Wednesday, December 2, 2009

காதல் தீ பற்றவில்லை! - ப்ரியாமணி


தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் முத்தழகி பாத்திரமாக பதிந்துப்போன ப்ரியாமணியை சந்திக்க சென்றபோது சென்னை சற்று மழையிலிருந்து ஒதுங்கியிருந்தது.

தமிழ் சினிமாவின் கருப்பு நாயகி, தேசிய விருது நடிகை என்ற புகழோடு தற்போது தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கிலும் தனது நடிப்பு முத்திரையைப் பதித்து வருகிறார்.

மணிரத்னம் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கும் அவரை, பல மொழிப் படங்களும் சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்பதில் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார். சூடான காபியோடு நம்மை வரவேற்றவரிடம் உரையாடல் தொடங்கியது.

தெலுங்கில் தற்போது உங்களைப் பற்றித்தான் பேச்சாமே?

தமிழில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற படமான "நடோடிகள்' திரைப்படத்தின் தெலுங்கு ரீ-மேக்கில் ரவிதேஜாவுடன் நடித்து வருகிறேன். இதையும் சமுத்திரக்கனிதான் இயக்குகிறார். அடுத்து ஜெகபதிபாபுவுடன் நடிக்கிறேன். இதை அறிமுக இயக்குனர் கார்த்திக் இயக்கவிருக்கிறார்.

அடுத்து கன்னடப் படம் ஒன்றிலும் நடித்துக் கொண்டிருக்கிறேன். இது தமிழில் வெளிவந்த "குஷி' படத்தின் ரீ-மேக்தான். நிஜமாத்தான் சொல்றீங்களா? தெலுங்கில் என்னைப் பற்றியா பேசிக்கிறாங்க! கேட்கவே சந்தோஷமா இருக்கு.

ஜெகபதிபாபு கூட எந்த மாதிரியான பாத்திரத்தில் நடிக்கிறீங்க?

ஐய்யோ! மாட்டிவிடப் பார்க்கிறீங்களே. படத்தின் முக்கால் வாசி படப்பிடிப்பு முடிந்து, திரைக்கு வரத் தயாரா இருப்பதால இப்ப சொல்ல மாட்டேன். ஆனால், இதில் எனக்கு முக்கியமான பாத்திரம்னு மட்டும் சொல்லுவேன். படத்தில் துறு துறுன்னு இருக்கிற மாதிரியான பாத்திரம். இது போதுமா?

சரி! கதையாவது என்னன்னு சொல்லுங்க?

விட மாட்டீங்க போலிருக்கே! முழுக்க முழுக்க தெளிவான ஒரு காதல் கதைதான். ஒரு பெண்ணோட பார்வையில் மிகவும் உறுதியான காதலாக இருக்கிற விஷயம், காதலிக்கிற பையனோட பார்வையில அவங்களுக்குள்ளே இருக்கிறது வெறும் பழக்கம் மட்டும்தான். ஆனால் காதல் இல்லை! இதற்கு நேர்மாறாக படத்தோட இரண்டாவது பகுதி அமைக்கப்பட்டிருக்கும். தெலுங்கில் எனக்கு முக்கியமான படமாக இது இருக்கலாம்! (குழப்புறீங்களே முத்தழகி!)

உங்களுக்கு விளம்பரம் அதிகமாக கிடைக்கக் காரணமென்ன?

இதெற்கெல்லாம் காரணம் "பருத்திவீரன்' முத்தழகி பாத்திரம்தான்! தமிழ்நாட்டில் மட்டுமல்ல, மற்ற மாநில ரசிகர்களையும் மிகவும் கவர்ந்த படம் அது.

வெளியிடங்களில் மற்ற மாநில ரசிகர்கள் பார்த்தால், ""உங்க படம் பார்த்தோம் மேடம். ரொம்ப நல்லா பண்ணியிருந்தீங்க''ன்னு அவங்க சொல்லும்போது சந்தோஷமாக இருக்கும். இதற்கெல்லாம் காரணமான இயக்குனர் அமீர் ஸôருக்குத்தான் நன்றி சொல்லணும். அடுத்து மணிரத்னம் ஸôர் படத்தைத்தான் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கேன். அது வெளிவந்தா நடிப்பில் என்னோட அடுத்த பரிமாணத்தையும் பார்ப்பீங்க!

தமிழில் ஒரு இடைவெளி விழுகிற மாதிரி இருக்கே?

நிறைய கதைகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். நல்ல பாத்திரப் படைப்போட வருகிற கதைக்காகத்தான் காத்திருக்கிறேன். நல்ல கதை வரும்போது கண்டிப்பா நடிப்பேன். அப்போது இந்த இடைவெளி தெரியாது!

நகரத்து மைனா, கிராமத்து குயில் எந்த பாத்திரம் பிடிச்சிருக்கு?

இரண்டு பாத்திரங்களுமே எனக்குப் பிடித்தவைதான். இந்த பாத்திரம்தான் பண்ணனும், பண்ணக்கூடாது என்று எந்த வரைமுறையும் நான் வைத்துக் கொள்வதில்லை. எந்த மாதிரியான பாத்திரம் கிடைத்தாலும் நடிப்பேன். எல்லாவிதமான பாத்திரங்களில் நடித்தால்தான், நடிப்பில் ஒரு சமநிலை கிடைக்கும். ரசிகர்களும் இவங்க எந்தப் பாத்திரத்திலும் நடிப்பாங்க என்கிற முடிவுக்கு வருவாங்க. நமக்கும் வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்கும். ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளேயே என்னால சவாரி செய்ய முடியாது!

ஹிந்தி சினிமாவில் நடிப்பது எப்படியிருக்கு?

தமிழில் மணிரத்னம் ஸôர் இயக்குகிற "அசோகவனம்', அப்படியே ஹிந்தியில் "ராவணா' என்கிற பெயரில் தயாராகிறது. இதிலேயும் நான் நடித்திருக்கிறேன். இன்னும் இருபத்தைந்து நாள் படப்பிடிப்புதான் நடைபெற வேண்டியிருக்கு. முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரமொன்றை எனக்கும் கொடுத்திருக்கிறார் இயக்குனர். அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய்ன்னு பெரிய நடிகர்களோட நடிக்கறது மனதிற்கு நிறைவாக இருக்கு!

பேச்சில் யதார்த்தம் தெரிகிறதே? படிப்பில் எப்படி?

உண்மையைச் சொல்லணும்னா படிப்பு மேல எனக்கு பெரிசா ஆர்வம் கிடையாது. எப்போதும் நடனம், விளையாட்டுன்னுதான் ஓடிட்டிருப்பேன். ஆனாலும் அடித்துப் பிடித்து எழுபது சதவீதத்திற்கு மேலே மதிப்பெண்களை வாங்கி விடுவேன். (அப்ப சமர்த்தான பொண்ணுதான்னு சொல்லுங்க!)

குறைக் கூறுபவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?

எல்லாருமே குறை கூறப்பட்டவர்கள்தான். குறைகளை சுட்டிக்காட்டுறது நல்லதுதான். ஆனால், எப்போதும் குறைகளை மட்டுமே சுட்டிக்காட்டிக் கொண்டிருப்பவர்களை கண்டால்தான் எனக்கு எரிச்சலாக வரும். சில நேரங்களில் என்னிடம் இருக்கும் நல்ல விஷயங்களை மட்டுமே சொல்லும் ஆட்களைக்கூட எனக்குப் பிடிக்காது. ஏன்னா, அவங்க அதில் பொய் சொல்லவும் வாய்ப்பிருக்கு இல்லையா? அதனால், நிறையையும், குறையையும் சேர்த்து சொல்லும் ஆட்களைத்தான் எனக்குப் பிடிக்கும்!

பல மொழிகளில் நடிப்பதால், மொழி பிரச்சினை வந்திருக்கிறதா?

எனக்கு ஓரளவிற்கு எல்லா மொழிகளும் தெரியும். அதனால் பெரும்பாலும் மொழிப் பிரச்சினை வந்ததில்லை! எந்த மொழிக்குப் போனாலும், அங்கு பேச வேண்டிய வசனங்களை பேப்பரில் எழுதி மனப்பாடம் செய்து கொண்டு, பேசி விடுவேன். சந்தேகம் வந்தால், மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வேன்.

எதிர்பார்க்கும் பாத்திரம் எது?

தமிழில் "மூன்றாம் பிறை' படத்தில் ஸ்ரீதேவி நடித்த பாத்திரம், "படையப்பா'வில் ரம்யா கிருஷ்ணன் நடித்த நீலாம்பரி கேரக்டர், ஹிந்தியில் ராணி முகர்ஜி "பிளாக்' படத்தில் நடித்த வேடம் போன்ற வித்தியாசமான பாத்திரங்கள் எல்லாவற்றிலும் நடிக்க வேண்டுமென்கிற ஆசை இருக்கிறது.

காதல் தீ உங்களையும் பற்றிக் கொண்டிருக்கிறதா?

இதுவரைக்கும் காதல் தீ பற்றிக் கொள்ளவில்லை. பத்திக்கிட்டா, கண்டிப்பா உங்ககிட்ட மட்டும் ரகசியமா சொல்றேன்.

காதலிக்கவே மாட்டேன் - பூர்ணா!

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகைகளாக விளங்குபவர்களில் பெரும்பாலானோர் கேரளத்தைச் சேர்ந்தவர்களே! அதற்கு மிகச் சிறந்த உதாரணங்களாக நிறைய பேரைச் சொல்லலாம். தற்போது அவர்களது வெற்றிக்கொடி பாலிவுட்டிலும் பறக்க ஆரம்பித்திருக்கிறது.அந்த வரிசையில் தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பிலும், நடனத்திலும் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தி நடித்து வருபவர் பூர்ணா. இவர் தற்போது தமிழில், நான்கு படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். "துரோகி' படப்பிடிப்பில் இருந்தவரை சற்று ஓரம் ஒதுக்கிப் பேசினோம்.சினிமாவிற்குள் உங்களது பிரேவசம் எப்படி நிகழ்ந்தது? ""நான் கேரள - மலையாள முஸ்லீம் குடும்பத்தில் பிறந்த பொண்ணு. ஸ்கூலில் படிக்கும்போதே கிளாசிக்கல் டான்ஸ் முறைப்படி கற்றுக்கொண்டேன். கேரளாவில் ஒரு முறை "சூப்பர் டான்ஸர் ரியால்டி ஷோ' நடந்தது. அதில் கலந்துகிட்டு, நடனம் ஆடியபோது எனக்குத்தான் சிறந்த நடனத்திற்கான விருது கிடைத்தது. இதுதான் நான் சினிமாவிற்கு வருவதற்கான முதல் படி. காரணம், அதுவரைக்கும் தியேட்டரில் உட்கார்ந்து படம் பார்த்து, ரசிக்கிற சாதாரண பெண்ணாகத்தான் இருந்தேன். சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வமெல்லாம் அதன் பிறகுதான் ஆரம்பித்தது. மலையாளத்தில் மோகன்லால் ஸôருக்கு மகளாக "அலிபாய்' என்ற படத்தில் நடித்தேன். அப்போ நான் ப்ளஸ்-ஒன் மாணவி. இந்தப் படத்தை ஷாஜி கைலாஸ் இயக்கியிருந்தார். பிறகு மோகன்லால் ஸôருக்கே இரண்டாவது நாயகியாக "பிளாஷ்' என்கிற படத்தில் நடித்தேன். இந்த சமயத்தில்தான் எனக்கு திருமுருகன் ஸôர், தன்னோட படத்துக்கான நாயகியை தேடிக் கொண்டிருக்கிறார்ன்னு தெரிந்தது. உடனே அவரைப் போய்ப் பார்த்தேன். ஸ்கிரீன் டெஸ்ட் எடுத்துப் பார்த்தார். அவருக்கு பிடித்துப்போகவே "முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு' படத்திற்கு என்னை தேர்வு செய்தார். இப்படித்தான் தமிழுக்கு நான் அறிமுகமானேன்."முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு' படத்தில் வைகைப் புயலுடன் கோடாங்கி பாட்டுக்கு சிறப்பாக ஆடினீர்களே எப்படி?இந்தப் பாட்டுக்கு வடிவேலு ஸôரும், சாந்தி மாஸ்டரும் கொடுத்த உற்சாகம்தான் நான் நல்லா நடனம் ஆட உதவியது. அதுவுமில்லாமல், அடிப்படையில் நடனத்தில் நான் ஃபோக், கதகளியெல்லாம் கற்று வைத்திருந்ததும் சிறப்பாக நடனமாட உதவியது. இங்கே உங்ககிட்ட ஒரு உண்மையைச் சொல்லியாகணும். பள்ளி படிப்பை முடித்தவுடனே என்னோட ஆசையெல்லாம் சென்னை வந்து ஷோபனா மேடத்தின் நடனப்பள்ளியில் சேர்ந்து நடனம் கற்றுக்கொண்டு, நடன ஆசிரியை ஆக வேண்டுமென்பதுதான்!மலையாளத்தில் வெளிவந்த "மணிசித்திரத்தாழ்' படத்தில் ஷோபனா மேடத்தின் நடனத்தைப் பார்த்து நான் மெய்மறந்து போய் விட்டேன். என்னோட சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத படங்களில் இந்தப் படமும் ஒன்று. அதனால்தான் நடனமென்றால் மிகுந்த சிரத்தையெடுத்து ஆடுகிறேன்!"முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு' படத்திற்குப் பிறகு பெரிய இடைவெளி ஏன்? இந்தப் படத்திற்குப் பிறகு, எனக்கு கன்னடத்திலும், மலையாளத்திலும் நடிப்பதற்கு வாய்ப்புக் கிடைத்தது. அதனால் ஒரே நேரத்தில் இங்கேயும், அங்கேயும் நடிக்க முடியாது என்பதற்காக, பட வாய்ப்புகளை குறைத்துக் கொண்டேன். தற்போது "வித்தகன்', "துரோகி', "கந்தக்கோட்டை' போன்ற படங்களில் மாறுபட்ட வேடங்களை தேர்வு செய்து நடித்திருக்கிறேன். விரைவில் இந்தப் படங்களை நீங்கள் திரையில் பார்க்கலாம். "துரோகி' படத்தில் எல்லோரும் பெண்களாமே?ஆமாம். படத்தோட இயக்குனர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர் என எல்லோருமே பெண்கள்தான். பொதுவாக படப்பிடிப்பில் ஆண்களுடைய குரல்தான் ஓங்கி ஒலிக்கும். ஆனால், இந்தப் படத்தை பொருத்தவரைக்கும் பெண்களின் குரல்தான் எந்தப் பக்கம் திரும்பினாலும் கேட்கும். இந்தப் படத்தை மணிரத்னத்தின் உதவியாளரான சுதா மேடம் இயக்க, இந்திரா மேடம் தயாரிக்கிறாங்க. படத்தில் விஷ்ணு, ஸ்ரீகாந்த் என இரண்டு கதாநாயகர்கள். நான் விஷ்ணுவிற்கு தங்கையாகவும், ஸ்ரீகாந்திற்கு நாயகியாகவும் நடிக்கிறேன். முழுக்க முழுக்க பெண்களால் நிரம்பியிருக்கும் "துரோகி' படத்தில் வேறுபாட்டை ஏதேனும் உணர்ந்தீர்களா?பெண்களோடு சேர்ந்து வேலைப் பார்க்கும்போது கொஞ்சம் ரிலாக்ஸôக இருப்பதாக உணர்ந்தேன். படப்பிடிப்பிற்கு போய்விட்டால் எல்லாரிடமும் எளிதாக பழகலாம், பேசலாம், அரட்டை அடிக்கலாம். ஆனால் மற்ற படப்பிடிப்புகளில் அப்படி செய்ய முடியாது, அவ்வளவுதான். மற்றபடி எனக்கு பெரியதாக வேறுபாடுகள் எதுவும் தெரியவில்லை."வித்தகன்' படத்தில் சண்டையெல்லாம் போடுகிறீர்களாமே?இது ஒரு ஆக்ஷன் படம். இதுவரை கிராமத்து பெண்ணாகத்தான் நடித்து வந்திருக்கிறேன். ஆனால், முதன் முறையாக இந்தப் படத்தில் நகரத்தில் வாழும் நவநாகரீக பெண்ணாக நடிக்கிறேன். கிருஸ்துவ மதத்தில் பிறந்த மெர்சி பாத்திரத்தில் நடிக்கிறேன். இதில் நாயகன், நாயகி என்று இல்லாமல், வேறு ஒரு கோணத்தில் பார்த்திபன் ஸôர் படத்தை எடுத்திருக்கிறார். துப்பாக்கி எடுத்தெல்லாம் இதில் நான் சண்டை போட்டிருக்கிறேன். என்னுடைய ஆக்ஷன் பிடித்திருக்கிறதா? என்று படத்தைப் பார்த்துட்டு சொல்லுங்கள்!தற்போது நடித்து வரும் "கந்தக்கோட்டை' மற்றும் "அர்ஜுனன் காதலி' படங்களைப் பற்றி?"கந்தக்கோட்டை' சிறப்பம்சம் நிறைந்த ஒரு படம். இதை சக்தி ஸôர் இயக்க, ராஜா ஸôர் தயாரிக்கிறார். வழக்கமாக நாயகனுக்கும், வில்லனுக்கும்தான் போட்டி வரும். ஆனால், இந்தப் படத்தில் நாயகிக்கும், வில்லனுக்கும் இடையில்தான் போட்டி நடக்கும். வில்லனாக சம்பத் ஸôர் நடிக்க, நாயகன் நகுலுக்கு, நாயகியாக நான் நடிக்கிறேன். இந்தப் படத்தில் என்னோட அறிமுகமே ஒரு நாயகனுக்குரிய அறிமுகத்தோடதான் ஆரம்பமாகும். இந்தப் படத்தில் நகுலுக்கு காதலென்றாலே பிடிக்காது. ஆனால் நானோ காதலுக்கு ஆதரவா செயல்படுவேன். எங்களுக்குள்ளே நடக்கிற மோதல்தான் கதையே!"அர்ஜுனன் காதலி' படம் அப்படியே தலைகீழ்! இந்தப் படத்தில் எனக்கு காதல் என்றாலே பத்தடி தூரத்தில் இருப்பேன். என்னை காதலிக்க வைக்கிறதுதான் நாயகனோட வேலையே! நாயகனாக ஜெய் நடிக்கிறார். இந்தப் படத்தை பார்த்தி பாஸ்கர் இயக்க, சேகர் வி.ஜோசப் ஒளிப்பதிவு செய்கிறார். காதலிக்கவே மாட்டேன்னு பிடிவாதம இருக்கிறவங்க, இந்தப் படத்தைப் பார்த்தால் நிச்சயம் காதலிக்க ஆரம்பிச்சுடுவாங்க. அந்தளவிற்கு யதார்த்தமான காதல் கதையா இயக்குனர் உருவாக்கிஇருக்கிறார்'' என்றவாறு அடுத்த ஷாட்டுக்கு ரெடியானார் பூர்ணா.

சினிமாதான் என் உலகம்!


சன் டிவி​யில் ஒளி​ப​ரப்​பா​கிக் கொண்​டி​ருக்​கும் "தங்​கம்' தொட​ரின் ​படப்​பி​டிப்பு. கங்​காவை ​(ரம்யா கிருஷ்​ணன்)​ பழி​வாங்க சதி செய்து கொண்​டி​ருந்த இள​வஞ்சி​ (காவேரி)​யைச் சந்​தித்​தோம். அங்கு சுப்​பு​லட்​சமி,​ நாச்​சியா,​ மங்கா அக்கா என அனை​வ​ரி​ட​மும் சிரித்து விளை​யா​டிக்​கொண்டே பிஸி​யாக இருந்​தார் நடிகை காவேரி. படப்​பி​டிப்பு இடை​வே​ளை​யில் வந்து,​ நம்​மு​டைய கேள்​வி​க​ளுக்கு அவர் சொன்ன பதில்​களி​லி​ருந்து...​

"தங்​கம்' தொட​ரில் உங்​கள் கேரக்​டர் இந்​த​ளவு பேசப்​ப​டும் என்று நினைத்​தீர்​களா?​​

கதையை முதன் முத​லில் கேட்​கும் பொழுது இந்​த​ள​வுக்கு ரீச் ஆகும்ன்னு எதிர்​பார்க்​க​வில்லை. ஐயா​வுக்கு மரு​ ம​க​ளாக வரு​கிற கேரக்​டர் கொஞ்​சம் பவர் ஃபுல்​லான ரோல் என்று சொன்​னார்​கள். நான் இது​வரை நெகட்​டீவ் ரோலில் நடித்​தது கிடை​யாது. எனக்கே இது ஒரு புது​மை​யான அனு​ப​வம் தான். ஐயா​வின் சொத்து ​ வேறு யாருக்​கும் போகக் கூடாது என்​ப​தற்​குத்​தான் அவ்​வ​ளவு வில்​லத்​த​னம் செய்ய வேண்டி இருந்​தது.​

பார்ப் ​ப​தற்கு ரொம்ப வெகு​ளியா இருக்​கீங்க. ஆனால் தொட​ரில் பயங்​கர வில்​லி​யாக கலக்​கு​றீங்​களே மக்​கள்​கிட்ட உங்​கள் இமேஜ் பாதிக்​காதா?​​

பொது ​வாக வில்லி கேரக்​ட​ரில் நடிப்​ப​வர்​கள் என்​றால் பார்க்​கும் பொழுதே பய​மு​றுத்​தும்​படி இருப்​பார்​கள். ஆனால் பார்​வைக்கு மென்​மை​யாக இருக்​கிற ஒரு பெண் செய்​கிற வேலை​யெல்​லாம் பயங்​கர வில்​லத்​த​ன​மாக இருந்​தால் பார்க்​கி​ற​வர்​க​ளுக்கு வித்​தி​யா​ச​மாக இருக்​கும் என்று எதிர்​பார்த்​தேன். என்​னு​டைய இந்த நினைப்பு வீண்​ போ​க​வில்லை. என்​னு​டைய நடிப்​பிற்கு மக்​க​ளி​டம் நல்ல வர​வேற்பு இருக்​கி​றது. இது இமேஜை பாதிக்​கும் என்று எனக்​குத் தோன்​ற​வில்லை.​

தொட​ரில் உங்​க​ளின் வில்​லத்​த​ன​மான நடிப்​பைப் பார்த்​து​விட்டு உங்​கள் வீட்​டில் உள்​ள​வர்​கள் என்ன சொன்​னார்​கள்?​​

நான் முதன் முறை​யாக நெகட்​டீவ் ரோல் செய்​வ​தால்,​ "ஏன் இப்​படி?​ இந்த மாதிரி நடித்​தால் ​ மக்​கள் உன்னை உதைக்க மாட்​டார்​களா?​ இவ்​வ​ளவு அநி​யா​யம் செய்​வது போல் இருக்​கி​றதே...?' என்று சொல்​லு​வார்​கள். அம்​மா​தான் தின​மும் தவ​றா​மல் ​ டிவி​யில் தொடரை பார்ப்​பார்​கள். நான் ஏதா​வது தப்பு செய்​தி​ருந்​தால் கூட அதைச் சுட்​டிக்​காட்​டித் திருத்​து​வார்​கள்.

பெரும் பகுதி படப்​பி​டிப்​பில்​தான் இருக்​கி​றீர்​கள். உங்​கள் நண்​பர்​கள் பற்றி சொல்​லுங்​கள்?​​

என் ​னு​டைய ஃபேமிலி என்று சொன்​னால் அது இந்த ஷூட்​டிங் ஸ்பாட்​டில் உள்​ள​வர்​கள்​தான். நான் வீட்​டில் இருக்​கும் நேரத்​தை​விட இங்​கே​தான் அதிக நேரம் செல​ வி​டு​கி​றேன். என்​னு​டைய சொந்​தம்,​ பந்​தம் ,​அத்தை,​ மாமா என்று எல்​லாமே இங்கே உள்​ள​வர்​கள் தான்.

எனக்கு வேற உல​கமே இல்ல. வேற உல​கத்தை பற்றி நான் நினைப்​பது கூட இல்லை.​

இந்த கேரக்​ட​ருக்​காக உங்​களை எப்​படி தயார் செய்து கொள்​கி​றீர்​கள்?​​

ஹோம் ஒர்க் செய்​கி​றேன். ஒவ்​வொரு சீன் முடிஞ்​சப்​ பு​றம் என்ன என்ன தவறு செய்​தி​ருக்​கேன் என்று பார்ப்​பேன். மறு​ப​டி​யும் அதை செய்​யக்​ கூ​டா​தல்​லவா?​!​ வீட்​டில் நடித்து பார்ப்​பேன். மற்​ற​படி அடுத்து ​ சீன் என்ன என்​ப​தெல்​லாம் எங்​க​ளுக்கு தெரி​யாது. முன்​னா​டியே சொல்​ல​மாட்​டாங்க. ஸ்பாட்​டுக்கு வந்த பிற​கு​தான் சொல்​வார்​கள். வீட்​டுக்கு வந்த பிறகு படப்​பி​டிப்​பின் போது ஏதா​வது தவறு செய்​தி​ருக்​கேன் என்று தோன்​றி​னால்,​ எங்​க​ளின் கிரி​யேட்​டீவ் ஹெட்​கிட்ட போன் செய்து அவுங்​க​ளோட கருத்​துக்​களை கேட்​போம் அவ்​வ​ளவு தான்.​

வேறு என்ன ​ தொடர் பண்​றீங்க?​ சினி​மா​வில் நெகட்​டீவ் ரோல் வாய்ப்பு வந்​தால் நடிப்​பீர்​களா?​​

கலை ​ஞர் டிவி​யில் வரு​கிற "தாயம்' தொட​ரி​லும் பண்​ணிக்​கிட்டு இருக்​கேன். அடுத்தபடியா "சுழல்'ன்னு ஒரு தமிழ் படம் பண்​றேன். அதில் ஹீரோ,​ ஹீரோ​யின்ஸ் எல்​லாம் புதுசு. டைரக்​ட​ரும் மலை​யாள டைரக்​டர். பிர​தாப் போத்​த​னுக்கு ஜோடி​யாக நடிக்​கி​றேன். ஒரு சீனி​ய​ரு​டன் நடிப்​பது ரொம்ப சந்​தோ​ஷ​மாக இருக்​கி​றது. ரொம்​ப​வும் நட்​போடு நடிப்​பைச் சொல்​லித் தரு​வார். அவர் இரு​பது வரு​ஷத்​திற்​குப் ​ பிறகு சினி​மா​வில் மறு​ப​டி​யும் ரீஎண்ட்ரி ஆவது மன​திற்கு ரொம்ப சந்​தோ​ஷ​மாக இருந்​தது. சினி​மா​வில் நெகட்​டீவ் ரோல் வந்​தால் பண்​ணி​த்தான் பார்ப்​போமே!​​

வைகா ​சி​பொ​றந்​தாச்சு படத்​தில் அறி​மு​க​மான காவே​ரிக்​கும். இப்​போது இள​வஞ்​சியா நடிக்​கும் காவே​ரிக்​கும் வித்​தி​யா​சம் எப்​படி இருக்கு?​

​சினிமா, ​ சீரி​யல்ன்னு நான் பிரித்து பார்த்​த​தில்லை. என்னை பொருத்​த​வரை கேமிரா லைட்​டிங் மட்​டும் தான் வித்​தி​யா​ச​மாக இருக்​குமே தவிர மற்ற எல்​லாமே ஒரே மாதி​ரி​தான் இருக்​கும். ​ எனக்கு எங்கு போனா​லும் சந்​தோ​ஷமா இருக்​க​ணும். எல்​லோ​ரை​யும் சிரிக்க வைக்​க​ணும். "வைகாசி பொறந்​தாச்சு' முதல் படம்ங்​கி​ற​து​னால அப்போ எது​வுமே தெரி​யா​தில்​லையா அத​னால் பயம் இருந்​தது. இப்​பொ​ழுது பழ​கி​டுச்சு. இரு​பது வரு​டமா இது மட்​டும் தான் தெரி​யும். சினி​மாவை தவிர வேற உல​கமே எனக்குத் தெரி​யாது.​

ரம்யா கிருஷ்​ண​னோட நடிப்​பது பற்றி சொல்​லுங்​கள்?​​

அவர் ஒரு ஜெம் ஆஃப் பெர்​சன். ரொம்​ப​வும் ஃபி​ரண்ட்​லியா பழ​கு​வாங்க. புரோ​டி​யூ​சர்ங்​கிற மாதிரி நடந்​துக்க மாட்​டாங்க. ஒரு ஃபேமிலி மாதி​ரி​தான் எல்​லோ​ரி​ட​மும் பழ​கு​வாங்க. ​

உங்​கள் ஃபேமிலி பற்றி சொல்​லுங்​கள்?​​

எனக்கு நாலு அண்​ணன்​கள்,​ நான் ஒரே பெண் தான்,​ இப்​பொ​ழுது அம்​மா​வோட தான் இருக்​கேன். என் கல்​யாண வாழ்க்​கை​யைப் பற்றி நான் எதை​யும் சொல்ல விரும்​ப​வில்லை. ஒரு ஆர்ட்​டிஸ்ட்​டாக இல்​லா​மல் ஒரு பெண்​ணாக இருந்து என் பிரச்​ச​னை​க​ளு​டன் போரா​டிக்​கிட்டு இருக்​கேன்.

டாக்​டர் ஆன​தும்​தான் டைரக்​ஷன்!


"அலை​பா​யுதே', "மொழி' படங்​க​ளுக்​குப் பிறகு கலை​ஞர் டிவி​யில் ஒளி​ப​ரப்​பாகி கொண்​டி​ருக்​கும் "தெக்​கத்​திப்​பொண்ணு' தொட​ரி​லும் கடந்த திங்​கள்​கி​ழமை முதல் புதி​ய​தாக துவங்​கி​யி​ருக்​கும் தொடர் "யாது​மாகி நின்​றாய்' என்ற தொட​ரில் நடிக்​கும் சொர்​ண​மால்​யாவை அவ​ரது இல்​லத்​தில் உள்ள நாட்​டி​யக் கூடத்​தில் சந்​தித்​தோம். ​நுழை​வாயி​லி​லேயே ஒரு சின்ன அம்​மன் சிலை​யைத் தரி​சித்​து​விட்டு உள்ளே சென்​றோம். நட​ரா​ஜர் சிலை​யின் முன் அமர்ந்து அங்கே அபி​ந​யம் பிடிக்​கும் பிள்​ளை​க​ளுக்கு ஜதி சொல்​லிக்​கொண்டே ​ நமக்கு பதி​ல​ளித்​தார். ​


"யாது​மாகி நின்​றாய்' தொட​ரில் என்ன கதா​பாத்​தி​ரத்​தில் நடிக்​கி​றீர்​கள்? வேறு என்ன தொடர்​க​ளில் நடிக்​கி​றீர்​கள்?​

​ "யாது​மாகி நின்​றாய்' மூன்று பெண்​களை பற்​றிய கதை. அதில் முக்​கிய கதா​பாத்​தி​ரம் ​ சாரதா. அந்த கேரக்​டர்​தான் நான் பண்​றேன். அது ஒரு தனித்​து​வம் வாய்ந்த,​ வாழ்க்​கை​யில் நிறைய பிரச்​னை​களை சந்​திக்​கும் அதே சம​யத்​தில் உடைந்து போகா​மல் எதிர்​கொள்​ளும் அழுத்​த​மான ரோல். இந்த "யாது​மாகி நின்​றாய்' தொடர் ஒரு நண்​பர் கொடுத்த கருவை வைத்து ரேவதி மேடம்,​ ரோகிணி மேடம் ரெண்டு பேரும் சேர்ந்து விரி​வாக்​கம் செய்து உரு​வாக்​கியிருக்​கி​றார்​கள். பெண்​க​ளுக்​காக நிறைய விஷ​யங்​களை யோசிக்க கூடிய சிறந்த நடி​கை​க​ளான அவர்​க​ளோடு சேர்ந்து பங்கு எடுத்​துக் கொள்​வது எனக்கு மகிழ்ச்​சி​யாக இருக்​கி​றது. மற்​ற​படி "தெக்​கத்​திப் பொண்ணு' தொட​ரில் கிரா​மத்து பெண்​ணாக நடித்​துக் கொண்​டி​ருக்​கி​றேன். ​

​"மொழி' படத்​தில் சிறப்​பாக நடித்து இருந்​தீர்​கள். அதன் பிறகு படங்​க​ளில் நடிக்​க​வில்​லையே ஏன்?​

​"மொழி' ​ படம் போல ஒரு ​ நல்ல படத்தில் நடித்​தால் பத்து சுமா​ரான படங்​களில் நடிக்க வேண்​டி​யி​ருக்​கி​றது. அது போல் வராத பட்​சத்​தில் பத்து சுமா​ரான படங்​கள் நடிக்க எனக்கு நேரமோ,​ விருப்​பமோ இல்லை. ​

​சின்​னத்​திரை,​பெரி​ய தி​ரை​யில் நீங்​கள் உணர்ந்​தது?​

சினி ​மா​வுக்​கும்,​ சின்​னத்​தி​ரைக்​கும் இருந்த வித்​தி​யா​சங்​கள் இப்​போது போய்​விட்​டது. அதெல்​லாம் ஒரு கால​கட்​டத்​தில் தான் இருந்​தது. இவர்​கள் சினிமா ஆர்ட்​டிஸ்ட்,​ இவர்​கள் சின்​னத்​திரை ஆர்ட்​டிஸ்ட் என்​ப​தெல்​லாம் ​ இப்​போ​ழுது கிடை​யாது. இன்û​றய சூழ்​நி​லை​யில் சினி​மா​விற்கு பல​மாக இருப்​பது சின்​னத்​திரை தான். சினி​மாவையே கூட டிவி​யில் அடிக்​கடி டிரைய்​லர் போட்டு காட்​டும் போது தான் நிறை​ய​பே​ருக்கு இந்​தப் படம் புதி​தாக வரு​கி​றது என்று தெரி​கி​றது. ஒரு மீடி​யா​வுக்​கும்,​இன்​னொரு ​ மீடி​யா​வுக்​கும் நாம போட்டி வைக்க முடி​யாது. ஒரு நடிகை என்​றால் அவுங்க நடிகை தான். நிஜ​வாழ்​கை​யில் நடிக்​காத வரை நாம நடி​கர்​கள் தான்.

​​நீங்​கள் ​ இருந்​த​வரை சன் டிவியில் தொகுத்து வழங்​கிய "இளமை புதுமை' ​ நிகழ்ச்சி அரு​மை​யாக இருந்​தது. அதன்​ பி​றகு காணா​மல் போய்​விட்​டதே. அது உங்​க​ளுக்கு வெற்​றியா?​

​கண்​டிப்​பாக. சொர்ணமால்யா என்​றால் யார் என்று என்னை அறி​மு​கப்​ப​டுத்​தி​யது இளமை புதுமை நிகழ்ச்சி தான் மிகப் பெரிய கார​ணம். நான் அந்த நிகழ்ச்​சியை தொடர்ந்து ஏழு வரு​டங்​கள் பண்​ணி​னேன். என்​னு​டைய பதி​னாறு வய​தில் தொடங்​கி​னேன் என்​னு​டைய வளர்ச்​சி​யோட சேர்ந்து அந்த நிகழ்ச்​சி​யும் வளர்ந்​தது. அந்​நி​கழ்ச்சி துவங்​கும் போது ​ தான் சன் டிவிக்​கும் துவக்க காலம் ​ எங்​க​ளது வளர்ச்​சி போல் சன் டிவி​யும் சேர்ந்து வளர்ந்​தது. நிறைய நல்ல நல்ல விஷ​யங்​கள் எல்​லாம் நடந்​தது. ஒரு விஷ​யம் நன்​றாக நடக்​கும் பொழுது சில நேரங்​க​ளில் அதை விட்டு கொடுக்க வேண்டி வரும் அப்​படி தான் அந்த நிகழ்ச்​சியை ​ ரொம்ப சந்​தோ​ஷ​மான சூழ்​நி​லை​யில் தான் முடித்​தோம். ​ ​

​தொடர்​கள் இயக்​கும் எண்​ணம் உண்டா?​

​தொடர் இயக்​கு​வ​தற்கு நிறைய ​ நேரம் வேண்​டும்.

ஆனால் ​ சினிமா டைர​க்ஷன் பண்​ண​வேண்​டும் என்று ஆசை​யி​ருக்​கி​றது. ஆனால் இப்​போது அந்த எண்​ணம் இல்லை. ​ பிஎச்.டி.முடித்​து​விட்​டு​தான் பண்​ண​வேண்​டும் என்று வைராக்​கி​யத்​தில் இருக்​கி​றேன். டாக்​டர் சொர்​ண​மால்யா ஆகி​விட்​டுத்​தான் டைரக்​டர் சொர்​ண​மால்யா ஆவேன். ​

​படிப்பு,​ நாட்​டி​யம்,​ சினிமா இப்​படி வெவ்​வேறு துறை​யில் இருக்​கிறீர்கள். இதற்​காக எப்​படி நேரம் செல​வி​டு​கிறீர்கள்?​

​ஒரு நாளில் இரு​பத்​தி​நாலு மணி நேரம் இருக்​கி​றது. அதை வைத்​துக் கொண்டு எத்​த​னையோ நிறைய நல்ல விஷ​யங்​களைச் செய்​ய​லாம். அப்​ப​டி​யில்​லா​மல் ஒரு நாள் முழு​வ​தும் ஒரே ஒரு வேலை மட்​டும் தான் ​ செய்ய முடி​யும் என்​றால் அது முயற்​சி​யில்லா தன்​மை​யைக் காட்​டு​கி​றது என்று சொல்​வார்​கள். படிப்​புக்​காக டான்ûஸ விட்​ட​தில்லை,​ டான்ஸ்​காக நடிப்பை விட்​ட​தில்லை,​ ​ ஒவ்​வொன்​றுக்​கும் என் நேரத்​தைப் பிரித்து செயல்படு​கி​றேன். ​

​நாட்​டி​யத் துறை​யில் ​ உங்​கள் பங்​க​ளிப்பு என்ன?​

​ இது​தான் என் பங்​க​ளிப்​புன்னு சொல்லி முற்​றுப்​புள்ளி வைக்க முடி​யாது. இப்​போ​து தான் ஆரம்​பித்​தி​ருக்​கி​றேன். நிறைய விஷ​யங்​கள் செய்​ய​ணும்னு ஆர்​வம் இருக்கு. அதற்​கான முயற்​சி​க​ளில் ஒன்று தான் என் பிஎச்.டி. பட்​டம் வாங்க வேண்​டும் என்​பது. என் மூல​மாக சில விஷ​யங்​க​ளைக் கலை உல​கத்​துக்​குக் கொடுக்க வேண்​டும் என்​பது என் ஆசை. இதை தவிர நாட்​டிய பள்ளி வைத்து நடத்​திக் கொண்​டி​ருக்​கி​றேன். சென்​னை​யி​லும்,​ காஞ்​சி​பு​ரத்​தி​லும். ​

​உங்​கள் ​ திற​மையை திரை​யு​ல​கம் சரி​யாக பயன்​ப​டுத்​த​வில்லை ​ என்ற குறை ​ இருக்​கி​றதா?​

​அப்​படிச் ​ சொல்ல முடி​யாது. எந்த ஒரு சினி​மா​வும்

ஒரு ​வ​ரு​டைய திற​மையை வெளிப்​ப​டு​வ​தற்​காக எடுக்க கூடிய விஷ​யம் இல்லை. ஐநூ​று​பேர்,​அறு​நூறு பேர் சேர்ந்து உழைக்க கூடி​யது. ஒரு ​ தனி​பட்​ட​வ​ரு​டைய திற​மையை ​ வெளிப்​ப​டுத்​து​வ​தற்​காக ஒரு சினிமா எடுப்​பாங்​கன்னா அது நடக்க முடி​யாத ஒரு விஷ​யம். அப்​படி பார்த்தா நானே என்னை வைத்து ஒரு படம் எடுத்​தா​லும் அதில் என்​னு​டைய எல்லா பரி​மா​ணங்​க​ளை​யும் ​ ஒரு மூன்று மணி நேரத்​தில் காண்​பிக்க முடி​யாது. அத​னால் அந்த மாதிரி எதிர்​பார்ப்​பதே ​ என்னை பொருத்​த​வரை முட்​டாள்தனம். அவர்​கள் கொடுக்க கூடிய கதா​பாத்​

தி​ரத்​தில் என்​னு​டைய திற​மையை வெளிப்​ப​டுத்த தெரிந்​தால் நான் புத்​திசாலி. அதை வாங்​கிக் கொண்​டால் அவர்​கள் புத்​திசாலி. ​

​சினி​மா​வில் நெகட்​டிவ் ​ ரோல் வந்​தால் நடிப்​பீர்​களா?​

​ இயல்​பான நெகட்​டீவ் ரோலாக இருந்​தால் பர​வா​யில்லை. நெகட்​டீவா ​ பண்​ணி​னா​லும் அதில் ஒரு அர்த்​தம் இருக்க வேண்​டும். கத்தி எடுத்து ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ குத்​து​வது மாதிரி எல்​லாம் நான் செய்ய முடி​யாது. ​ ஏன் என்​றால் என்​னி​டம் நாட்​டி​யம் கற்​றுக்​கொள்ள நிறைய பிள்​ளை​கள் வரு​கி​றார்​கள். அது ​ மட்​டு​மல்​லா​மல் நான் நிறைய சோஷி​யல் ஒர்க்​கி​லும் ஈடு​பட்​டுக் ​ கொண்​டி​ருக்​கி​றேன். அது நிஜ​வாழ்க்​கை​யில் எந்த பாதிப்​பை​யும் ஏற்​ப​டுத்​தக் கூடாது என்​ப​தால் எனக்கு இஷ்​டம் இல்லை. ​ ​ரொம்ப பெரிய கம்​பெ​னி​யில் இருந்து ​ வில்​லி​யாக நடிப்​ப​தற்கு கேட்​டார்​கள். என்னை பார்த்​தால் உங்​க​ளுக்கு எப்​படி அந்த மாதிரி கேட்க தோன்​று​கி​றது என்று கேட்​டேன். வேற யாருமே அந்த மாதிரி நினைத்து பார்த்​தி​ருக்க மாட்​டார்​கள்.வித்​தி​யா​ச​மாக இருக்​கும் என்​றார்​கள். ஒரு மாதம் வரை காத்​தி​ருந்​தார்​கள் நான் ​ ​ ​ வேண்​டா​மென்று சொல்​லி​விட்​டேன். நல்ல கம்​பெனி,​ நல்ல டைரக்​டர்,​ ரொம்ப நல்ல கதை இருந்​தா​லும் அவர்​க​ளோடு ஒர்க் பண்ண முடி​ய​வில்​லையே என்று வருத்​தப்​பட்​டேன். ​​

Thursday, November 12, 2009

கவிதைகள்

நா‌ன்‌ என்‌னை‌ அறி‌யா‌த வயதி‌ல்‌ எழுத நி‌னை‌த்‌து மனதி‌ல்‌ தோ‌ன்‌றி‌ய சி‌லவற்‌றை‌ கி‌றுக்‌கி‌யு‌ள்ளே‌ன்‌ அவை‌‌ பு‌து கவி‌தைகள்‌ என்‌று இதுவரை‌ நா‌ன்‌ நி‌னை‌த்துக்‌ கொ‌ண்‌டி‌ருக்‌கி‌றே‌ன்‌. இதை‌ படி‌க்‌கும்‌ வா‌சகர்‌களா‌கி‌ய நீ‌ங்கள்‌.உங்‌கள்‌ கருத்‌துக்‌களை‌ பதிவு‌ செ‌ய்‌தா‌ல்‌ மகி‌ழ்‌ச்‌சி‌யடை‌வே‌ன்‌.

நா‌ன்‌ படி‌த்‌ததி‌ல்‌ பி‌டி‌த்‌தது:
வா‌ரி‌யா‌ர்‌ சுவா‌மி‌களி‌ன்‌
பொ‌ன்‌ மொ‌ழி‌கள்‌
வருவதும்‌, போ‌வதும்‌ - இரண்‌டு- இன்‌பமும்‌, துன்‌பமும்‌
வந்‌தா‌ல்‌ போ‌கா‌தது-இரண்‌டு-பு‌ககும்‌‌, பழி‌யு‌ம்‌
போ‌னா‌ல்‌ வரா‌தது-இரண்‌டு-மா‌னமும்‌, உயி‌ரும்‌
தா‌னா‌க வருவது-இரண்‌டு-இளமை‌யு‌ம், மூ‌ப்‌பு‌ம்‌
நம்‌முடன்‌ வருவது-இரண்‌டு-பா‌வமும்‌, பு‌ண்‌ணி‌யமும்‌
அடக்‌க முடி‌யா‌தது-இரண்‌டு-ஆசை‌யு‌ம்‌, துக்‌கமும்‌
தவி‌ர்‌க்‌க முடி‌யா‌தது-இரண்‌டு-பசி‌யு‌ம்‌, தா‌கமும்‌
நம்‌மா‌ல்‌ பிரி‌க்‌கமுடி‌யா‌தது-இரண்‌டு-பந்‌தமும்‌, பா‌சமும்‌
அழி‌வை‌த்‌ தருவது-இரண்‌டு-பொ‌றமை‌யு‌ம்‌, கோ‌பமும்‌
எல்‌லோ‌ருக்‌கும்‌ சமமா‌னது-இரண்‌டு-பி‌றப்‌பு‌ம்‌, இறப்‌பு‌ம்‌

‌ை‌கள்‌ பு‌து கவி‌தை‌‌தயக்‌கம்
ஆசை‌ என்‌னும்‌ கடலி‌னி‌லே‌
அகல்‌வி‌ளக்‌கா‌ய்‌ வந்‌தவளே‌…‌
அன்‌பு‌ என்‌னும்‌ நதி‌யி‌னி‌லே‌
அறம்‌ பொ‌ருளா‌ய்‌ நி‌ன்‌றவளே‌…
ஏன்‌- னெ‌டுத்‌தா‌ய்‌ இப்பி‌றவி‌
என்‌உயி‌ரை‌ கொ‌டுத்‌துவி‌ட்‌டே‌ன்‌
உன்‌ உயி‌ரை‌ கொ‌டுப்‌பதற்‌கு
இன்‌னும்‌ என்‌ன தயக்‌கம்…‌

கா‌தல்‌
நா‌ன்‌ மழலை‌யா‌ய்‌
தா‌ன்‌ இருந்‌தே‌ன்‌
இளமை‌யை‌ அறி‌யு‌ம்‌ வரை‌…
நா‌ன்‌ நம்‌பி‌க்‌கை‌யு‌டன்‌
தா‌ன்‌ இருந்‌தே‌ன்‌
தோ‌ல்‌வி‌களை‌ தா‌ங்‌கும்‌ வரை‌…
நா‌ன்‌ கோ‌ழை‌யா‌க
தா‌ன்‌இருந்‌தே‌ன்‌
கொ‌டுமை‌களை‌ சந்‌தி‌க்‌கும்‌ வரை‌…
நா‌ன்‌ நா‌னா‌கத்‌
தா‌ன்‌ இருந்‌தே‌ன்‌
உன்‌னை‌ சந்‌தி‌க்‌கும்‌ வரை‌…


நா‌ன்‌ யா‌ர்‌?
உன்‌ உதட்‌டோ‌ர மச்‌சத்‌தி‌ல்‌
ஒளி‌ந்‌து கி‌டக்‌கும்‌ சி‌ரி‌ப்‌பி‌ல்‌
நா‌ன்‌ கொ‌ஞ்‌சம்‌ கொ‌ஞ்‌சமா‌ய்‌
தஞ்‌சம்‌ அடை‌ந்‌துவி‌ட்‌டே‌ன்‌…
உன்‌னை‌ கவி‌ பா‌டி‌யி‌ருப்‌பே‌ன்‌
கா‌தலி‌யா‌க இருந்‌தா‌ல்‌…
உன்‌ துணை‌ தே‌டி‌யி‌ருப்‌பே‌ன்‌
மனை‌வி‌யா‌க இருந்‌தா‌ல்‌…
உன்‌ நலம்‌ நா‌டி‌யி‌ருப்‌பே‌ன்‌
நண்‌பனா‌க இருந்‌தா‌ல்‌…
நா‌ன்‌ என்‌னவா‌க இருக்‌கி‌றே‌ன்‌
உன்‌னி‌டத்‌தி‌ல்‌?

மனி‌தன்‌
பி‌றக்‌கும்‌ போ‌ழுது தான்‌ ஆழுது
இறக்‌கும்‌ போ‌ழுது மற்‌றவர்‌களை‌
அழவை‌ப்‌பவன்‌.

கண்‌ணதா‌சன்‌
கற்‌பனை‌க்‌கு எட்‌டா‌த
கா‌லத்‌தா‌ல்‌ அழி‌க்‌கமுடி‌யா‌த
தெ‌ய்‌வ கவி‌ஞன்‌.

தை‌-மா‌த சீ‌சன்‌
மலர்‌களுக்‌கும்‌ கனி‌களுக்‌கும்‌
மட்‌டுமல்‌ல
பெ‌ண்‌களுக்‌கும்‌ தா‌ன்‌.

வா‌னவி‌ல்‌
பல வண்‌ணங்‌களி‌ல்‌
வரும்‌
இவர்‌ தா‌ன்‌
வர்‌ணங்‌களி‌ன்‌ தலை‌வன்‌




மதி‌வண்‌டி‌
ஏழை‌களி‌ன்‌
ஏற்‌றி‌ செ‌ல்‌லும்
‌தோ‌ழன்‌

மழை‌
மா‌மன்‌ அடி‌த்‌தா‌னோ‌
மல்‌லி‌கை‌ப்‌ பூ‌ சண்‌டா‌லே…‌
தா‌ய்‌ தா‌ன்‌ அடி‌த்‌தா‌லோ‌
தா‌மரை‌ப்‌ பூ‌ சண்‌டா‌லே‌…
யா‌ர்‌ அடி‌த்‌தா‌ர்‌ என நீ‌
அழுகி‌றா‌ய்‌…

ஜன்‌னல்‌
ஜெ‌யி‌ல்‌ கம்‌பி‌களுக்‌கு பி‌ன்‌
என்‌ கா‌தலி‌…
எதி‌ர்‌வீ‌‌ட்‌டி‌ல்‌

கா‌தல்‌
நா‌ன்‌ பி‌ற்‌பட்‌டவன்‌என்‌று
தெ‌ரி‌ந்‌தும்‌
உன்‌ இதயத்தி‌ல்‌ இடம்‌
கொ‌டுத்‌துவி‌ட்‌டா‌யே‌

தீ‌க்‌குச்‌சி‌
சா‌ப்‌பி‌ட முடி‌யா‌த
லா‌லி‌ப்‌பா‌ப்‌

கதவு‌
என்‌ன ? தவறு செ‌ய்‌தா‌ய்‌
நி‌ற்‌கும்‌ தண்‌டனை‌யை‌
அளி‌த்‌தது யா‌ர்‌?

நி‌லவு‌
வா‌னத்‌தி‌ல்‌
ஓர்‌
மி‌ஸ்‌யூ‌னி‌வர்‌ஸ்‌

பு‌ல்‌லா‌ங்‌குழல்‌
இசை‌களி‌ன்‌
இன்‌னி‌சை‌ குழல்‌

தா‌லி‌
செ‌ல்‌வி‌யை‌
தி‌ருமதி‌
ஆக்‌குவது…

தா‌லி‌
மி‌ஸ் மி‌ஸ்‌ பண்‌ணி‌யது…

ஒரு தோ‌ழி‌யி‌ன்‌ ஏக்‌கம்‌
உள்‌ளம்‌ நி‌றை‌ந்‌த தோ‌ழி‌
உன்‌ நி‌னை‌வி‌ல்‌ என்‌றும்‌ ஏங்‌கி‌
என்‌ உள்‌ளம்‌ அடை‌ந்‌தது ஏக்‌கம்‌
பல நா‌டட்‌கள்‌ வரவி‌ல்‌லை‌ தூ‌க்‌கம்‌
உன்‌ உறவி‌னி‌ல்‌ கி‌டை‌த்‌தது இனி‌மை‌
வெ‌ண்‌மதி‌யி‌ன்‌ வரவி‌னை‌ கா‌த்‌து
கலை‌ந்‌தி‌டும்‌ முகை‌கள்‌ பூ‌த்‌து
உந்‌தன்‌ வரவி‌னை‌ கா‌த்‌து
கா‌த்‌தி‌ருந்‌தே‌ன்‌ வி‌ழி‌மலர்‌ பூ‌த்‌து
நி‌லவெ‌ன நீ‌யு‌ம்‌ வா‌ரா‌யோ‌
என்‌மனதி‌ல்‌ மகி‌ழ்‌வி‌னை‌ தா‌ரா‌யோ‌

என்‌றும்‌ அன்‌பு‌டன்‌
அன்‌பு‌ தோ‌ழி‌.

ரோ‌ஜா‌ பூ‌
ஓ ரோ‌ஜா‌வே‌
உன்‌னை‌ பா‌ர்‌த்‌து தா‌ன்‌
பெ‌ண்‌களுக்‌கு அழகு
வை‌த்‌தா‌னா‌ ஆண்‌டவன்…‌

கடவு‌ள்‌
கடவு‌ளுக்‌கு கண்‌இல்‌லை‌
என்‌பது தவறு
அவன்‌ கண்‌ இருந்‌தும்‌
கண்‌டு கொ‌ள்‌ளவி‌ல்‌லை‌
ஏழை‌களை…‌

மரணம்‌
வா‌ழ்‌க்‌கை‌யி‌ன்‌
முற்‌றுப்‌பு‌ள்‌ளி…

சுவர்‌ கடி‌கா‌ரம்‌
‌வா‌ழ்‌க்‌கை‌ தா‌ன்‌
மெ‌துவா‌க செ‌ல்‌கி‌றது
என்‌றா‌ல்‌ என்‌
வி‌ட்‌டு கடி‌கா‌ரம்‌ கூடவா‌?

தா‌டி‌
கா‌தல்‌ தோ‌ல்‌வி‌க்‌கா‌க
நீ‌ வளர்‌த்‌த தா‌டி‌
அழி‌ந்‌து வி‌ட்‌டதே‌
ஏன்‌? பு‌தி‌யவள்‌
வந்‌துவி‌ட்‌டா‌ளா‌?

வே‌ப்‌பமரம்‌
ஏழை‌ வீ‌ட்‌டி‌ன்‌
ஏசி‌

அமா‌வா‌சை‌
நி‌லவு‌க்‌கு என்‌மே‌ல்‌
என்‌னடி‌ கோ‌பம்…‌
ஏன்? ‌இன்‌று வரவி‌ல்‌லை‌

கா‌லண்‌டர்‌
மற்‌றவர்‌களுக்‌கு நா‌ள்‌
கா‌ட்‌டி‌யா‌ய்‌ இருந்‌து
தன்‌ நா‌ளை‌ எண்‌ணி‌க்‌
கொ‌ண்‌டி‌ருப்‌பவர்‌

இளமை‌
இனி‌மை‌யி‌ன்‌
துவக்‌கம்‌



மருத்‌துவமனை‌
ஜனமும்‌, மரணமும்‌
ஒரே‌ இடத்‌தி‌ல்‌

சுமை‌
பி‌றக்‌கும்‌ போ‌ழுது
ஒருத்‌தி‌க்‌கு சுமை‌…
இறக்‌கும்‌ போ‌ழுது
மற்‌றவர்‌க்‌கு….
பெ‌ண்‌
தலை‌முறை‌யை
உருவா‌க்‌குபவள்‌

குழந்‌தை‌
அழுகை‌யி‌ல்‌
ஆரம்‌பம்‌

பூக்‌களி‌ன்‌ பு‌லம்‌பல்‌
ஓ அணி‌லே‌
உன்‌ நகங்‌களை‌ வெ‌ட்‌டி‌
நா‌ட்‌கள்‌ அகி‌ன்‌றனவோ‌
பூ‌க்‌களி‌ன்‌ முகங்‌களி‌ல்‌லா‌ம்‌
ரத்‌த கீ‌றல்‌கள்‌

எண்‌ணெ‌ய்‌
தண்‌ணி‌ர்‌ மீ‌து
ஏன்? ‌கோ‌பம்‌
உன்‌னை‌ கா‌தலி‌த்‌து
ஏமா‌ற்‌றி‌வி‌ட்‌டதோ‌…

பெ‌ண்‌
சி‌னந்‌தா‌ல்‌ அக்‌னி‌
குளி‌ர்‌ந்‌தா‌ல்‌ தெ‌ன்‌றல்…‌

வி‌டி‌யற்‌கா‌லை‌
சூ‌ரி‌யன்‌ மெ‌ல்‌ல மெ‌ல்‌ல
வா‌னத்‌து சே‌லை‌யை‌
மடி‌த்‌து கொ‌ண்‌டி‌ருக்‌கி‌றா‌ன்‌.


பி‌றப்‌பு‌
இறப்‌தற்‌கு
சமா‌தா‌னம்‌

மயி‌ல்‌
ஓ… மயி‌லே‌ உன்‌
தோ‌கை‌கள்‌ இன்‌னும்‌
வி‌ரி‌யவி‌ல்‌லை‌யா…‌
உன்‌ கா‌ல்‌கள்‌
இன்‌னும்‌ ஆடவி‌ல்‌லை‌யா‌…
மெ‌ளனம்‌ ஏன்‌?
உன்‌ கண்‌களை‌ முடிக்‌‌
கொ‌ண்‌டி‌ருக்‌கி‌றா‌யோ‌…
வா‌னத்‌து சூ‌ரி‌யன்‌
மெ‌ல்‌ல மறை‌ந்‌து
கொ‌ண்‌டி‌ருக்‌க…
மே‌கங்‌கள்‌ மழை‌யை‌
வரவே‌ற்‌க அழகா‌ய்‌
வந்‌து கொ‌ண்‌டி‌ருக்‌கி‌றது
ஆடட்‌டும்‌ உன்‌ கா‌ல்‌கள்…
வி‌ரி‌யட்‌டும்‌ உன்‌ தோ‌கை‌கள்‌…
நடதெ‌றட்‌டும்‌ உன்‌ நடன அரங்‌கே‌ற்‌றம்‌…

கா‌தல்‌ ஏமா‌ற்‌றம்‌
கண்‌களா‌ல்‌ சந்‌தி‌த்‌து…
கா‌தலி‌ல்‌ கலந்‌து…
கா‌த்‌தி‌ருந்‌தே‌ன்‌ கை‌ பி‌டி‌க்‌க
கன்‌னி‌யவள்‌ மறந்‌து
கசங்‌கி‌ போ‌னா‌ள்‌
கணவன்‌ அவனி‌டம்‌…‌

கர்‌பி‌ணி‌
சி‌ப்‌பி‌க்‌குள்
முத்‌து

கற்‌பனை‌
தி‌ரை‌க்‌கு வரா‌த
வண்‌ணப்‌படம்‌


நர்‌சரி‌ குழந்‌தை‌
அய்‌யகோ‌
பூ‌க்‌கள்‌ கசங்‌குகி‌றதே‌
ஆட்‌டோ‌வி‌ல்‌…

முதி‌ர்‌கன்‌னி‌கள்‌
கல்‌யா‌ண சந்‌தை‌யி‌ல்‌
வி‌லை‌போ‌கா‌த
(ஏழை)‌ வி‌தவை‌கள்‌…

வி‌லை‌மா‌து
பசி‌ வந்‌ததா‌ல்‌
பத்‌தும்‌ பறந்‌தது…
என்‌ கற்‌பு‌ம்‌ சே‌ர்‌ந்‌து தா‌ன்‌…

பெ‌ண்‌ சி‌சு மரணம்‌
பட்‌டு,பட்‌டு
தளர்‌ந்‌து போ‌னே‌ன்‌…
அடி‌ பட்‌டு பட்‌டு
துவண்‌டு போ‌னே‌ன்‌…
அவன்‌ நா‌வி‌னா‌ல்‌ சுட்‌ட வடு
தா‌ங்‌கலை‌யே‌…
இருந்‌தா‌லும்‌ வி‌ட்‌டு வி‌டு
என்‌ சி‌சுவை‌ என்‌று
கெ‌ஞ்‌சி‌க்‌கே‌ட்‌டே‌ன்‌
படுபா‌வி‌ மா‌ட்‌டே‌ன்‌
என்‌று சொ‌ல்‌லி‌வி‌ட்‌டே‌ன்‌…
வே‌று வழி‌யறி‌யா‌து நா‌னும்‌
உனக்‌கும்‌ இந்‌த வே‌தனை‌கள்‌
வே‌ண்‌டா‌மெ‌ன்‌று
போ‌ய்‌வா‌டி‌ கண்‌னே‌ நீ‌ போ‌ய்‌வா‌ என்‌று
மறுபி‌றப்‌பு‌ ஒன்‌று உண்‌டு ஏனி‌ல்‌
ஒரு பு‌னி‌யவதி‌ வயற்‌றி‌ல்‌
பி‌றந்‌து வா‌ழ்‌கன்‌று
தா‌லா‌ட்‌டு பா‌டி‌ என்‌ பெ‌ண்‌ணை‌
அனுப்‌பி‌ வை‌த்‌தே‌ன்‌
சொ‌ர்‌கத்‌துக்‌கு…




பெ‌ண்‌ அடி‌மை‌…
அன்‌று
அடி‌மை‌ப்‌பட்‌டு கி‌டந்‌ததா‌ல்‌
சீ‌தை‌ தீ‌ குளி‌த்‌தா‌ல்‌
பு‌ரட்‌சி‌யா‌க இருந்‌ததா‌ல்‌
கண்‌ணகி‌ ஊரை‌ ஏறி‌த்‌தா‌ள்‌
பு‌துமை‌ பெ‌ண்‌களடி‌ நா‌ங்‌கள்‌
அதனா‌ல்‌
தீ‌ குளி‌க்‌கவோ‌…
அல்‌லது
தீ‌ வை‌க்‌கவோ‌…
எப்‌படி‌யு‌ம்‌
சரி‌த்‌தி‌ரத்‌தி‌ல்‌ இடம்‌
பெ‌றுவோ‌ம்‌ என்‌று கூறி‌னே‌ன்‌…
போ‌டி‌ உள்‌ளே‌ என்‌று
கூரல்‌ ஒலி‌த்‌த தீ‌க்‌கை‌
நோ‌க்‌கி‌னே‌ன்‌…
அறி‌வா‌ளுடன்‌
அப்‌பா‌வு‌ம்‌, அண்‌ணனும்‌
அருகி‌ல்‌ வந்‌தனர்‌
வா‌ய்‌பே‌ச முடி‌யா‌மல்‌
தி‌ரும்‌பி‌ச்‌ செ‌ன்‌றே‌ன்‌…
இந்‌த நி‌லை‌மை‌ தா‌ன்‌ பெ‌ண்‌களுக்‌கு இன்‌னும்‌,
பொ‌றுத்‌தது போ‌துமடி‌ பெ‌ண்‌னே‌
என்‌று கூற…
பு‌தியதொ‌ரு பா‌ரதி‌ பி‌றப்‌பா‌னோ‌?
என்‌ குலப்‌ பெ‌ண்‌களுக்‌கு வி‌டுதலை‌
அளி‌ப்‌பா‌னோ‌?

வி‌லை‌மமா‌து
பயன்‌படுத்‌துவதற்‌கு முன்‌
வா‌ழை‌ இலை‌கள்‌ நா‌ங்‌கள்‌…
பயன்‌படுத்‌தி‌ய பி‌ன்
எச்‌சி‌ல்‌ இலை‌கள்‌ நா‌ங்‌கள்‌…
இருப்‌பி‌னும்‌ வண்‌டுகள்‌
எங்‌களை‌ வி‌டுவதி‌ல்‌லை‌
கா‌கி‌த பூ‌க்‌களி‌ன்‌ கண்‌ணீ‌ர்‌ துளி‌கள்‌…


வி‌தவை‌
வெ‌ள்‌ளை‌ பு‌றா‌ ஒன்‌று
என்‌ வா‌சல்‌ வந்‌தது…
அதன்‌ ஆசை‌ சி‌றகுகள்‌ ஓடி‌ந்‌துவி‌ட்‌டது
கட்‌டி‌யவன்‌ பறந்‌துவி‌ட்‌டா‌ன்‌ என்‌று
அழுதா‌ளோ‌…
அவன்‌ முகம்‌ பா‌ரா‌மல்‌
வயி‌ற்‌றி‌ல்‌ துள்‌ளும்‌ சி‌சுவை‌
எண்‌ணி‌ அழுதா‌ளோ‌…
கதறி‌ கதறி‌ அழுதா‌ள்‌
தன்‌னை‌யு‌ம்‌ கூட்‌டி‌ செ‌ல்‌லுமா‌று..
ஆண்‌டவனோ‌ அந்‌த
மஞ்‌சள்‌ நி‌ல‌வை‌
வெ‌ண்‌ணி‌லவா‌க்‌கி‌ பா‌ர்‌க்‌க
ஆசை‌ப்‌பட்‌டா‌ன்‌ போ‌லும்‌…
பா‌வை‌யவள்‌ கா‌த்‌தி‌ருந்‌தா‌ள்‌
வழி‌ மி‌து வி‌ழி‌ வை‌த்‌து
பா‌ர்‌த்‌தி‌ருந்‌தா‌ள்‌…
மன்‌னவள்‌ மீ‌ண்‌டும்‌
மீ‌ள்‌வா‌னோ‌…
மா‌ற்‌றா‌ன்‌ ஒருவன்‌
வருவா‌னோ‌…
சி‌றகு ஒடி‌ந்‌த
இந்‌த ஊமை‌ குயி‌லி‌ன்‌
மெ‌ளன கீ‌தம்‌
கா‌ற்‌றோ‌டு கலக்‌கி‌றது…

வா‌னம்‌- நட்‌சத்‌தி‌ரம்‌
அடி‌ பெ‌ண்‌ணே‌
உன்‌கி‌ழி‌சல்‌ ஆடை‌யை‌
சி‌ர்‌படுத்‌து
உன்‌ அழகை‌யெ‌ல்‌லா‌ம்‌
தி‌ருட்‌டுதனமா‌ய்‌ ரசி‌க்‌கி‌றா‌ன்‌
தெ‌ன்‌றல்‌ ஆடவன்‌

வா‌னம்‌
உன்‌ அழகா‌ன
சே‌லை‌யி‌ல்‌
இத்‌தனை‌ ஓட்‌டை‌யா‌?

கணவன்‌
கன்‌னி‌ப்‌பருவத்‌தை‌
களை‌ந்‌தெ‌றி‌ய
வந்‌தவன்‌

வி‌டி‌யல்‌
என்‌வி‌ட்‌டு நந்‌தவனத்‌தி‌ல்‌
பழை‌ய கதி‌ரவன்‌ தா‌ன்‌
பு‌த்‌தா‌டை‌ பூ‌ண்‌டு ரதத்‌தி‌ல்‌
ஏறி‌பு‌றப்‌பட்‌டுவி‌ட்‌டா‌ன்‌…
அந்‌த குதி‌ரை‌களி‌ன்‌ குளம்‌படி‌ சத்‌தத்‌தி‌ல்‌
பழை‌ய தோ‌ட்‌டம்‌ தா‌ன்‌
பு‌து பூ‌க்‌கள்‌ மலர்‌ பூ‌த்‌து மனம்‌வீ‌சி‌யது…
அதோ‌ அந்‌த மரக்‌கி‌ளை‌யி‌ல்‌
பழை‌ய குயி‌ல்‌கள்‌ தா‌ன்‌
பு‌து ரா‌கம்‌ அல்‌லலோ‌ பா‌டுகி‌றது…
இதோ‌ அந்‌த பச்‌சை‌ வர்‌ண தரை‌யி‌ல்‌
பழை‌ய பு‌ல்‌வெ‌ளி‌ தா‌ன்‌
பு‌து பனி‌த்‌துளி‌ அரும்‌பி‌யு‌ள்‌ளது…
பழை‌ய குளம்‌ தா‌ன்‌
பு‌து தா‌மரை‌ பூ‌த்‌து நி‌ற்‌கி‌றா‌ள்‌
என்‌ வி‌ட்‌டு தோ‌ட்‌டத்‌தி‌ல்‌ - ஏன்‌?
இத்‌தனை‌ மா‌ற்‌றம்‌?
ஓ அத்‌தனை‌யு‌ம்‌ பு‌த்‌தா‌ண்‌டு வா‌ழ்‌த்‌து கூறுகி‌றதோ‌?

பெ‌ற்‌றோ‌ர்‌கள்‌
பா‌ச(ம்‌) கயி‌ற்‌றி‌ல்‌
கா‌தலை‌
தூ‌க்‌கி‌லி‌டுபவர்‌கள்‌.

கா‌தல்‌ தோ‌ல்‌வி‌‌
கற்‌பனை‌ குதி‌ரை‌ ஏறி‌
பு‌றப்‌பட்‌டுவி‌ட்‌டா‌ன்‌
என்‌ தலை‌வன்‌…
அப்‌போ‌து அவன்‌ முகம்‌ எனக்‌கு
சரி‌யா‌க தெ‌ரி‌யவி‌ல்‌லை‌
ஆயி‌னும்‌ ஆசை‌ப்‌பட்‌டவன்‌
அருகி‌ல்‌ வரப்‌போ‌கி‌றா‌ன்‌
என்‌று வி‌ட்‌டுவி‌ட்‌டே‌ன்‌
கா‌ல சக்‌கரம்‌ சூ‌ழன்‌றது
அருகி‌ல்‌ வந்‌தா‌ன்‌ அவன்‌
என்‌ இதயமா‌ளி‌கை‌யி‌ன்‌
அஸ்‌தி‌வா‌ரம்‌ அல்‌லவோ‌ ஆடி‌யது.
அந்‌த தூ‌ண்‌களை‌
தா‌ங்‌கி‌ப்‌பி‌டி‌க்‌க
அதரவு‌ இல்‌லை‌…
அதை‌
தூ‌க்‌கி‌ நி‌றுத்‌த ஆள்‌ இல்‌லை‌…
இருந்‌தும்‌
என்‌னை‌ அதி‌ல்‌ ஏற்‌றி‌விட்‌டுவி‌ட்‌டனர்‌
என்‌ வசந்‌த மா‌ளி‌கை‌
ஒடி‌ந்‌துவி‌ழுவதை‌
பா‌ர்‌க்‌க பொ‌றுக்‌கவி‌ல்‌லை‌
என்‌ ஆசை‌ கனவு‌கள்‌ தவி‌டுபொ‌டி‌யா‌வதை‌
சகி‌த்‌து கொ‌ள்‌ள முடி‌யவி‌ல்‌லை‌
என்‌ செ‌ய்‌வே‌ன்‌ .. நா‌ன்‌ செ‌ய்‌வே‌ன்‌…

பவனி‌ வரும்‌ தெ‌ன்‌றல்‌
வா‌யு‌ பகவா‌ன்‌
தே‌ர்‌ ஏறி‌ பு‌றப்‌பட்‌டுவி‌ட்‌டா‌ன்‌
தெ‌ன்‌றல்‌ என்‌ற பெ‌யரி‌ல்‌
சத்‌தமி‌ன்‌றி‌ அவன்‌ தொ‌ட்‌டு செ‌ன்‌றதா‌ல்‌
செ‌டி‌, கொ‌டி‌கள்‌ எல்‌லா‌ம்‌ பு‌த்‌துனர்‌ச்‌சி‌
பெ‌ற்‌றன…
அரும்‌பு‌களை‌ அவன்‌ தா‌ண்‌டி‌ செ‌ன்‌றதா‌ல்‌
அவை‌ மொ‌ட்‌டு அவி‌ழ்‌ந்‌து மலர்‌ந்‌தன
பூ‌க்‌களி‌ன்‌ பட்‌டி‌மன்‌ற தீ‌ர்‌ப்‌பு‌
தெ‌ன்‌றல்‌ ஒரு ஆடவன்‌ என்‌று…
அவன்‌ ஆண்‌ என்‌பதலோ‌
அல்‌லது அனுமதி‌யி‌ன்‌றி‌
என்‌ குலப்‌ பெ‌ண்‌களை‌
தீ‌ண்‌டி‌யதலோ‌
சி‌ன்‌னவு‌டல்‌ சி‌ல்‌லி‌ட்‌டு போ‌னது
இத்‌தனை‌யு‌ம்‌ செ‌ய்‌துவி‌ட்‌டு
மா‌யக்‌ கண்‌ணன்‌ போ‌ல்‌ மறை‌ந்‌துவி‌ட்‌டா‌ன்‌…
யா‌ர்‌ இவனுக்‌கு போ‌ட்‌டது வே‌லி‌?
கடந்‌து செ‌ன்‌று
கடல்‌ மங்‌கை‌யோ‌டு கலந்‌துவி‌ட்‌டா‌னே‌…


பு‌லம்‌பல்‌
இத்‌தனை‌ கா‌லம்‌ என்‌னை‌
தொ‌ட்‌ட தெ‌ன்‌றல்‌ தா‌னே‌
இவன்‌…
இன்‌று ஏன்‌ இத்‌தனை‌ மா‌ற்‌றம்‌
ஓ நா‌ன்‌ மலர்‌ந்‌துவி‌ட்‌டே‌ன்‌
அம்‌மா‌ செ‌ன்‌னா‌ளே‌…
அதனா‌லயோ‌
பூ‌க்‌களி‌ன்‌ பு‌லம்‌பல்‌.

கா‌தல்‌ தோ‌ல்‌வி‌
வா‌ழ மறுக்‌கி‌றே‌ன்‌
சா‌க துடி‌க்‌கி‌றே‌ன்‌
மனதோ‌டு பே‌சுகி‌றே‌ன்‌
மெ‌ளனமா‌ய்‌ அழுகி‌றே‌ன்‌
மனம்‌வி‌ட்‌டு சி‌ரி‌க்‌கி‌றே‌ன்‌
ஏன்‌இந்‌த நி‌லை
அது தா‌ன்‌ கா‌தலா‌?

தொ‌லை‌ந்‌து போ‌ன நி‌னை‌வு‌கள்‌
நா‌ன்‌ வி‌ளை‌யா‌ட
நி‌னை‌த்‌த போ‌து
என்‌வயது பி‌ரி‌ந்‌துவி‌ட்‌டது…
நா‌ன்‌ பழக
நி‌னை‌த்‌த போ‌து
என்‌ நண்‌பர்‌கள்‌ பி‌ரி‌ந்‌துவி‌ட்‌டனர்‌…
நா‌ன்‌ படி‌க்‌க
நி‌னை‌த்‌தபோ‌து
என்‌ கல்‌வி‌ உதறி‌வி‌ட்‌டது…
நா‌ன்‌ வா‌ழ
நி‌னை‌த்‌த போ‌து
என்‌வா‌ழ்‌க்‌கை‌ மா‌றி‌வி‌ட்‌டது…
நா‌ன்‌ கா‌தலி‌க்‌க
நி‌னை‌த்‌த போ‌து
என்‌ கா‌தல்‌ ஏமா‌ற்‌றிவி‌ட்‌டது…
நா‌ன்‌ என்‌னை‌
நி‌னை‌த்‌த போ‌து
முதுமை‌யி‌ன்‌ வி‌ளி‌ம்‌பி‌ல்‌ ‌
என்‌ தொ‌லை‌ந்‌துபோ‌ன
நி‌னை‌வு‌களோ‌டு…

ஆவல்‌
நா‌டி‌, நரம்‌பு‌ தளர்‌ந்‌து
நடை‌ தளர்‌ந்‌து
கூனி‌ குறுகி‌
பா‌ர்‌வை‌ மங்‌கி‌
இளம்‌பஞ்‌சுபோ‌ல்‌
நரை‌தி‌ட்‌ட
கூந்‌தல்‌ கொ‌ண்‌டு
முதுகலே‌ம்‌பு‌ முதி‌ர்‌ந்‌து
தள்‌ளா‌டி‌ கொ‌ண்‌டுவரும்‌
யா‌ர்‌ இந்‌த பழுத்‌த பழம்‌
ஓ என்‌ இந்‌தி‌யதாய்‌
அல்‌லவோ‌ அவள்‌‌
என்‌ன முனகுகி‌றா‌ள்‌
சா‌தி‌ சமய வெ‌ரி‌ன்‌றி‌
கத்‌தி‌ன்‌றி‌, ரத்‌தமி‌ன்‌றி‌
என்‌தா‌ய்‌நா‌ட்‌டை‌ கா‌க்‌க
இதோ‌ உன்‌ வா‌ரி‌சு‌கள்‌
என்‌று மா‌ர்‌தட்‌டி‌ கொ‌ள்ளும்‌
இளை‌ஞனை‌ கா‌ண
ஆவல்‌ கொ‌ண்‌டி‌ருக்‌கி‌றா‌ள்‌.














Tuesday, November 3, 2009

சரண்‌யா‌ பே‌ட்‌டி‌


தீபா​வளி அன்று ரிலீஸ் ஆன "பேராண்மை' படத்​தில் ஐந்து கதா​நா​ய​கி​க​ளில் ஒரு​வ​ராக "ஜெயம்' ரவி​யின் ஜோடி​யாக நடித்த "காதல்' சரண்​யாவை கோடம்​பாக்​கத்​தில் உள்ள அவ​ரது இல்​லத்​தில் ஒரு மாலை வேளை​யில் சந்​தித்​தோம். துள்​ள​லும்,​ துடிப்​பு​மாக இருக்​கும் சரண்யா சந்​தோ​ஷத்​தில் திளைத்​தி​ருக்​கி​றார்.
​"நாம் கேள்​விக்கு போக​லாமா?​' என்​ற​தும். எனக்கு டிவி​யில் குரோர்​பதி பார்ப்​பது போல் இருக்​கி​றது என்று கிண்​ட​ல​டித்​த​படி,​ நமக்கு பதி​ல​ளிக்க தொடங்​கி​னார்.
​காதல் படத்​திற்கு பிறகு பேராண்​மை​யில் தான் உங்​களை பார்க்க முடிஞ்​சது இவ்​வ​ளவு நாள் என்ன செய்து கொண்​டி​ருந்​தீர்​கள்?​
​காதல் படம் தெலுங்​குல ரீமேக் பண்​ணாங்க. அதில் எனக்கு அங்கே நல்ல ரெஸ்​பான்ஸ் இருந்​தது. அத​னால் தெலுங்கு பக்​கம் போயிட்​டேன். அங்கே டென்த் கிளாஸ்ன்னு ஒரு படம் பண்​ணி​னேன். மக்​கள்​கிட்ட நல்ல ரீச்​கி​டைச்​சது. ​
​அப்போ தான் ஜனா சார் ஒரு படத்​துக்கு ஐந்து ஹிரோ​யின்ஸ் செலக்ட் பண்​ணி​கிட்டு இருக்​கா​ருன்னு கேள்​விப்​பட்டு மேனே​ஜர் சைடுல ​ இருந்து ஜனா சாரை காண்​டாக்ட் பண்​ணி​னோம். அவரு என்னை பார்த்​துட்டு நீங்​கள் ரொம்ப ஹோம்​லியா இருக்​​கீங்க. நான் ரொம்ப பவர்​புல்லா தேடிக்​கிட்டு இருக்​கேன்னு சொன்​னாரு. இல்ல சார் நான் டிரை பண்​ணி​பார்க்​கி​றேன்னு சொன்​னேன். சரின்னு ​ வீடியோ டெஸ்ட் எல்​லாம் எடுத்​துட்டு ஓ.கே. சொன்​னார்.
​பேராண்​மை​யில ஐந்து கதா​நா​ய​கி​கள் இருக்​கும் போது உங்​க​ளுக்கு மட்​டும் முக்​கி​யத்​து​வம் கிடைக்​கும்ன்னு எதிர்​பார்த்​தீங்​களா?​
நான் எதிர்​பார்க்​க​வே​யில்லை. முத​லில் ஜனா சார் இந்த படத்​துல மொத்​தம் ஐந்து ஹீரோ​யின்ஸ் இருக்கு. எந்த ரோல்ன்னு இன்​னும் செலக்​கட் பண்​ணல. யாருக்கு எது கொடுத்​தா​லும் பண்​ண​னும் எந்த ஈகோ​வும் இருக்க கூடா​துன்னு சொன்​னார். நான் ரவி​யோட ஜோடியா பண்​ண​போ​றேன்னு எதிர்​பார்க்​க​வே​யில்ல. ரெண்​டு​நாள் ஷுட் பண்​ணி​னோம். மூணா​வது நாள் ஷுட்
அன்​னைக்கு தான் ஜனா சார் சொன்​னார்... இன்று லவ் சீன்ஸ் ​ ஒரு ​ ஹீரோ​யி​னுக்கு இருக்கு. இன்​னும் யாருன்னு தெரி​யல. ஒரு டிரûஸ காட்டி இந்த டிரஸ் யாருக்கு வருதோ அவுங்​க​ளுக்கு தான் ​ இன்​னைக்கு ​ நைட் ஷுட் இருக்​குன்னு சொல்​லிட்​டாங்க. நான் மாலை ஆறு மணி ஆன​தும் நம்​மள எப்​ப​டி​யும் கூப்​பி​ட​போ​ற​தில்​லன்னு நெனைச்சி கார்ல ஏறி உட்​கார்ந்​துட்​டேன்.
அப்​பு​றம் கோ-​டைரக்​டர் வந்து சொன்​னார். ​
உங்​க​ளுக்கு தான் நைட் ஷுட் இருக்​குன்னு.
எனக்கு ஒரே ஷாக். ரொம்ப ​ எக்​ûஸட்​டிங்கா இருந்​தது. ரொம்ப சந்​தோஷமா இருந்​தது. ரவி​யோட ஜோடியாக நடிப்பது கண்​டிப்பா ஒரு பிரேக் கிடைக்​கும்​ன்னு நினைத்​தேன்.
​காட்​டுக்​குள் படப்​பி​டிப்பு நடக்​கும் போது ஒரு பெண்ணா உங்​க​ளுக்கு நிறைய கஷ்டங்​கள் இருந்​தி​ருக்​குமே எப்​படி சமா​ளித்​தீர்​கள்?​ ​
​நிஜம் தான். ஆம்​ப​ளைங்க எங்கே வேணா​லும் டிரஸ் சேஞ்ச் பண்​ணி​டு​வாங்க. மற்ற விஷயங்​க​ளை​யும் சமா​ளிச்​சு​டு​வாங்க. ஆனால் ​​ பெண்​கள் எல்​லா​ருக்​கும் ரொம்ப கஷ்​டம். எங்​க​ளுக்கு முன்​னா​டியே டிரஸ் எல்​லாம் கொடுத்​து​டு​வாங்க. நாங்க ரூம்​லேயே மாத்​திக்​கிட்டு வந்​தி​டு​வோம். திடீர்ன்னு சாங்​குக்கு டிரஸ் சேஞ்ச்
பண்​ண​ணும்ன்னா ​ கஷ்​டம். எங்க ஆர்ட் டைரக்​டர் செல்​வம்ன்னு ​ அவர் எங்​க​ளோட கஷ்டங்​களை எல்​லாம் புரிஞ்​சுக்​கிட்டு. உடனே ஒரு டென்ட் கட்டிக் கொடுத்​தி​டு​வாரு. அதே மாதிரி காட்​டில் டைமுக்கு சாப்​பாடு எல்​லாம் கிடைக்​காது. ​ அட்டை பூச்சித் தொல்லை அதி​கம். அது கடித்து என்​னோட ​ அஸி​டெண்ட் கால் எல்​லாம் ரத்​தம் வந்​தி​டுச்சு. எல்​லா​ரும் அட்​டை​பூச்​சி​யி​டம் மாட்​டிக்​கிட்​டாங்க. நான் மட்​டும்​தான் தப்​பித்​தேன். எல்​லா​ரும் கேட்​டாங்க நீ மட்​டும் எப்​படி தப்​பிச்​சன்னு ​ ​ நான் கீழே பார்த்​துக்​கிட்டு இருப்​பேன். பேசிக்​கிட்டே இருப்​பேன். ​ ​ திடீர்ன்னு காலை தூக்கி மேலே வைத்​துக் ​கொள்​வேன்.
​நீங்​கள் மட்​டும் தனி​யாக போவது போல படத்​தில் காட்​சி​கள் இருந்​தது. உண்​மை​யி​லேயே உங்​களை அந்​தக் காட்​டில் தனி​யா​கப் போக சொன்​னால் எப்​படி இருக்​கும்
​முத்​துப்​பேட்​டை​யில சூட்​டிங் நடக்​கும் போது முதல்ல ரவி வரல. மூணு நாள் கழிச்சு தான் வந்​தார். அது​வ​ரை​யில் என்​னோட காட்​சி​கள் மட்​டும் தனி​யாக எடுத்​தாங்க. சில நேரங்​க​ளல தனியா இருக்​கிற மாதி​ரியே இருக்​கும். ரொம்ப பயமா இருக்​கும். சூட்​டிங் ரெண்டு நாள் போன​துக்​குப்​பு​றம் காட்​டு​வாசி மாதிரி நானே தனியா போவேன். வரு​வேன். அப்​ப​டியே பழ​கிப்​போச்சு. சில நேரங்​க​ளில் காட்​டு​வாசி மாதிரி ரூட் எல்​லாம் சொல்​லு​வேன். அப்​படி போகா​தீங்க. இந்த பக்​கம் போங்​கன்னு. எல்​லா​ரும் சிரிச்​சு​கிட்டு இருப்​பாங்க. அதில் தனியா போவதா அய்​யய்யோ ஏங்க உங்​க​ளுக்கு இப்​படி ஒரு ஆசை. அதை​யெல்​லாம் நினைத்து கூட பார்க்க முடி​யாது. ​ ​
​ஆற்றை கடக்​கும் போதும் சேற்​றில் மாட்டி இறக்​கும் போதும் எங்​க​ளுக்கே பரி​தா​ப​மாக இருந்​தது அந்த காட்​சியை எங்கு எடுத்​தார்​கள் அதற்​காக ​ நீங்​கள் பட்ட கஷ்டம் என்ன?
ஜனா சார் சொன்​னார் ரெண்டு பேரை கயிற்​றில் கட்டி இறக்கப் போறேன். ​ ரெடியா இருங்க அது யார்ன்னு சொல்​ல​மாட்​டேன்னு சொன்​னார். எனக்கு ஒரே பயம் சாமியை எல்​லாம் வேண்​டி​கிட்டே இருப்​பேன். என்னை கூப்​பிடக் கூடா​துன்னு. திடீர்ன்னு என்னை கூப்​பிட்​ட​தும் எனக்கு ஒரே ​ அழு​கையா வந்​து​டுச்சு. அதுக்​குப்​பு​றம் ஒரு தைரி​யம் வந்​து​டுச்சு நம்ம எந்​த​ளவு கஷ்ட படு​றோமா அந்​த​ளவு கண்​டிப்பா மக்​கள்​கிட்ட ஒரு ரீச் கிடைக்​கும்னு ​ தோணுச்சு. உடனே எவ்​வ​ளவு கஷ்டம் இருந்​தா​லும் பர​வா​யில்​லைன்னு இறங்​கிட்​டேன். மைக்​கல் மாஸ்​டர் தான் ரொம்ப உதவி பண்​ணி​னார் அவர் தான் இந்த படத்​துக்கு பைட் மாஸ்​டர். என்​னை​விட அவ​ருக்கு தான் ரொம்ப இஷ்டம். வருஷ கணக்​குல அந்த சேறு அப்​ப​டியே இருந்​த​தால அதெல்​லாம் களி​மண் ஆகி​போ​யிருந்​தது. கால் வெச்​ச​தும் கொஞ்​ச​நே​ரத்​துக்​கெல்​லாம் அப்​ப​டியே இழுக்க ஆரம்​பிச்​சி​டும். அது காய காய ஒரு மாதிரி
இருக்​கும். முகத்​துல பேஸ் பேக் ​போட்​ட ​மா​திரி இருக்​கும். மாஸ்​டர் சொல்​லு​வார் இந்த மாதிரி பேஸ் பேக்​கெல்​லாம் நீங்க நினைச்சு கூட கிடைக்​கா​துன்னு. இயற்​கையா இருக்க இது எவ்​வ​ளவு நல்​லது தெரி​யு​மான்னு சொல்​லு​வார். அதே போல தண்​ணீ​ருக்​குள்ள மூழ்​கிட்டே ரைபல்ல சூட் பண்​ண​னும். ரொம்ப கஷ்​டமா இருக்​கும். எனக்கு ரெ​டி​யா​ன​தும் ரெடி சொன்​ன​தும் எனக்கு முன்​னாடி மைக்​கேல் மாஸ்​டர் தண்​ணீருக்​குள் ​மூழ்​கி​டு​வாரு. திடீர்ன்னு பார்த்​தீங்​கன்னா கால் விரல்​லெல்​லாம் பிடிச்​சுக்​கும். மைக்​கேல் மாஸ்​டர்​தான் கொஞ்​சம்​கூட ஈகோவே இல்​லாம தேய்த்​து​வி​டு​வாரு. ஓர் அப்பா குழந்​தையைப் பார்த்​துக்​குறா மாதிரி எங்​களை பார்த்​து​கிட்​டாரு.
​என்.சி.சி மாண​வி​கள் பற்றி கேள்வி பட்​டி​ருக்​கி​றீர்​களா அவர்​க​ளோட பேசிய அனு​ப​வம் உண்டா?​
​குயின்​மே​ரிஸ் கல்​லூரி சீனி​யர் என்.சி.சி ஸ்டு​டண்ட்ஸ் தான் எங்​க​ளுக்கு ​ டிரை​னீங் கொடுத்​தாங்க. ஜனா சார் எங்​களை கூப்​பிட்டு நீங்க எல்​லா​ரும் அந்த ஸ்டு​டண்ட்ஸ்​கிட்ட போய் பேசி பழகி ​ எப்​படி பண்​ண​னும்,​ என்ன என்ன பண்​ண​னும் தெரிஞ்​சுக்​கோங்க. அவுங்க ​ எப்​படி யெல்​லாம் பண்​றாங்​கன்னு அப்​சர்வ் பண்​ணிக்​கோங்ன்னு சொன்​னார். அதுக்கு பிறகு அவுங்​க​கிட்ட பதி​னைந்து நாள் பிராக்​டிஸ் எடுத்​து​கிட்​டோம். சூட் பண்​ணும் போது அவுங்​க​ளும் எங்க கூடவே இருந்​தாங்க. அந்​தக் காட்​டுக்​குள்ள எல்​லாம் வந்​தாங்க. எப்​படி ரைபிளை பிடிக்​க​ணும்ன்​றது எல்​லாம் அவுங்க தான் சொல்லி கொடுத்​தாங்க. அந்த சீன் எல்​லாம் சினி​மா​வுல பார்க்க நல்லா வந்​தி​ருக்​குன்னா அதுக்கு அவுங்​க​ளும் ஒரு கார​ணம். ​​​

Monday, October 26, 2009

நடி‌கை‌ சுதா‌சந்‌தி‌ரன்‌ பே‌ட்‌டி‌

மும்​பைக்​கும் சென்​னைக்​கும் பறந்து கொண்​டி​ருந்த சுதா​சந்​தி​ரனை ஏர்போர்ட் வாச​லில் சந்​தித்​தோம். போர்​டிங்​பாûஸ எல்​லாம் செக்​கிங் கவுன்​ட​ரில் கொடுத்​துக் கொண்டே நமது கேள்​வி​க​ளுக்கு விடையளிக்க ஆரம்​பித்​தார் "கலச'த்தில் சந்​தி​ர​வாக கலக்கி,​ "அரசி'யில் அட்வெ​கேட்​டாக வந்து தற்​போது "தாய'த்தில் சோலப்​பூ​வாக மலர்ந்​தி​ருக்​கும் மயூரி சுதா சந்​தி​ரன். நீண்ட இடை​வெ​ளிக்​குப் பிறகு பத்​தி​ரி​கைக்கு அளிக்​கும் பேட்டி இது.

தமிழ் தொலைக்​காட்​சி​யில் நடிக்க வந்​தது எப்​படி இருக்​கி​றது?​
​பனி​ரெண்டு வரு​டத்​திற்​குப் பிறகு தமிழ்ல நடிக்க வந்​தது ரொம்ப சந்​தோமா இருக்கு. அப்போ நான் நடிக்​கும் போது எனக்கு சரி​யான ரோல்ஸ் அமை​யல. படங்​கள் சரியா ஓடல. அதுல கொஞ்​சம் ஏமாற்​றமா இருந்​தது. இந்த சம​யத்​துல இந்​தி​யில வாய்ப்​பு​கள் நிறைய வந்​தது. அத​னால மும்​பை​யில போய் செட்​டில் ஆகிட்​டேன். அங்கே போய் டி.வி. சீரி​யல்,​ இந்தி படங்​கள் நிறைய நடிச்​சேன். அதன் பிறகு அங்கே பாலாஜி டெலி பிலிம்ஸ்ல ரொம்ப பிஸி​யாக இருந்​தேன்.

பாலாஜி டெலி பிலிம்ஸ்ல நடிச்​சதை பார்​துட்டு குட்டி பத்​மினி மேடம் போன் பண்ணி கல​சத்​துல நடிக்க கூப்​பிட்​டாங்க. அதே போல பிர​பு​நே​பால் சாரும் ஜெயா டிவி​யில ஒரு தொடர்ல நடிக்​கக் கூப்​பிட்​டார். அவுங்க இரண்டு பேரும்​தான் தமிழ் இண்​டஸ்ட்​ரிக்கு மறு​படி வர கார​ணம். "கல​சம்', "அரசி' இரண்​டும் நெகட்​டீவ் ரோல். ரொம்​பவே மேக்​கப் போட்டுக்​கிட்டு நடிச்​சேன். ராதிகா ​ மேட​மோட நடிச்​சது ரொம்ப நல்ல அனு​ப​வம். எனக்கு பார​தி​ராஜா சார் ​ படத்​துல நடிக்​க​னும் ரொம்ப நாளா ஆசை​யி​ருந்​தது. அப்போ அந்த வாய்ப்பு கிடைக்​கல. இப்போ அவ​ரோட உத​வி​யா​ளர்​தான் இந்த ​ தாயம் தொடரை எழு​து​றாரு. என்​னோட ஆசை நிறை​வே​றின திருப்தி.

​மேக்​கப்பே இல்​லாம பண்​ணி​யி​ருக்​கீங்களே?​
​மக்​கள் கிட்ட ரீச் கண்​டிப்பா இருக்​கும். விளம்​ப​ரம் பார்த்​துட்டே நிறைய பேர் எனக்கு போன் பண்ணி விசா​ரிக்​க​றாங்க. "இதுல என்​ன​மா​திரி பண்​றீங்க?​ பார்க்​க​ற​துக்கு ​ ​ ​ ​ ​ ​ ​ ரொம்ப சிம்​பிள்ளா இருக்​கீங்க,​ என்ன கதை' அப்​ப​டின்னு ரொம்ப ஆர்​வமா கேட்​கி​றாங்க. ஆடி​யன்ஸ் எவ்​வ​ளவு எதிர்​பார்ப்​போட இருக்​காங்​கன்னு தெரி​யுது. ​
​வடி​வுக்​க​ரசி மேடம் இதில் பட்​டம்​மாவா வராங்க. ஒரு சூழ்​நி​லை​யில அவுங்க ஜெயி​லுக்​குப் போக வேண்​டி​யது ஆகி​வி​டும். அவுங்​க​ளுக்கு ஐந்து மகன்​கள். அவங்​க​ளை​யும்,​ அவுங்க வீட்​டை​யும் நான் தான் மெயிண்​டன் பண்ண வேண்டி இருக்​கும். அதில் என் பெயர் சோலப்பூ. சோலப்​ பூன்னா அது ஆயி​ரம் வரு​ஷத்​துக்கு ஒரு முறை பூக்​கும் பூ. அது மாதிரி ஒரு அழ​கான ரோல். ரொம்ப எமோ​ஷோ​னல் ஆன ரொம்ப இண்​னோ​சென்ட்​டான.. அதே சம​ய​துல எந்த பிரச்​னையா வந்​தா​லும் உறு​தியா எதிர்​கொள்​கிற மாதி​ரி​யான கேரக்​டர். ​

அப்​போது நடித்​தற்​கும்,​இப்​போது நடிப்​ப​தற்​கும் எப்​படி உணர்​கி​றீர்​கள்?​
​காண்​பி​டண்ட் வந்​தி​ருக்கு. ரொம்ப நாள் கழிச்சு இங்க வந்​த​து​னால தமிழ் அவ்​வ​ளவா என்​னால பேச​மு​டி​யல. இப்போ லாங்​வேஜ் நல்லா செட் ஆகி​டுச்சு. நல்லா சர​ளமா தமிழ் பேசு​றேன். அது​மட்​டு​மல்ல மும்​பை​யில் இந்தி தொடர்​க​ளில் நிறைய நடித்​தில் நல்ல எக்ஸ்​பி​ரி​யன்ஸ் கிடைச்​ச​ருக்கு. அங்​கே​யும் சரி,​ இங்​கே​யும் சரி டைரக்​டர்​கள் நல்ல சப்​போர்ட் பண்​ணாங்க. ​ எல்​லா​ரும் நல்ல எக்ஸ்​பி​ரி​யன்ஸ் டைரக்​டர்​கள் அது​னால நிறைய அனு​ப​வம் கிடைச்​சது.

​விபத்​தில் உங்​கள் காலை இழந்த போது மீண்​டும் நடிக்க முடி​யும்னு நம்​பிக்கை இருந்​ததா​?​
​அந்த நேரத்​துல நடிக்​க​றது எல்​லாம் என் மைண்ட்ல இல்ல. எப்​ப​டி​யா​வது எந்து நடக்​க​னும் மட்​டும் ​ ​ ​ ​ ​ தான் ஆசைப்​பட்​டேன். அதுக்​காக நிறைய முயற்சி எடுத்​தேன்,​ ரொம்​ப​வும் கஷ்​டப்​பட்​டேன். பிற​கு​தான் நடிக்​க​ணும்,​டான்ஸ் பண்​ண​ணும்ன்ற ஆசை எல்​லாம் வந்​தது.

​மும்​பை​யில் உள்ள ஆடி​யன்ஸ்க்​கும்,​ தமிழ் ஆடி​யன்ஸ்க்​கும் என்ன வேற்​றுமை?​
​ரொம்ப வித்​தி​யா​சம் இருக்கு. அங்கே பார்த்​தீங்​கன்னா கொஞ்​சம் அதி​க​மாக மேக்​கப் போட்டு நடிக்​க​னும். ஆனால் மலை​யா​ளம்,​ தமிழ்ல எல்​லாம் ஓவர் மேக்​கப் எல்​லாம் இருக்​காது. தமிழ் கதை​கள் எல்​லாம் ஒவ்​வொரு குடும்​பத்​து​லை​யும் நடக்​கிற உண்​மை​யான கதை போல இருக்​கும். ரொம்ப ஏதார்த்​தமா இருக்​கும். இந்​தி​யில அப்​படி கிடை​யாது. இப்​போ​தான் ​ இந்தி டெலி​வி​ஷன் மாறிக்​கிட்டு வருது. ​ மெட்​ரோ​வை​விட்டு ​ நகர்ந்து கிரா​மங்​க​ளுக்​குப் போக ஆரம்​பி​தி​ருக்​கி​றார்​கள். இருந்​தா​லும் இந்​தி​யில் ஜூ​வல்​லரி,​ ஆடம்​பர சாரின்னு எல்​லாமே கொஞ்​சம் அதி​கமா இருக்​கும். ஆனால் தமி​ழில் அப்​ப​டி​யில்லை. தமிழ் ஆடி​யன்ûஸ சீட் பண்ண முடி​யாது.

​இது​வரை நீங்​கள் நடித்​த​தில் மறக்க முடி​யாத கதா​பா​தி​ரம் எது ஏன்?​
​"மயூரி' படம்​தான் என் வாழ்க்​கை​யில் மறக்​கவே முடி​யாது. அந்த மாதிரி படம் யாரும் நடிக்க மாட்​டாங்க. அப்​ப​டியே பண்​ணாக்​கூட கதை யாரைப் ​ பற்​றியோ அவுங்​களே அதில் நடிக்​கி​றது ரொம்ப கஷ்​டம். அந்த மாதிரி அமை​யாது. நான் ரொம்ப லக்கி என்​னோட வாழ்க்​கையே பட​மாக்கி அதுல நானே நடிச்​சி​ருக்​கேன். அதுக்​காக எனக்கு 1985ல தேசிய விருது கிடைச்​சது. இதை​விட பெருமை வேற எது​வுமே இல்ல என் வாழ்க்​கைல.

​டான்ஸ் ஸ்கூல் நடத்​து​றீங்​களே?​ அதில் கிடைச்ச அனு​ப​வம்?​
​மும்​பை​யில டான்ஸ் ஸ்கூல் வெச்​சி​ருக்​கேன். டான்ஸ் ஸ்கூல்ல போய் உட்​கார்ந்​துட்டா மன​சுக்கு ரொம்ப நிம்​மதி கிடைக்​கும்.ரொம்ப நல்லா போய்​கிட்டு இருக்கு. ​

​மும்​பைக்​கும்,​ சென்​னைக்​கும் பறந்து கொண்​டி​ருக்​கி​றீர்​களே?​ சென்​னை​யில் ​ எப்போ வீடு வாங்க போறீங்க?​
​இந்​தக் கேள்வி கொஞ்​சம் லேட். போன​மா​தம் தான் சென்​னை​யில் வீடு வாங்​கி​னேன். இப்போ சூட்​டிங்​கிற்​காக மாதத்​தில் பதி​னைந்து,​ இரு​பது நாள் இங்​கே​தான் இருக்​கி​றேன். முன்பு மும்​பை​யில் இருந்து சென்​னைக்கு வந்து கொண்​டி​ருந்​தேன். இப்போ சென்​னை​யில் இருந்து மும்​பைக்​குப் போய் வரு​கி​றேன்
.
​உங்க குடும்​பம் பற்றி?​
​எனக்​குக் குழந்​தை​கள் இல்லை. என் கண​வர் ரவி​யும் நானும் தான். அவர் ​ ​ ​ ​ ​ சினிமா இன்​டஸ்ட்​ரி​யில் டைரக்​ஷன் பீல்​டு​ல​தான் இருந்​தாரு. அதுக்​குப் பிறகு கனடா போய் சில வரும் ஓர்க் பண்​ணி​கிட்டு இருந்​தாரு. இப்​போது எங்​கள் நாட்​டி​யப்​பள்​ளியை அவர்​தான் பார்​து​கிட்டு இருக்​கி​றார்.

Tuesday, October 13, 2009

உறுதியாக இருந்தோம் என்றால் நம்மால் சாதிக்க முடியும். - ரா‌தி‌கா‌சரத்‌குமா‌ர்‌


அரசி இப்போது "செல்லமே' ஆகிவிட்டார். ஆமாம்! இதுவரை அரசியாக தமிழ் நெஞ்சங்களின் இல்லத்திற்கு வந்து இதயத்தில் இடம் பிடித்த ராதிகா, இப்போது போலீஸ் தொப்பியைக் கழட்டி வைத்துவிட்டு "செல்லமாக' செல்லம்மாவாகி பாசத்தைக் கொட்ட வருகிறார். சித்தி தொடருக்காக திருச்சி ஸ்ரீரங்கம், சென்று படப்பிடிப்பை நடத்தி வந்தவர், இப்போது திருக்கோவில்கள் குடிகொண்டிருக்கும் கும்பகோணம், சுவாமிமலையைச் சுற்றி படமாக்கி வந்திருக்கிறார். ஒரு மாலை வேளையில் அவரது அலுவலகத்தில் அவரிடம் பேச ஆரம்பித்தோம்:

செல்லமே' என்ன மாதிரியான தொடர்? மற்ற தொடர்களிலிருந்து இது எப்படி மாறுபட்டது?

அரசி, சித்தி இரண்டிலும் என்னை மையப்படுத்தி எடுத்திருந்தோம். "செல்லமே' ஒரு குடும்பத்தின் கதை. குடும்பத்தில் எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது பெரிய சவாலாக இருக்கும். இவங்க கெட்டவங்க. இவங்க ரொம்ப நல்லவங்க என பட்டியல் போடாமல் சாதாரண குடும்பங்களில் உள்ள கஷ்ட நஷ்டங்களைப் பாசப் பிரச்னைகளோடு சொல்கிற கதை. இன்றைய காலகட்டத்தில் கூட்டு குடும்ப வாழ்க்கையின் பெருமையை உணர்த்துவதாக இருக்கும். உயிருக்கு உயிரான நண்பர்கள்கூட சொத்துக்கு ஆசைப்பட்டு எதிரியாகிவிடுகிறார்கள். உறவுகள் பிரிந்தால் அந்தக் குடும்பம் எப்படித் தத்தளிக்கும் என்பதைச் சொல்லியிருக்கிறோம்.

வேறு என்ன புதிய சிறப்புகள் இருக்கிறது?

இந்தத் தொடர் கிராமிய மணத்தோடு இருக்கும்."மாறன்' என்கிற படத்தை இயக்கிய ஜவகர், இந்தத் தொடரை டைரக்ட் செய்கிறார். இதில் முதன் முறையாக என்னோடு சேர்ந்து எனக்கு அண்ணனாக ராதாரவி நடிக்கிறார். பெரும்பாலான காட்சிகளை கும்ப கோணம், சுவாமிமலை, திருவிடைமருதூர் போன்ற இடங்களில் எடுத்திருக்கிறோம். சினிமா படப்பிடிப்புக்குச் சென்ற மாதிரி அதே குவாலிட்டியோடு அவுட்டோரில் படமாக்கப்பட்டிருக்கிறது.

இரண்டு வருஷமா அரசியாக வாழ்ந்தீர்கள்? அந்தக் கதாபாத்திரத் திலிருந்து எப்படி வெளியே வந்தீர்கள்?

ரொம்ப கஷ்டமாகத்தான் இருந்தது. நான் அந்தக் கதாபாத்திரத்திலிருந்து வெளியே வர ரொம்ப நாளாகக் காத்திருந்தேன். சினிமாவில் வந்து ரெண்டு வேடம் பண்றதுக்கு நிறைய நேரம் எடுத்து பண்ணுவோம். டிவியைப் பொறுத்த வரைக்கும் நிற்கவே டயம் கிடையாது. அப்படி இருக்கும்போது ரெண்டு ரோல் செய்வது ரொம்ப கஷ்டமான விஷயம். குரலை மாற்ற வேண்டும், டிரெஸ் மாற்ற வேண்டும். ரொம்ப ரொம்ப சேலஞ்சிங்கான கேரக்டர். அந்த கேரக்டருக்கு குட்பை சொல்ற நேரம் வந்தது.. கஷ்டமாக இருந்தாலும் சந்தோஷம்தான்.

இரவு ஒன்பது முப்பது என்றால் அது உங்கள் நேரம் என பத்து வருடங்களுக்கும் மேலாக நிலைக்க வைத்துவிட்டீர்கள்? அதன் ரகசியம் என்ன?

ரகசியமே கிடையாது. எல்லாம் போராட்டம்தான். இயல்பிலேயே எனக்குள்ளே போராட்ட குணம் இருப்பதால் அதைத் தக்கவைத்துக் கொள்ள முடிகிறது. கஷ்டம் என்று சொல்ல முடியாது. தினம் ஒரு பிரச்னையை உருவாக்கி அதற்கு எதிர்பார்ப்பு உருவாக்க நிறைய உழைக்க வேண்டியிருக்கிறது. சில சமயம் மிகப்பெரிய சிக்கல்கள் எல்லாம் வரும். அதையெல்லாம் தாங்கி சமாளிக்க வேண்டியதுதான்.

"செல்வி'யாவும் "அரசி'யாகவும் நடித்தீர்கள். இதில் எந்த வேடம் உங்களுக்குப் பிடித்திருந்தது?

ரெண்டும் வித்தியாசம்தான். "செல்வி' மூணு வருஷம் பண்ணுனேன். "அரசி' ரெண்டரை வருஷம் பண்ணுனேன். எனக்கு நான் எடுத்துக் கொண்ட எல்லா வேடங்களும் பிடிக்கும், அதை நான் ரசித்துப் பண்ணுவதால்.

நீங்கள் தயாரிக்கும் "செந்தூரப்பூவே' தொடரில் நீங்கள் ஏன் நடிக்கவில்லை?

எவ்வளவுதான் நடிக்கிறது? நான் பிஸினûஸப் பார்க்கணும். தயாரிப்பைப் பார்க்கணும். நடிப்பைப் பார்க்கணும். பசங்களைப் பார்க்கணும். கணவரைப் பார்க்கணும். எல்லாம் இருக்கே. ஒரு சீரியலுக்கு மேல் நடிக்கிறது ரொம்ப கஷ்டமான வேலை. நேரம் கிடைக் கும்போது பசங் ககூடதான் இருக்கேன். அவங்க ஹோம் ஒர்க் பார்ப்பது, ஸ்கூல் பிரச்னைகளைப் பற்றிப் பேசுவது இதற்கே நேரம் போய்விடுகிறது.

சில நடிகைகளிடம் பேசியபோது உங்களை ரோல் மாடலாக நினைக்கிறார்கள்? அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

கீழே விழுந்தாலும் டக்குன்னு எழுந்திருச்சி நடக்க வேண்டும். உருண்டு புரண்டு அழுதுகிட்டு இருக்கமுடியாது. அதை ரொம்ப சீக்கிரமா கத்துக்கிட்டேன். அதைப் பார்த்து அப்படி நினைச்சிருப் பாங்க. நான் எப்படி வந்தேன், எப்படி இருக்கேன், எப்படி எல்லாம் விழுந்து அடி பட்டு எழுந்தேன் என எல்லாமே அவர்களுக்குத் தெரிகிறதில்லையா?

வேறு படங்களில் நடிப்பதில்லையே ஏன்?

நடிக்கக் கூடாது என்று இல்லை. நேரம் சரியாக அமையவில்லை. கண்டிப்பாக நடிப்பேன். சரியான நேரமும் கேரக்டரும் அமைந்தால் நிச்சயம் நடிப்பேன்.

உங்களுடைய "அரசி' இயக்குநர் சமுத்திரக்கனி, "நாடோடிகள்' படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என எல்லா மொழிலேயும் வாய்ப்பு கிடைத்து உயர்ந்திருக்கிறாரே? அவரைப் பற்றி?

அந்தக் கதையை நான் பண்ண வேண்டியது. அவர் என்னிடம் அந்தக் கதையை சொன்னபோதே நான் சொன்னேன். ரொம்ப நல்லா இருக்கு கனி. இந்தச் சமயத்துல எனக்கு வேறு கமிட்மென்ட் இருந்ததால் இந்தப் படம் பண்ண முடியாமல் போய்விட்டது. இருந்தாலும் அவர் நம்பிக்கையோட ஜெயிச்சிருக்கார். "செல்லமே' தொடர் ஆரம்பமாவதைக் கேள்விப்பட்டு, "உங்க புது சீரியலில் பத்து நாள் வந்து ஒர்க் பண்ணிட்டு போவட்டுமா?'ன்னு போன் செய்தார். அப்படி ஒரு சென்டிமெண்ட் அவரிடம்.

சின்னத்திரை மூலமா மக்களைத் தினம் சந்திக்கிறீர்கள்? அவர்களுக்கு இதன் மூலமாக என்ன சொல்ல விரும்புறீர்கள்?

நான் நினைக்கிறது சொல்றது எல்லாமே சீரியல் மூலமா சொல்லிடுறேன். அடிப் படையில் எனக்கு "நீ அப்படி இருக்கணும், இப்படி இருக்கணும்' என்று அட்வைஸ் பண்ணுவதெல்லாம் பிடிக்காது.எந்தத் துறையில் இருந்தாலும் குடும்பத் தலை வியா இருந்தாலும் அல்லது வேலைக்குச் சென்றாலும் சமையல்காரியாக இருந்தாலும் எந்த இடத்திலும் உறுதியாக இருந்தோம் என்றால் நம்மால் சாதிக்க முடியும்.
ஸ்ரீதேவி குமரேசன்

என் கல்யாணம் எப்போது - நடி‌கை‌ சங்‌கவி‌


கன்னடத்தில் பிஸியாக இருக்கும் நடிகை சங்கவி ஜெயா டிவியில் புதியதாக ஒளிபரப்ப இருக்கும் புதிய தொடர் "சாவித்திரி'யில் அதன் நாயகியாக நடிக்கிறார். நடிகை சங்கவியை படப்பிடிப்புத் தளத்தில் சந்தித்தோம். ஒரு ஷாட் முடிந்து அடுத்த ஷாட்டிற்குச் செல்லும் இடைவெளியில் நம்மிடம் பேசினார்.
ஜெயா டிவியில் ஆரம்பமாகும் சாவித்திரி என்ன மாதிரியான கதை? அதில் நடிக்கிற அனுபவம் எப்படி இருக்கிறது?

சாவித்திரி ஒரு நடிகையின் கதை. கதையைக் கேட்கும்போதே எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. மூன்று வித்தியாசமான கேரக்டர். நல்லா பெர்ஃபாம் பண்ணுவதற்கான கேரக்டர். நல்ல சப்ஜெக்ட். கேரக்டர் மாறிக் கொண்டே இருக்கும். ரொம்ப இன்னோசென்ட்டாக இருக்கிற ஒரு பெண் அவள் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்னைகள், அதனால் ஏற்படுகின்ற மாற்றங்கள், அதில் இருந்து மீண்டும் எப்படி ஒரு நல்ல நிலைக்கு வருகிறாள் இதெல்லாம் சொல்வதுதான் "சாவித்திரி'. அழகே இல்லாத ஒரு பெண் தன்னை எப்படி ஒரு நடிகையாக்கிக் கொள்கிறாள். ஒரு நடிகையாக அவளுக்கு ஏற்படும் ஏமாற்றங்களை எப்படிச் சந்திக்கிறாள் என்பது போன்ற கதை. நிறைய முயற்சியெடுத்துப் பண்ணியிருக்கேன். மக்களிடம் எப்படி வரவேற்பு இருக்கும் என்று தெரியவில்லை.

சினிமா, சின்னத்திரை என்ன வித்தியாசம்?

சின்னத் திரையில் நடிக்கும்போது நான்தான் ஹீரோயின். சின்னத் திரையில் பெண்களுக்குத்தான் அதிகம் முக்கியத்துவம் இருக்கும். நடிப்புத் திறமையை முழுமையாகக் காட்டுவதற்கு வாய்ப்பும் இருக்கும். சினிமாவில் அப்படிக் கிடையாது. வந்தோமா? நாலு சீன் பண்ணினோமா? டான்ஸ் பண்ணினோமா? அப்படித்தான் இருக்கும்.

தொடர்களில் நடிப்பதால் சினிமா "டச்' குறைந்திருக்குமே?

அப்படி ஒன்றும் இல்லை. நான் இப்போதும் சினிமாவில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். இப்போது கூட "மன்மதராஜா' போய்க் கொண்டு இருக்கிறது. கன்னட படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

எல்லா மொழிகளிலும் சேர்த்து எத்தனை படங்கள் நடித்திருக்கிறீர்கள்? அவற்றில் மறக்க முடியாத படம்?

தமிழ், தெலுங்கு, கன்னடம் மூன்று மொழிகளிலும் சேர்த்து இதுவரை 100 படங்கள் பண்ணியிருக்கிறேன். மறக்க முடியாத படம் என்று சொல்வதை விட எனக்கு நல்ல பெயர் வாங்கித் தந்த படம் "செந்தூரம்' தெலுங்குப் படம். அந்தப் படத்திற்கு நேஷனல் அவார்டு கிடைத்தது. தமிழில் "ரசிகன்' படம்தான் எனக்கு ஒரு பிரேக் கொடுத்தது. அதற்குப் பிறகு கேரக்டர் ரோல் என்று சொல்வது போல அமைந்தது "பொற்காலம்' தான்.

சினிமாவுக்கு இப்போது வருகிற ஆர்ட்டிஸ்ட் சினிமாவைப் பற்றி நன்றாகத் தெரிந்து கொண்டு வருகிறார்கள். நான் அந்த மாதிரி ட்ரெயினிங் எதுவும் எடுத்துக் கொண்டு வரவில்லை. இங்கே வந்துதான் எல்லாவற்றையும் கற்றுக் கொண்டேன்.

தமிழ் தவிர பிறமொழிப் படங்களில் என்ன மாதிரியான கேரக்டர்ஸ் பண்ணுகிறீர்கள்?

சமீபத்தில் கன்னடத்தில் "அணாதெரு' - பிதாமகன் ரீமேக், அதில் உபேந்திரா - விக்ரம் ரோல் பண்ணினார். தர்ஷன் - சூர்யா ரோல் பண்ணினார். அடுத்து ரமேஷ் அரவிந்த் ஜோடியாக ஒரு படம் பண்ணிக் கொண்டு இருக்கிறேன். அந்தப் படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. அது மராட்டி மொழிப் படம் ரீமேக். அப்புறம் "இந்திரா' என்று ஒரு படம். தர்ஷன் ஜோடியாக நடிக்கிறேன். முனி ரத்தினம் சார் ரீமேக் செய்த "ரத்தக் கண்ணீர்' படத்தில் நடித்தேன். அது நல்ல பெயர் வாங்கித் தந்தது.

சூட்டிங் இல்லாத நேரத்தில் உங்களுடைய பொழுதுபோக்கு?

நண்பர்களோடு ஜாலியாக அரட்டை அடிப்பது. சினிமாவுக்குப் போவது. வெளியே போய் சாப்பிடுவது. சிலநேரம் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து கொண்டு இருப்பது.

எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள்?

என் கல்யாணம் எப்போது என்று எனக்கே தெரியாது. கடவுளுக்குத்தான் தெரியும். வீட்டில் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இன்னும் யாரும் முடிவாகவில்லை. முடிவானதும் எல்லாருக்கும் சொல்கிறேன்.
ஸ்ரீதேவி குமரேசன்

ஆர்‌த்‌தி‌-கணே‌ஷ்‌கர்‌ ஜா‌லி‌ கலா‌ட்‌டா‌...


இந்‌த மாதம் 23ம்‌ தே‌தி‌ நடக்கவிருக்கும் திருமண வேலைகளில் பரபரப்பாக இருக்கும் "மானாட மயிலாட' புகழ் ஆர்த்தி - கணேஷ் இருவரையும் ஒரு விழாவில் மடக்கிப் பிடித்தோம். இதோ அவர்களுடன் ஒரு ஜாலி கலாட்டா...

சின்னத்திரை, பெரிய திரை இரண்டிலும் நீங்கள் இருவரும் ஒன்றாக நடித்திருக்கிறீர்கள்? உங்கள் இருவரில் யார் முதன்முதலில் அன்பைத் தெரிவித்தீர்கள்?

ஆர்த்தி:அன்பைத் தெரியப்படுத்தியது என்று எதுவும் இல்லை. இருவரும் சிறுவயதிலிருந்து குடும்ப நண்பர்கள். அவரோட அம்மா இறந்த கொஞ்சநாள்லேயே அவுங்க பாட்டியும் இறந்துட்டாங்க. அவர்களுக்குப் பிறகு அவுங்க வீட்டைக் கவனித்துக் கொள்ள பெண்கள் யாரும் இல்லை. இந்தச் சமயத்தில் எங்கள் வீட்டில் எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்கள். ஆனால் அவருக்கு பெண் பார்க்க அவரது வீட்டில் யாரும் இல்லை. அப்பா மட்டும்தான். அவரும் அம்மா இறந்ததில் இருந்து ரொம்ப உடைந்து போய் இருந்தார். அதனால நாங்க ரெண்டு பேரும் மூணு மாதத்திற்கு முன்பு இது பற்றிப் பேசினோம். எங்க அப்பாவிடம் கலந்து சொல்றேன்னு சொன்னார். அவுங்க அப்பாவும் முறைப்படி வந்து எங்க வீட்ல பொண்ணு கேட்டார்.

உங்கள் இருவரையும் இணைத்து நிறையக் கிசுகிசு வந்ததே?
ஆர்த்தி:எங்களைப் பற்றி நிறைய கிசுகிசு எல்லாம் வந்தது. அது எங்களுக்கு ரொம்ப வருத்தமா இருக்கும். எங்க அம்மா ரொம்ப பீல் பண்ணுவாங்க. நல்ல பேமிலி, நல்ல பையன், நல்ல நட்பை இப்படிக் கெடுக்கிறாங்களேன்னு. இதனால் இரண்டு பேரோட பேரும் கெட்டுப் போகுதேன்னு கவலைப்பட்டாங்க. அந்த மாதிரி கிசுகிசு எல்லாம் வரும்போது அவர்களிடம் போய் சண்டை போட வேண்டும் என்று தோன்றும். அது போல கிசுகிசு வந்ததுனாலேயே நாங்கள் இரண்டு பேரும் ஒரு மூன்று மாதம் மீட் பண்ணவே இல்லை. அப்படி நாங்கள் காதலித்தால் இப்போ சொல்ற மாதிரி அப்பவே சொல்லிருக்கப் போறோம். இதுல என்ன வந்திருக்கு. நாங்க என்ன தப்பாவா முடிவெடுப்போம். உண்மையிலேயே காதல் கீதல் என்று ஒன்றும் கிடையாது. நீறைய சேர்ந்து நடித்திருக்கோம். அதனால வந்த வதந்திகள்.

உங்கள் இரண்டு பேரையும் கணவன் - மனைவியாகத்தான் மக்கள் நினைத்தார்கள். அதைப் பற்றி என்ன பீல் பண்ணுவீங்க?

கணேஷ்:எங்கள் இருவருக்கும் திருமணம் முடிவானது தெரிந்ததும் நிறையப் பேர் போன் பண்ணிக் கேட்டாங்க. இப்போதானா உங்கள் திருமணம். பேப்பர்ல செய்தி எல்லாம் கொடுத்து...காமெடியெல்லாம் பண்ணாதீங்க என்று சொன்னார்கள். கணேஷ் உண்மையைச் சொல்லு. முன்பே உனக்கு கல்யாணம் ஆகலன்னு சிலர் கேட்டாங்க. எனக்குத் தூக்கிப் போட்டுட்டு அடப்பாவிகளான்னு.

சின்ன வயதில் இரண்டு பேரும் ஒன்றாகப் படங்கள் நடித்திருக்கிறீர்கள்? வளர்ந்த பிறகு எப்போ எங்கே எப்படிச் சந்தித்தீர்கள்?

ஆர்த்தி:சின்ன வயசுல படங்கள் ஒண்ணா நடிச்சோம். அதன் பிறகு ஒரு பெரிய இடைவெளி ஏற்பட்டது. கிட்டத்தட்ட ஓர் ஆறுவருடம் கழித்து சன் டிவியில சூப்பர்10 நிகழ்ச்சிக்காக மறுபடியும் இரண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து பண்ணினோம். முதல் நாள் சூட்டிங் ஸ்பாட்லதான் மீட் பண்ணினோம்.
கணேஷ்:சூப்பர் 10 நிகழ்ச்சியிலதான் சந்தித்தோம். முதல் சந்திப்பிலேயே அடி பின்னி எடுத்துட்டாங்க.
ஆர்த்தி:ஆறு வருஷம் தொடர்ந்து நடிச்சோம். அந்த நிகழ்ச்சியில எங்க ரெண்டு பேரோட ஜோடி நல்லா இருக்குன்னு கலைஞர் டிவியில கூப்பிட்டாங்க. கலைஞர் டிவியில் பல நிகழ்ச்சிகள் பண்ணினாலும் மானாட மயிலாடதான் எங்களுக்குப் பெரிய பிரேக் கொடுத்தது.

திருமணத்திற்குப் பின்பு தொடர்ந்து நடிப்பீங்களா?

கணேஷ்:வழக்கமாப் பெண்களைத்தானே கேட்பீங்க. இப்போ எங்களையும் கேட்க ஆரம்பிச்சிட்டீங்களா?
ஆர்த்தி:திருமணத் திற்குப் பிறகு நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு திரும்ப வந்து நடிக்கிற மாதிரி பிட் போடறது எல்லாம் கிடையாது. கண்டிப்பா ரெண்டு பேருமே நடிப்போம். சினிமா எங்களுடைய தொழில் மட்டுமல்ல. உயிர்.

Wednesday, September 30, 2009

மறக்கமுடியாதரசிகர்! - அர்‌ச்‌சனா‌


சீரியலில் நடிப்பதை விட்டு விட்டு இப்போது காம்பியரிங் மட்டும் செய்து வருகிறார் "அரசி' புகழ் அர்ச்சனா. இதில் அவரது ரசிகர்கள் பலருக்கு வருத்தம். இது குறித்து அவரிடமே கேட்டுவிடலாம் என ஒரு ஷுட்டிங் ஸ்பாட்டில் அவரை மடக்கிப் பேசினோம்:

நீங்கள் இந்தத் துறைக்கு வரவேண்டும் என்று எப்போது நினைத்தீர்கள்?

நான் கல்லூரியில் படிக்கும்பொழுதே இந்தத் துறையில்தான் வரவேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். ரொம்பரொம்ப பிடித்துத்தான் வந்தேன்.

தொகுப்பாளினியாக இருந்த நீங்கள் திடீரென நடிகையானது எப்படி?

எனக்கு நடிப்பதைவிட, காம்பியரிங் செய்வதில்தான் அதிக விருப்பம். ஒரு நிகழ்ச்சியில் என்னைப் பார்த்துவிட்டு இயக் குனர் சமுத்திரக்கனி முதன்முதலில் அரசி தொடரில் நடிப்பதற்கு அழைத்தார். எனக்கு நடிப்பெல்லாம் வராது என்று பயந்தேன். அவர்தான் உன்னால முடியும் தைரியமா செய் என்று என்கரேஜ் செய்தார். ராதிகா மேடத்தோடு நடிக்கிற வாய்ப்பு வேறு. ஏன் வீண் செய்ய வேண்டும் என்று ஒத்துக் கொண்டேன். ஆனால் அரசி தொடர் மூலம் மக்கள் மனதில் எனக்கு ஒரு பெரிய அங்கீகாரம் கிடைத்தது.

திடீரென நாடகத்தில் நடிப்பதை ஏன் விட்டீர்கள்?

எனக்கு திருமணம் ஆனதினால் பாதியில் விலகிவிட்டேன். நடிப்பு, காம்பியரிங், குடும்பம் என எல்லாத்தையும் ஒரே நேரத்தில் கவனிக்க முடியாது. நேரம் இருக்காது என் பதினால் நடிப்பில் இருந்து விலகிவிட்டேன். குடும்பம் என்று வந்தபிறகு அதைக் கொஞ்சம் விட்டுக் கொடுக்கத்தானே வேண்டும். தற்போது வேறு எந்தத் தொடரிலும் நடிக்கவில்லை. காம்பியரிங் மட்டும் செய்கிறேன்.

சொந்தமாக நிகழ்ச்சிகள் தயாரிப்பது அல்லது இயக்குவது என ஏதாவது ஐடியா இருக்கிறதா?

இதுவரைக்கும் அதுபோன்ற எண்ணமில்லை அப்படி வந்தால் கண்டிப்பாக செய்வேன். உங்கள் திருமணம் காதல் திருமணமா? இல்லை... இல்லை...(அலறுகிறார்) வீட்டில் பார்த்து முடிவு செய்த பின்புதான் காதலித்தோம். நிச்சயத்திற்கும், திருமணத்திற்கும் இடையே ஆறுமாத இடைவெளி இருந்தது அப்போதுதான் கடலை போட்டோம்.

உங்கள் கணவர் எந்தளவிற்கு உங்களை புரிந்து கொண்டார்? உங்கள் நிகழ்ச்சிகளை பார்த்துவிட்டு என்ன சொல்லுவார்?

திருமணத்திற்கு முன்பு என் கணவர் அமெரிக்காவில் இருந்தார். என் நிகழ்ச்சிகளை எல்லாம் பார்த்து பார்த்து உடனுக்குடன் விமர்சிப்பார். அப்போதே ஏதாவது ஒரு ஷோ வந்தால் கூட அதைப் பார்த்துவிட்டு இப்படி பண்ணலாமே.. அப்படி பண்ணலாமே என்று சொல்லுவார். எந்த தவறு என்றாலும் வெளிப்படையாகச் சொல்வார்.

சினிமாவில், சின்னத்திரையில் நீங்கள் அதிகம் மதிக்கும் நபர் யார்?

சின்னத் திரையில்தான் எனக்கு அதிகம் தெரியும். எனக்கு மிகவும் பிடித்தவர்கள் என்று சொன்னால் அம்மு. சந்தோஷ் இவர்கள்தான்.

ரசிகர்களைச் சந்தித்திருக்கிறீர்களா? அதில் ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவம்?

காளிதாஸ் என்ற ரசிகர். அவர் அடிக்கடி ஃபோன் செய்துகொண்டே இருப்பார். ஒரு நிகழ்ச்சியில் அவரைச் சந்தித்தேன். மிகவும் சந்தோஷப்பட்டார். என் அப்பா, அம்மா போன்று சாப்பிட்டீங்களா, தூங்குனீங்களா, உடம்பை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்... என்று பாசத்தைப் பொழிந்தார். அந்த ரசிகரை மறக்கமுடியாது.

வி.ஐ.பி.களில் உங்களைப் பாராட்டியவர் யார்?

இயக்குனர் சமுத்திரகனிதான் பாராட்டியிருக்கிறார். அவர் எதிர்பார்க்கும் அளவிற்கு நடித்திருந்தால் கண்டிப்பாக பாராட்டுவார். சிவசந்திரன் சார் கூட பாராட்டியிருக்கிறார்.

தினமும் சன் டிவியில் பிறந்த நாள் வாழ்த்து நிகழ்ச்சியில் குட்டி குட்டி செய்தி சொல்வீங்களே.. அதை எல்லாம் யார் தொகுத்து கொடுப்பார்கள்?

எங்க தயாரிப்பாளர்தான். அவரே நூலகத்திலிருந்து புத்தகங்கள் எடுத்துவந்து, நிகழ்ச்சிக்கான சுவையான செய்திகளை தயாரித்துக் கொடுப்பார்.சீரியலில் நடிப்பதை விட்டு விட்டு இப்போது காம்பியரிங் மட்டும் செய்து வருகிறார் "அரசி' புகழ் அர்ச்சனா. இதில் அவரது ரசிகர்கள் பலருக்கு வருத்தம். இது குறித்து அவரிடமே கேட்டுவிடலாம் என ஒரு ஷுட்டிங் ஸ்பாட்டில் அவரை மடக்கிப் பேசினோம்:

நீங்கள் இந்தத் துறைக்கு வரவேண்டும் என்று எப்போது நினைத்தீர்கள்?

நான் கல்லூரியில் படிக்கும்பொழுதே இந்தத் துறையில்தான் வரவேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். ரொம்பரொம்ப பிடித்துத்தான் வந்தேன்.

தொகுப்பாளினியாக இருந்த நீங்கள் திடீரென நடிகையானது எப்படி?

எனக்கு நடிப்பதைவிட, காம்பியரிங் செய்வதில்தான் அதிக விருப்பம். ஒரு நிகழ்ச்சியில் என்னைப் பார்த்துவிட்டு இயக் குனர் சமுத்திரக்கனி முதன்முதலில் அரசி தொடரில் நடிப்பதற்கு அழைத்தார். எனக்கு நடிப்பெல்லாம் வராது என்று பயந்தேன். அவர்தான் உன்னால முடியும் தைரியமா செய் என்று என்கரேஜ் செய்தார். ராதிகா மேடத்தோடு நடிக்கிற வாய்ப்பு வேறு. ஏன் வீண் செய்ய வேண்டும் என்று ஒத்துக் கொண்டேன். ஆனால் அரசி தொடர் மூலம் மக்கள் மனதில் எனக்கு ஒரு பெரிய அங்கீகாரம் கிடைத்தது.

திடீரென நாடகத்தில் நடிப்பதை ஏன் விட்டீர்கள்?

எனக்கு திருமணம் ஆனதினால் பாதியில் விலகிவிட்டேன். நடிப்பு, காம்பியரிங், குடும்பம் என எல்லாத்தையும் ஒரே நேரத்தில் கவனிக்க முடியாது. நேரம் இருக்காது என் பதினால் நடிப்பில் இருந்து விலகிவிட்டேன். குடும்பம் என்று வந்தபிறகு அதைக் கொஞ்சம் விட்டுக் கொடுக்கத்தானே வேண்டும். தற்போது வேறு எந்தத் தொடரிலும் நடிக்கவில்லை. காம்பியரிங் மட்டும் செய்கிறேன்.

சொந்தமாக நிகழ்ச்சிகள் தயாரிப்பது அல்லது இயக்குவது என ஏதாவது ஐடியா இருக்கிறதா?

இதுவரைக்கும் அதுபோன்ற எண்ணமில்லை அப்படி வந்தால் கண்டிப்பாக செய்வேன். உங்கள் திருமணம் காதல் திருமணமா? இல்லை... இல்லை...(அலறுகிறார்) வீட்டில் பார்த்து முடிவு செய்த பின்புதான் காதலித்தோம். நிச்சயத்திற்கும், திருமணத்திற்கும் இடையே ஆறுமாத இடைவெளி இருந்தது அப்போதுதான் கடலை போட்டோம்.

உங்கள் கணவர் எந்தளவிற்கு உங்களை புரிந்து கொண்டார்? உங்கள் நிகழ்ச்சிகளை பார்த்துவிட்டு என்ன சொல்லுவார்?

திருமணத்திற்கு முன்பு என் கணவர் அமெரிக்காவில் இருந்தார். என் நிகழ்ச்சிகளை எல்லாம் பார்த்து பார்த்து உடனுக்குடன் விமர்சிப்பார். அப்போதே ஏதாவது ஒரு ஷோ வந்தால் கூட அதைப் பார்த்துவிட்டு இப்படி பண்ணலாமே.. அப்படி பண்ணலாமே என்று சொல்லுவார். எந்த தவறு என்றாலும் வெளிப்படையாகச் சொல்வார்.

சினிமாவில், சின்னத்திரையில் நீங்கள் அதிகம் மதிக்கும் நபர் யார்?

சின்னத் திரையில்தான் எனக்கு அதிகம் தெரியும். எனக்கு மிகவும் பிடித்தவர்கள் என்று சொன்னால் அம்மு. சந்தோஷ் இவர்கள்தான்.

ரசிகர்களைச் சந்தித்திருக்கிறீர்களா? அதில் ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவம்?

காளிதாஸ் என்ற ரசிகர். அவர் அடிக்கடி ஃபோன் செய்துகொண்டே இருப்பார். ஒரு நிகழ்ச்சியில் அவரைச் சந்தித்தேன். மிகவும் சந்தோஷப்பட்டார். என் அப்பா, அம்மா போன்று சாப்பிட்டீங்களா, தூங்குனீங்களா, உடம்பை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்... என்று பாசத்தைப் பொழிந்தார். அந்த ரசிகரை மறக்கமுடியாது.

வி.ஐ.பி.களில் உங்களைப் பாராட்டியவர் யார்?

இயக்குனர் சமுத்திரகனிதான் பாராட்டியிருக்கிறார். அவர் எதிர்பார்க்கும் அளவிற்கு நடித்திருந்தால் கண்டிப்பாக பாராட்டுவார். சிவசந்திரன் சார் கூட பாராட்டியிருக்கிறார்.

தினமும் சன் டிவியில் பிறந்த நாள் வாழ்த்து நிகழ்ச்சியில் குட்டி குட்டி செய்தி சொல்வீங்களே.. அதை எல்லாம் யார் தொகுத்து கொடுப்பார்கள்?

எங்க தயாரிப்பாளர்தான். அவரே நூலகத்திலிருந்து புத்தகங்கள் எடுத்துவந்து, நிகழ்ச்சிக்கான சுவையான செய்திகளை தயாரித்துக் கொடுப்பார்.