Wednesday, December 2, 2009

டாக்​டர் ஆன​தும்​தான் டைரக்​ஷன்!


"அலை​பா​யுதே', "மொழி' படங்​க​ளுக்​குப் பிறகு கலை​ஞர் டிவி​யில் ஒளி​ப​ரப்​பாகி கொண்​டி​ருக்​கும் "தெக்​கத்​திப்​பொண்ணு' தொட​ரி​லும் கடந்த திங்​கள்​கி​ழமை முதல் புதி​ய​தாக துவங்​கி​யி​ருக்​கும் தொடர் "யாது​மாகி நின்​றாய்' என்ற தொட​ரில் நடிக்​கும் சொர்​ண​மால்​யாவை அவ​ரது இல்​லத்​தில் உள்ள நாட்​டி​யக் கூடத்​தில் சந்​தித்​தோம். ​நுழை​வாயி​லி​லேயே ஒரு சின்ன அம்​மன் சிலை​யைத் தரி​சித்​து​விட்டு உள்ளே சென்​றோம். நட​ரா​ஜர் சிலை​யின் முன் அமர்ந்து அங்கே அபி​ந​யம் பிடிக்​கும் பிள்​ளை​க​ளுக்கு ஜதி சொல்​லிக்​கொண்டே ​ நமக்கு பதி​ல​ளித்​தார். ​


"யாது​மாகி நின்​றாய்' தொட​ரில் என்ன கதா​பாத்​தி​ரத்​தில் நடிக்​கி​றீர்​கள்? வேறு என்ன தொடர்​க​ளில் நடிக்​கி​றீர்​கள்?​

​ "யாது​மாகி நின்​றாய்' மூன்று பெண்​களை பற்​றிய கதை. அதில் முக்​கிய கதா​பாத்​தி​ரம் ​ சாரதா. அந்த கேரக்​டர்​தான் நான் பண்​றேன். அது ஒரு தனித்​து​வம் வாய்ந்த,​ வாழ்க்​கை​யில் நிறைய பிரச்​னை​களை சந்​திக்​கும் அதே சம​யத்​தில் உடைந்து போகா​மல் எதிர்​கொள்​ளும் அழுத்​த​மான ரோல். இந்த "யாது​மாகி நின்​றாய்' தொடர் ஒரு நண்​பர் கொடுத்த கருவை வைத்து ரேவதி மேடம்,​ ரோகிணி மேடம் ரெண்டு பேரும் சேர்ந்து விரி​வாக்​கம் செய்து உரு​வாக்​கியிருக்​கி​றார்​கள். பெண்​க​ளுக்​காக நிறைய விஷ​யங்​களை யோசிக்க கூடிய சிறந்த நடி​கை​க​ளான அவர்​க​ளோடு சேர்ந்து பங்கு எடுத்​துக் கொள்​வது எனக்கு மகிழ்ச்​சி​யாக இருக்​கி​றது. மற்​ற​படி "தெக்​கத்​திப் பொண்ணு' தொட​ரில் கிரா​மத்து பெண்​ணாக நடித்​துக் கொண்​டி​ருக்​கி​றேன். ​

​"மொழி' படத்​தில் சிறப்​பாக நடித்து இருந்​தீர்​கள். அதன் பிறகு படங்​க​ளில் நடிக்​க​வில்​லையே ஏன்?​

​"மொழி' ​ படம் போல ஒரு ​ நல்ல படத்தில் நடித்​தால் பத்து சுமா​ரான படங்​களில் நடிக்க வேண்​டி​யி​ருக்​கி​றது. அது போல் வராத பட்​சத்​தில் பத்து சுமா​ரான படங்​கள் நடிக்க எனக்கு நேரமோ,​ விருப்​பமோ இல்லை. ​

​சின்​னத்​திரை,​பெரி​ய தி​ரை​யில் நீங்​கள் உணர்ந்​தது?​

சினி ​மா​வுக்​கும்,​ சின்​னத்​தி​ரைக்​கும் இருந்த வித்​தி​யா​சங்​கள் இப்​போது போய்​விட்​டது. அதெல்​லாம் ஒரு கால​கட்​டத்​தில் தான் இருந்​தது. இவர்​கள் சினிமா ஆர்ட்​டிஸ்ட்,​ இவர்​கள் சின்​னத்​திரை ஆர்ட்​டிஸ்ட் என்​ப​தெல்​லாம் ​ இப்​போ​ழுது கிடை​யாது. இன்û​றய சூழ்​நி​லை​யில் சினி​மா​விற்கு பல​மாக இருப்​பது சின்​னத்​திரை தான். சினி​மாவையே கூட டிவி​யில் அடிக்​கடி டிரைய்​லர் போட்டு காட்​டும் போது தான் நிறை​ய​பே​ருக்கு இந்​தப் படம் புதி​தாக வரு​கி​றது என்று தெரி​கி​றது. ஒரு மீடி​யா​வுக்​கும்,​இன்​னொரு ​ மீடி​யா​வுக்​கும் நாம போட்டி வைக்க முடி​யாது. ஒரு நடிகை என்​றால் அவுங்க நடிகை தான். நிஜ​வாழ்​கை​யில் நடிக்​காத வரை நாம நடி​கர்​கள் தான்.

​​நீங்​கள் ​ இருந்​த​வரை சன் டிவியில் தொகுத்து வழங்​கிய "இளமை புதுமை' ​ நிகழ்ச்சி அரு​மை​யாக இருந்​தது. அதன்​ பி​றகு காணா​மல் போய்​விட்​டதே. அது உங்​க​ளுக்கு வெற்​றியா?​

​கண்​டிப்​பாக. சொர்ணமால்யா என்​றால் யார் என்று என்னை அறி​மு​கப்​ப​டுத்​தி​யது இளமை புதுமை நிகழ்ச்சி தான் மிகப் பெரிய கார​ணம். நான் அந்த நிகழ்ச்​சியை தொடர்ந்து ஏழு வரு​டங்​கள் பண்​ணி​னேன். என்​னு​டைய பதி​னாறு வய​தில் தொடங்​கி​னேன் என்​னு​டைய வளர்ச்​சி​யோட சேர்ந்து அந்த நிகழ்ச்​சி​யும் வளர்ந்​தது. அந்​நி​கழ்ச்சி துவங்​கும் போது ​ தான் சன் டிவிக்​கும் துவக்க காலம் ​ எங்​க​ளது வளர்ச்​சி போல் சன் டிவி​யும் சேர்ந்து வளர்ந்​தது. நிறைய நல்ல நல்ல விஷ​யங்​கள் எல்​லாம் நடந்​தது. ஒரு விஷ​யம் நன்​றாக நடக்​கும் பொழுது சில நேரங்​க​ளில் அதை விட்டு கொடுக்க வேண்டி வரும் அப்​படி தான் அந்த நிகழ்ச்​சியை ​ ரொம்ப சந்​தோ​ஷ​மான சூழ்​நி​லை​யில் தான் முடித்​தோம். ​ ​

​தொடர்​கள் இயக்​கும் எண்​ணம் உண்டா?​

​தொடர் இயக்​கு​வ​தற்கு நிறைய ​ நேரம் வேண்​டும்.

ஆனால் ​ சினிமா டைர​க்ஷன் பண்​ண​வேண்​டும் என்று ஆசை​யி​ருக்​கி​றது. ஆனால் இப்​போது அந்த எண்​ணம் இல்லை. ​ பிஎச்.டி.முடித்​து​விட்​டு​தான் பண்​ண​வேண்​டும் என்று வைராக்​கி​யத்​தில் இருக்​கி​றேன். டாக்​டர் சொர்​ண​மால்யா ஆகி​விட்​டுத்​தான் டைரக்​டர் சொர்​ண​மால்யா ஆவேன். ​

​படிப்பு,​ நாட்​டி​யம்,​ சினிமா இப்​படி வெவ்​வேறு துறை​யில் இருக்​கிறீர்கள். இதற்​காக எப்​படி நேரம் செல​வி​டு​கிறீர்கள்?​

​ஒரு நாளில் இரு​பத்​தி​நாலு மணி நேரம் இருக்​கி​றது. அதை வைத்​துக் கொண்டு எத்​த​னையோ நிறைய நல்ல விஷ​யங்​களைச் செய்​ய​லாம். அப்​ப​டி​யில்​லா​மல் ஒரு நாள் முழு​வ​தும் ஒரே ஒரு வேலை மட்​டும் தான் ​ செய்ய முடி​யும் என்​றால் அது முயற்​சி​யில்லா தன்​மை​யைக் காட்​டு​கி​றது என்று சொல்​வார்​கள். படிப்​புக்​காக டான்ûஸ விட்​ட​தில்லை,​ டான்ஸ்​காக நடிப்பை விட்​ட​தில்லை,​ ​ ஒவ்​வொன்​றுக்​கும் என் நேரத்​தைப் பிரித்து செயல்படு​கி​றேன். ​

​நாட்​டி​யத் துறை​யில் ​ உங்​கள் பங்​க​ளிப்பு என்ன?​

​ இது​தான் என் பங்​க​ளிப்​புன்னு சொல்லி முற்​றுப்​புள்ளி வைக்க முடி​யாது. இப்​போ​து தான் ஆரம்​பித்​தி​ருக்​கி​றேன். நிறைய விஷ​யங்​கள் செய்​ய​ணும்னு ஆர்​வம் இருக்கு. அதற்​கான முயற்​சி​க​ளில் ஒன்று தான் என் பிஎச்.டி. பட்​டம் வாங்க வேண்​டும் என்​பது. என் மூல​மாக சில விஷ​யங்​க​ளைக் கலை உல​கத்​துக்​குக் கொடுக்க வேண்​டும் என்​பது என் ஆசை. இதை தவிர நாட்​டிய பள்ளி வைத்து நடத்​திக் கொண்​டி​ருக்​கி​றேன். சென்​னை​யி​லும்,​ காஞ்​சி​பு​ரத்​தி​லும். ​

​உங்​கள் ​ திற​மையை திரை​யு​ல​கம் சரி​யாக பயன்​ப​டுத்​த​வில்லை ​ என்ற குறை ​ இருக்​கி​றதா?​

​அப்​படிச் ​ சொல்ல முடி​யாது. எந்த ஒரு சினி​மா​வும்

ஒரு ​வ​ரு​டைய திற​மையை வெளிப்​ப​டு​வ​தற்​காக எடுக்க கூடிய விஷ​யம் இல்லை. ஐநூ​று​பேர்,​அறு​நூறு பேர் சேர்ந்து உழைக்க கூடி​யது. ஒரு ​ தனி​பட்​ட​வ​ரு​டைய திற​மையை ​ வெளிப்​ப​டுத்​து​வ​தற்​காக ஒரு சினிமா எடுப்​பாங்​கன்னா அது நடக்க முடி​யாத ஒரு விஷ​யம். அப்​படி பார்த்தா நானே என்னை வைத்து ஒரு படம் எடுத்​தா​லும் அதில் என்​னு​டைய எல்லா பரி​மா​ணங்​க​ளை​யும் ​ ஒரு மூன்று மணி நேரத்​தில் காண்​பிக்க முடி​யாது. அத​னால் அந்த மாதிரி எதிர்​பார்ப்​பதே ​ என்னை பொருத்​த​வரை முட்​டாள்தனம். அவர்​கள் கொடுக்க கூடிய கதா​பாத்​

தி​ரத்​தில் என்​னு​டைய திற​மையை வெளிப்​ப​டுத்த தெரிந்​தால் நான் புத்​திசாலி. அதை வாங்​கிக் கொண்​டால் அவர்​கள் புத்​திசாலி. ​

​சினி​மா​வில் நெகட்​டிவ் ​ ரோல் வந்​தால் நடிப்​பீர்​களா?​

​ இயல்​பான நெகட்​டீவ் ரோலாக இருந்​தால் பர​வா​யில்லை. நெகட்​டீவா ​ பண்​ணி​னா​லும் அதில் ஒரு அர்த்​தம் இருக்க வேண்​டும். கத்தி எடுத்து ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ குத்​து​வது மாதிரி எல்​லாம் நான் செய்ய முடி​யாது. ​ ஏன் என்​றால் என்​னி​டம் நாட்​டி​யம் கற்​றுக்​கொள்ள நிறைய பிள்​ளை​கள் வரு​கி​றார்​கள். அது ​ மட்​டு​மல்​லா​மல் நான் நிறைய சோஷி​யல் ஒர்க்​கி​லும் ஈடு​பட்​டுக் ​ கொண்​டி​ருக்​கி​றேன். அது நிஜ​வாழ்க்​கை​யில் எந்த பாதிப்​பை​யும் ஏற்​ப​டுத்​தக் கூடாது என்​ப​தால் எனக்கு இஷ்​டம் இல்லை. ​ ​ரொம்ப பெரிய கம்​பெ​னி​யில் இருந்து ​ வில்​லி​யாக நடிப்​ப​தற்கு கேட்​டார்​கள். என்னை பார்த்​தால் உங்​க​ளுக்கு எப்​படி அந்த மாதிரி கேட்க தோன்​று​கி​றது என்று கேட்​டேன். வேற யாருமே அந்த மாதிரி நினைத்து பார்த்​தி​ருக்க மாட்​டார்​கள்.வித்​தி​யா​ச​மாக இருக்​கும் என்​றார்​கள். ஒரு மாதம் வரை காத்​தி​ருந்​தார்​கள் நான் ​ ​ ​ வேண்​டா​மென்று சொல்​லி​விட்​டேன். நல்ல கம்​பெனி,​ நல்ல டைரக்​டர்,​ ரொம்ப நல்ல கதை இருந்​தா​லும் அவர்​க​ளோடு ஒர்க் பண்ண முடி​ய​வில்​லையே என்று வருத்​தப்​பட்​டேன். ​​

No comments:

Post a Comment