Saturday, September 25, 2010

யா‌ரும்‌ தப்‌பா‌க நி‌னை‌க்‌கவி‌ல்‌லை‌


சன் டிவியில் இரவுவேளையில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இரண்டு தொடர்களிலும் பெரும்பாலான ரசிகர்களின் பரிதாபத்தைச் சம்பாதித்து வருபவர் காவ்யா. "திருமதி செல்வ'த்தில் ப்ரியாவாகவும், "செல்லமே' தொடரில் அஞ்சலியாகவும் வந்து எல்லோர் மனதிலும் இடம் பிடித்துவரும் அவரைச் சந்தித்துப் பேசினோம்:
* "செல்லமே' தொடரின் அனுபவம் பற்றி சொல்லுங்களேன்?
"செல்லமே' தொடரில் நடிப்பது ஒரு நல்ல அனுபவத்தைத் தருகிறது. ராதிகா மேடத்தோடு நடிப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. அவர்களிடமிருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்கிறேன்.
எப்போது நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்தது?
அடிப்படையில் நான் ஒரு பாடகி. கூடவே மேடையில் சில நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் ஜெயா டிவியில் "ஸ்டார்ஸ் கப்புள்' என்கிற நிகழ்ச்சியை வழங்குவதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலமாகத்தான் தொடரில் நடிக்க வந்தேன்.
* சினிமாவில் பாடியிருக்கிறீர்களா?
இல்லை. அதற்குச் சந்தர்ப்பம் இதுவரை கிட்டவில்லை. மேடை கச்சேரிகள், சில விழா நிகழ்ச்சிகளில், திருமண வைபவங்களில் பாடிவருகிறேன். பாட்டு என்றால் எனக்கு உயிர். ஏதாவது ஒரு பாட்டை முணுமுணுத்துக் கொண்டே இருப்பேன்.
* "செல்லமே', "திருமதி செல்வம்' இரண்டிலுமே உங்கள் பெண்மையைப் பறிப்பது போன்ற கதாபாத்திரம் அமைந்திருக்கிறது. இதில் நடிக்க எப்படி ஒப்புக்கொண்டீர்கள்?
இதுபோன்ற அழுத்தமுள்ள கதாபாத்திரத்துக்குத்தான் எப்போதுமே வலிமை அதிகம். எனக்கு அமைந்தது ஒரு சவாலான ரோல் என்றுகூட சொல்லலாம். வழக்கமான கதாபாத்திரமாக அமையாமல் வித்தியாசமாக அமைந்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. முதலில் கொஞ்சம் தயக்கமாகத்தான் இருந்தது. இருந்தாலும் என் கதாபாத்திரத்தைப் பற்றி எல்லோரும் எடுத்துச் சொன்ன பிறகு நடிக்க முடிவெடுத்தேன். ரசிகர்களின் பரிதாபத்தைப் பெறுவதுதான் ஒரு நல்ல நடிகருக்குக் கிடைக்கும் மிகப்பெரிய வெற்றி.
* "திருமதி செல்வம்' தொடரில் ப்ரியாவாக நடிக்கும் அனுபவம்?
கடந்த ஒரு மாதமாகத்தான் இந்தத் தொடரில் என் கேரக்டர் ஆரம்பித்திருக்கிறது. ஆரம்பத்திலிருந்தே என் கதாபாத்திரம் ரொம்ப அழுத்தமாக அமைந்திருக்கிறது. காதலனை நம்பி ஏமாந்து போய்விடும் ஒரு பெண்ணின் மனநிலை, அவள் சந்திக்கும் பிரச்னை, அதனால் அவளுக்கு ஏற்படும் பாதிப்பு இதை வெளிப்படுத்தக்கூடிய ரோல். இதற்கு முன்பே கே. பி. ஸôரின் "சொல்லத்தான் நினைக்கிறேன்' என்ற தொடரிலும் இது போன்று நடித்திருக்கிú றன்.
அது "கல்கி' படத்தைப் பின்னணியாகக் கொண்ட கதை. ஒரு பெண்ணுக்கு நல்லது செய்வதற்காக, ஒரு பையனைக் கல்யாணம் செய்துகொண்டு அவனைத் திருத்திக் கொண்டு போய் அவளிடம் ஒப்படைப்பது போன்ற கதை. இதில் நடித்ததால் இப்போது நடிப்பதில் எனக்கு அவ்வளவாகக் கஷ்டம் தெரியவில்லை.
* ரசிகர்கள் உங்கள் நடிப்பைப் பற்றி என்ன சொல்கிறார்கள்?
ஷாப்பிங் போகும்போது, மேடைக் கச்சேரிகளில் பாடுவதற்காகச் செல்லும் இடங்களில் எல்லாம் ரசிகர்கள் ஆர்வத்தோடு வந்து சூழ்ந்துகொண்டு பேசுகிறார்கள். "நீங்க ரொம்ப நல்லா நடிக்கிறீங்க. உங்களைப் பார்க்கும் பொழுது ரொம்ப பரிதாபமாக இருக்கிறது. உங்களுக்கு ஏன் இந்த மாதிரி கஷ்டங்கள் வருகிறது' என்று சொல்வார்கள். உங்களை ஏமாற்றியவர்களைச் சும்மாவிடக்கூடாது, கண்டிப்பாக நீங்கள் பழிவாங்க வேண்டும் என்று சொல்கிறார்கள். யாரும் என் கதாபாத்திரத்திரத்தைப் தப்பாக பார்க்கவில்லை.
* சினிமாவில் நடிக்க ஆர்வம் உண்டா?
இப்போதைக்குச் சினிமா பக்கம் போகிற எண்ணம் இல்லை. தொடர்களிலேயே நிறைய நல்ல வித்தியாசமான, சேலஞ்சிங்கான பாத்திரங்களில் நடித்துச் சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

No comments:

Post a Comment