரொ‌ம்‌ப ரீ‌ச்‌ ஆச்‌சு. எல்‌லா‌ரும்‌‌ அப்‌ரி‌ஷி‌யே‌ட்‌ பண்‌ணா‌ங்‌க.இன்‌னை‌க்‌கும்‌ அந்‌த கே‌ரக்‌டர்‌ பே‌ர்‌ல தா‌ன்‌ கூப்‌பி‌டுறா‌ங்‌க.
அதை‌ தொ‌டர்‌ந்‌து சை‌க்‌கோ‌வா‌ பண்‌ணி‌னே‌ன்‌.சி‌னி‌மா‌ சீ‌ரி‌யல்‌ன்‌னு வி‌த்‌ததி‌யா‌சம்‌ எதுவு‌ம்‌ நா‌ன்‌ பா‌ர்‌க்‌கவி‌ல்‌லை‌. என்‌ன கே‌ரக்‌டர்‌ பண்‌றே‌ன்‌ என்‌பது தா‌ன்‌ முக்‌கி‌யம்‌. அதனா‌ல தா‌ன்‌ “வசந்‌தம்”‌ செ‌லக்‌ட்‌ பண்‌ணி‌னே‌ன்‌. “கா‌தலி‌க்‌க நே‌ரமி‌ல்‌லை‌” தொ‌டரி‌ல்‌ ரொ‌ம்‌ப மா‌ர்‌டனா‌ன பொ‌ண்‌ணு. அப்‌படி‌யே‌ டோ‌‌ட்‌டல்‌ டி‌பரண்‌ட்‌ “வசந்‌தம்”‌.

டா‌ன்‌ஸ்‌ பி‌ரா‌க்‌டி‌ஸ்‌ செ‌ய்‌ய நே‌ரம்‌ கி‌டை‌க்‌கி‌றதா‌?
நா‌ட்‌டி‌யம்‌ எல்‌லா‌ம்‌ பத்‌தா‌வது படி‌க்‌கும்‌ போ‌தே‌ நி‌றுத்‌தி‌வி‌‌ட்‌டே‌ன்‌. அரங்‌கே‌ற்‌றம்‌ பண்‌ணவி‌ல்‌லை‌யே‌ன்‌றா‌லும்‌. அதை‌ வி‌ட அதி‌கமமா‌ கற்‌றக்‌கொ‌ண்‌டே‌ன்‌. என்‌னோ‌ட முதல்‌ டா‌ன்‌ஸ்‌ குரு. சா‌ந்‌தி‌ கி‌ருஷ்‌ணா‌ அவர்‌கள்‌ தா‌ன்‌ “மணல்‌ கயி‌று” படத்‌தி‌ல்‌ எஸ்‌.வி‌.சே‌கருக்‌கு ஜோ‌டி‌யா‌ நடி‌த்‌தா‌ர்‌களே‌ அவர்‌கள்‌தா‌ன்‌.

சி‌னி‌மா‌த்‌துறை‌யி‌ல்‌ வே‌று என்‌ன பீ‌ல்‌டு பி‌டி‌க்‌கும்‌?
டெ‌க்‌னீ‌க்‌கல்‌ சை‌ட்‌ எனக்‌கு ரொ‌ம்‌ப பி‌டி‌க்‌கும்‌. சி‌ன்‌ன வயதி‌லி‌ருந்‌தே‌ போ‌ட்‌டோ‌ கி‌ரா‌பி‌ ரொ‌ம்‌ப பி‌டி‌க்‌கும்‌. அந்‌த பி‌ல்‌டி‌ல்‌ வர தா‌ன்‌ ஆசை‌.சி‌னி‌மா‌ட்‌டோ‌கி‌ரா‌பி‌ வரலா‌ம்‌. டை‌ரக்‌ஷன்‌ பி‌டி‌க்‌கும்‌. அந்‌தளவி‌ற்‌கு எனக்‌கு தி‌றமை‌‌ இருக்‌கா‌ன்‌னு தெ‌‌ரி‌யா‌து. ஆசை‌, கனவெ‌ல்‌லா‌ம்‌ இருக்‌கு.