Monday, October 26, 2009

நடி‌கை‌ சுதா‌சந்‌தி‌ரன்‌ பே‌ட்‌டி‌

மும்​பைக்​கும் சென்​னைக்​கும் பறந்து கொண்​டி​ருந்த சுதா​சந்​தி​ரனை ஏர்போர்ட் வாச​லில் சந்​தித்​தோம். போர்​டிங்​பாûஸ எல்​லாம் செக்​கிங் கவுன்​ட​ரில் கொடுத்​துக் கொண்டே நமது கேள்​வி​க​ளுக்கு விடையளிக்க ஆரம்​பித்​தார் "கலச'த்தில் சந்​தி​ர​வாக கலக்கி,​ "அரசி'யில் அட்வெ​கேட்​டாக வந்து தற்​போது "தாய'த்தில் சோலப்​பூ​வாக மலர்ந்​தி​ருக்​கும் மயூரி சுதா சந்​தி​ரன். நீண்ட இடை​வெ​ளிக்​குப் பிறகு பத்​தி​ரி​கைக்கு அளிக்​கும் பேட்டி இது.

தமிழ் தொலைக்​காட்​சி​யில் நடிக்க வந்​தது எப்​படி இருக்​கி​றது?​
​பனி​ரெண்டு வரு​டத்​திற்​குப் பிறகு தமிழ்ல நடிக்க வந்​தது ரொம்ப சந்​தோமா இருக்கு. அப்போ நான் நடிக்​கும் போது எனக்கு சரி​யான ரோல்ஸ் அமை​யல. படங்​கள் சரியா ஓடல. அதுல கொஞ்​சம் ஏமாற்​றமா இருந்​தது. இந்த சம​யத்​துல இந்​தி​யில வாய்ப்​பு​கள் நிறைய வந்​தது. அத​னால மும்​பை​யில போய் செட்​டில் ஆகிட்​டேன். அங்கே போய் டி.வி. சீரி​யல்,​ இந்தி படங்​கள் நிறைய நடிச்​சேன். அதன் பிறகு அங்கே பாலாஜி டெலி பிலிம்ஸ்ல ரொம்ப பிஸி​யாக இருந்​தேன்.

பாலாஜி டெலி பிலிம்ஸ்ல நடிச்​சதை பார்​துட்டு குட்டி பத்​மினி மேடம் போன் பண்ணி கல​சத்​துல நடிக்க கூப்​பிட்​டாங்க. அதே போல பிர​பு​நே​பால் சாரும் ஜெயா டிவி​யில ஒரு தொடர்ல நடிக்​கக் கூப்​பிட்​டார். அவுங்க இரண்டு பேரும்​தான் தமிழ் இண்​டஸ்ட்​ரிக்கு மறு​படி வர கார​ணம். "கல​சம்', "அரசி' இரண்​டும் நெகட்​டீவ் ரோல். ரொம்​பவே மேக்​கப் போட்டுக்​கிட்டு நடிச்​சேன். ராதிகா ​ மேட​மோட நடிச்​சது ரொம்ப நல்ல அனு​ப​வம். எனக்கு பார​தி​ராஜா சார் ​ படத்​துல நடிக்​க​னும் ரொம்ப நாளா ஆசை​யி​ருந்​தது. அப்போ அந்த வாய்ப்பு கிடைக்​கல. இப்போ அவ​ரோட உத​வி​யா​ளர்​தான் இந்த ​ தாயம் தொடரை எழு​து​றாரு. என்​னோட ஆசை நிறை​வே​றின திருப்தி.

​மேக்​கப்பே இல்​லாம பண்​ணி​யி​ருக்​கீங்களே?​
​மக்​கள் கிட்ட ரீச் கண்​டிப்பா இருக்​கும். விளம்​ப​ரம் பார்த்​துட்டே நிறைய பேர் எனக்கு போன் பண்ணி விசா​ரிக்​க​றாங்க. "இதுல என்​ன​மா​திரி பண்​றீங்க?​ பார்க்​க​ற​துக்கு ​ ​ ​ ​ ​ ​ ​ ரொம்ப சிம்​பிள்ளா இருக்​கீங்க,​ என்ன கதை' அப்​ப​டின்னு ரொம்ப ஆர்​வமா கேட்​கி​றாங்க. ஆடி​யன்ஸ் எவ்​வ​ளவு எதிர்​பார்ப்​போட இருக்​காங்​கன்னு தெரி​யுது. ​
​வடி​வுக்​க​ரசி மேடம் இதில் பட்​டம்​மாவா வராங்க. ஒரு சூழ்​நி​லை​யில அவுங்க ஜெயி​லுக்​குப் போக வேண்​டி​யது ஆகி​வி​டும். அவுங்​க​ளுக்கு ஐந்து மகன்​கள். அவங்​க​ளை​யும்,​ அவுங்க வீட்​டை​யும் நான் தான் மெயிண்​டன் பண்ண வேண்டி இருக்​கும். அதில் என் பெயர் சோலப்பூ. சோலப்​ பூன்னா அது ஆயி​ரம் வரு​ஷத்​துக்கு ஒரு முறை பூக்​கும் பூ. அது மாதிரி ஒரு அழ​கான ரோல். ரொம்ப எமோ​ஷோ​னல் ஆன ரொம்ப இண்​னோ​சென்ட்​டான.. அதே சம​ய​துல எந்த பிரச்​னையா வந்​தா​லும் உறு​தியா எதிர்​கொள்​கிற மாதி​ரி​யான கேரக்​டர். ​

அப்​போது நடித்​தற்​கும்,​இப்​போது நடிப்​ப​தற்​கும் எப்​படி உணர்​கி​றீர்​கள்?​
​காண்​பி​டண்ட் வந்​தி​ருக்கு. ரொம்ப நாள் கழிச்சு இங்க வந்​த​து​னால தமிழ் அவ்​வ​ளவா என்​னால பேச​மு​டி​யல. இப்போ லாங்​வேஜ் நல்லா செட் ஆகி​டுச்சு. நல்லா சர​ளமா தமிழ் பேசு​றேன். அது​மட்​டு​மல்ல மும்​பை​யில் இந்தி தொடர்​க​ளில் நிறைய நடித்​தில் நல்ல எக்ஸ்​பி​ரி​யன்ஸ் கிடைச்​ச​ருக்கு. அங்​கே​யும் சரி,​ இங்​கே​யும் சரி டைரக்​டர்​கள் நல்ல சப்​போர்ட் பண்​ணாங்க. ​ எல்​லா​ரும் நல்ல எக்ஸ்​பி​ரி​யன்ஸ் டைரக்​டர்​கள் அது​னால நிறைய அனு​ப​வம் கிடைச்​சது.

​விபத்​தில் உங்​கள் காலை இழந்த போது மீண்​டும் நடிக்க முடி​யும்னு நம்​பிக்கை இருந்​ததா​?​
​அந்த நேரத்​துல நடிக்​க​றது எல்​லாம் என் மைண்ட்ல இல்ல. எப்​ப​டி​யா​வது எந்து நடக்​க​னும் மட்​டும் ​ ​ ​ ​ ​ தான் ஆசைப்​பட்​டேன். அதுக்​காக நிறைய முயற்சி எடுத்​தேன்,​ ரொம்​ப​வும் கஷ்​டப்​பட்​டேன். பிற​கு​தான் நடிக்​க​ணும்,​டான்ஸ் பண்​ண​ணும்ன்ற ஆசை எல்​லாம் வந்​தது.

​மும்​பை​யில் உள்ள ஆடி​யன்ஸ்க்​கும்,​ தமிழ் ஆடி​யன்ஸ்க்​கும் என்ன வேற்​றுமை?​
​ரொம்ப வித்​தி​யா​சம் இருக்கு. அங்கே பார்த்​தீங்​கன்னா கொஞ்​சம் அதி​க​மாக மேக்​கப் போட்டு நடிக்​க​னும். ஆனால் மலை​யா​ளம்,​ தமிழ்ல எல்​லாம் ஓவர் மேக்​கப் எல்​லாம் இருக்​காது. தமிழ் கதை​கள் எல்​லாம் ஒவ்​வொரு குடும்​பத்​து​லை​யும் நடக்​கிற உண்​மை​யான கதை போல இருக்​கும். ரொம்ப ஏதார்த்​தமா இருக்​கும். இந்​தி​யில அப்​படி கிடை​யாது. இப்​போ​தான் ​ இந்தி டெலி​வி​ஷன் மாறிக்​கிட்டு வருது. ​ மெட்​ரோ​வை​விட்டு ​ நகர்ந்து கிரா​மங்​க​ளுக்​குப் போக ஆரம்​பி​தி​ருக்​கி​றார்​கள். இருந்​தா​லும் இந்​தி​யில் ஜூ​வல்​லரி,​ ஆடம்​பர சாரின்னு எல்​லாமே கொஞ்​சம் அதி​கமா இருக்​கும். ஆனால் தமி​ழில் அப்​ப​டி​யில்லை. தமிழ் ஆடி​யன்ûஸ சீட் பண்ண முடி​யாது.

​இது​வரை நீங்​கள் நடித்​த​தில் மறக்க முடி​யாத கதா​பா​தி​ரம் எது ஏன்?​
​"மயூரி' படம்​தான் என் வாழ்க்​கை​யில் மறக்​கவே முடி​யாது. அந்த மாதிரி படம் யாரும் நடிக்க மாட்​டாங்க. அப்​ப​டியே பண்​ணாக்​கூட கதை யாரைப் ​ பற்​றியோ அவுங்​களே அதில் நடிக்​கி​றது ரொம்ப கஷ்​டம். அந்த மாதிரி அமை​யாது. நான் ரொம்ப லக்கி என்​னோட வாழ்க்​கையே பட​மாக்கி அதுல நானே நடிச்​சி​ருக்​கேன். அதுக்​காக எனக்கு 1985ல தேசிய விருது கிடைச்​சது. இதை​விட பெருமை வேற எது​வுமே இல்ல என் வாழ்க்​கைல.

​டான்ஸ் ஸ்கூல் நடத்​து​றீங்​களே?​ அதில் கிடைச்ச அனு​ப​வம்?​
​மும்​பை​யில டான்ஸ் ஸ்கூல் வெச்​சி​ருக்​கேன். டான்ஸ் ஸ்கூல்ல போய் உட்​கார்ந்​துட்டா மன​சுக்கு ரொம்ப நிம்​மதி கிடைக்​கும்.ரொம்ப நல்லா போய்​கிட்டு இருக்கு. ​

​மும்​பைக்​கும்,​ சென்​னைக்​கும் பறந்து கொண்​டி​ருக்​கி​றீர்​களே?​ சென்​னை​யில் ​ எப்போ வீடு வாங்க போறீங்க?​
​இந்​தக் கேள்வி கொஞ்​சம் லேட். போன​மா​தம் தான் சென்​னை​யில் வீடு வாங்​கி​னேன். இப்போ சூட்​டிங்​கிற்​காக மாதத்​தில் பதி​னைந்து,​ இரு​பது நாள் இங்​கே​தான் இருக்​கி​றேன். முன்பு மும்​பை​யில் இருந்து சென்​னைக்கு வந்து கொண்​டி​ருந்​தேன். இப்போ சென்​னை​யில் இருந்து மும்​பைக்​குப் போய் வரு​கி​றேன்
.
​உங்க குடும்​பம் பற்றி?​
​எனக்​குக் குழந்​தை​கள் இல்லை. என் கண​வர் ரவி​யும் நானும் தான். அவர் ​ ​ ​ ​ ​ சினிமா இன்​டஸ்ட்​ரி​யில் டைரக்​ஷன் பீல்​டு​ல​தான் இருந்​தாரு. அதுக்​குப் பிறகு கனடா போய் சில வரும் ஓர்க் பண்​ணி​கிட்டு இருந்​தாரு. இப்​போது எங்​கள் நாட்​டி​யப்​பள்​ளியை அவர்​தான் பார்​து​கிட்டு இருக்​கி​றார்.