Wednesday, December 2, 2009

சினிமாதான் என் உலகம்!


சன் டிவி​யில் ஒளி​ப​ரப்​பா​கிக் கொண்​டி​ருக்​கும் "தங்​கம்' தொட​ரின் ​படப்​பி​டிப்பு. கங்​காவை ​(ரம்யா கிருஷ்​ணன்)​ பழி​வாங்க சதி செய்து கொண்​டி​ருந்த இள​வஞ்சி​ (காவேரி)​யைச் சந்​தித்​தோம். அங்கு சுப்​பு​லட்​சமி,​ நாச்​சியா,​ மங்கா அக்கா என அனை​வ​ரி​ட​மும் சிரித்து விளை​யா​டிக்​கொண்டே பிஸி​யாக இருந்​தார் நடிகை காவேரி. படப்​பி​டிப்பு இடை​வே​ளை​யில் வந்து,​ நம்​மு​டைய கேள்​வி​க​ளுக்கு அவர் சொன்ன பதில்​களி​லி​ருந்து...​

"தங்​கம்' தொட​ரில் உங்​கள் கேரக்​டர் இந்​த​ளவு பேசப்​ப​டும் என்று நினைத்​தீர்​களா?​​

கதையை முதன் முத​லில் கேட்​கும் பொழுது இந்​த​ள​வுக்கு ரீச் ஆகும்ன்னு எதிர்​பார்க்​க​வில்லை. ஐயா​வுக்கு மரு​ ம​க​ளாக வரு​கிற கேரக்​டர் கொஞ்​சம் பவர் ஃபுல்​லான ரோல் என்று சொன்​னார்​கள். நான் இது​வரை நெகட்​டீவ் ரோலில் நடித்​தது கிடை​யாது. எனக்கே இது ஒரு புது​மை​யான அனு​ப​வம் தான். ஐயா​வின் சொத்து ​ வேறு யாருக்​கும் போகக் கூடாது என்​ப​தற்​குத்​தான் அவ்​வ​ளவு வில்​லத்​த​னம் செய்ய வேண்டி இருந்​தது.​

பார்ப் ​ப​தற்கு ரொம்ப வெகு​ளியா இருக்​கீங்க. ஆனால் தொட​ரில் பயங்​கர வில்​லி​யாக கலக்​கு​றீங்​களே மக்​கள்​கிட்ட உங்​கள் இமேஜ் பாதிக்​காதா?​​

பொது ​வாக வில்லி கேரக்​ட​ரில் நடிப்​ப​வர்​கள் என்​றால் பார்க்​கும் பொழுதே பய​மு​றுத்​தும்​படி இருப்​பார்​கள். ஆனால் பார்​வைக்கு மென்​மை​யாக இருக்​கிற ஒரு பெண் செய்​கிற வேலை​யெல்​லாம் பயங்​கர வில்​லத்​த​ன​மாக இருந்​தால் பார்க்​கி​ற​வர்​க​ளுக்கு வித்​தி​யா​ச​மாக இருக்​கும் என்று எதிர்​பார்த்​தேன். என்​னு​டைய இந்த நினைப்பு வீண்​ போ​க​வில்லை. என்​னு​டைய நடிப்​பிற்கு மக்​க​ளி​டம் நல்ல வர​வேற்பு இருக்​கி​றது. இது இமேஜை பாதிக்​கும் என்று எனக்​குத் தோன்​ற​வில்லை.​

தொட​ரில் உங்​க​ளின் வில்​லத்​த​ன​மான நடிப்​பைப் பார்த்​து​விட்டு உங்​கள் வீட்​டில் உள்​ள​வர்​கள் என்ன சொன்​னார்​கள்?​​

நான் முதன் முறை​யாக நெகட்​டீவ் ரோல் செய்​வ​தால்,​ "ஏன் இப்​படி?​ இந்த மாதிரி நடித்​தால் ​ மக்​கள் உன்னை உதைக்க மாட்​டார்​களா?​ இவ்​வ​ளவு அநி​யா​யம் செய்​வது போல் இருக்​கி​றதே...?' என்று சொல்​லு​வார்​கள். அம்​மா​தான் தின​மும் தவ​றா​மல் ​ டிவி​யில் தொடரை பார்ப்​பார்​கள். நான் ஏதா​வது தப்பு செய்​தி​ருந்​தால் கூட அதைச் சுட்​டிக்​காட்​டித் திருத்​து​வார்​கள்.

பெரும் பகுதி படப்​பி​டிப்​பில்​தான் இருக்​கி​றீர்​கள். உங்​கள் நண்​பர்​கள் பற்றி சொல்​லுங்​கள்?​​

என் ​னு​டைய ஃபேமிலி என்று சொன்​னால் அது இந்த ஷூட்​டிங் ஸ்பாட்​டில் உள்​ள​வர்​கள்​தான். நான் வீட்​டில் இருக்​கும் நேரத்​தை​விட இங்​கே​தான் அதிக நேரம் செல​ வி​டு​கி​றேன். என்​னு​டைய சொந்​தம்,​ பந்​தம் ,​அத்தை,​ மாமா என்று எல்​லாமே இங்கே உள்​ள​வர்​கள் தான்.

எனக்கு வேற உல​கமே இல்ல. வேற உல​கத்தை பற்றி நான் நினைப்​பது கூட இல்லை.​

இந்த கேரக்​ட​ருக்​காக உங்​களை எப்​படி தயார் செய்து கொள்​கி​றீர்​கள்?​​

ஹோம் ஒர்க் செய்​கி​றேன். ஒவ்​வொரு சீன் முடிஞ்​சப்​ பு​றம் என்ன என்ன தவறு செய்​தி​ருக்​கேன் என்று பார்ப்​பேன். மறு​ப​டி​யும் அதை செய்​யக்​ கூ​டா​தல்​லவா?​!​ வீட்​டில் நடித்து பார்ப்​பேன். மற்​ற​படி அடுத்து ​ சீன் என்ன என்​ப​தெல்​லாம் எங்​க​ளுக்கு தெரி​யாது. முன்​னா​டியே சொல்​ல​மாட்​டாங்க. ஸ்பாட்​டுக்கு வந்த பிற​கு​தான் சொல்​வார்​கள். வீட்​டுக்கு வந்த பிறகு படப்​பி​டிப்​பின் போது ஏதா​வது தவறு செய்​தி​ருக்​கேன் என்று தோன்​றி​னால்,​ எங்​க​ளின் கிரி​யேட்​டீவ் ஹெட்​கிட்ட போன் செய்து அவுங்​க​ளோட கருத்​துக்​களை கேட்​போம் அவ்​வ​ளவு தான்.​

வேறு என்ன ​ தொடர் பண்​றீங்க?​ சினி​மா​வில் நெகட்​டீவ் ரோல் வாய்ப்பு வந்​தால் நடிப்​பீர்​களா?​​

கலை ​ஞர் டிவி​யில் வரு​கிற "தாயம்' தொட​ரி​லும் பண்​ணிக்​கிட்டு இருக்​கேன். அடுத்தபடியா "சுழல்'ன்னு ஒரு தமிழ் படம் பண்​றேன். அதில் ஹீரோ,​ ஹீரோ​யின்ஸ் எல்​லாம் புதுசு. டைரக்​ட​ரும் மலை​யாள டைரக்​டர். பிர​தாப் போத்​த​னுக்கு ஜோடி​யாக நடிக்​கி​றேன். ஒரு சீனி​ய​ரு​டன் நடிப்​பது ரொம்ப சந்​தோ​ஷ​மாக இருக்​கி​றது. ரொம்​ப​வும் நட்​போடு நடிப்​பைச் சொல்​லித் தரு​வார். அவர் இரு​பது வரு​ஷத்​திற்​குப் ​ பிறகு சினி​மா​வில் மறு​ப​டி​யும் ரீஎண்ட்ரி ஆவது மன​திற்கு ரொம்ப சந்​தோ​ஷ​மாக இருந்​தது. சினி​மா​வில் நெகட்​டீவ் ரோல் வந்​தால் பண்​ணி​த்தான் பார்ப்​போமே!​​

வைகா ​சி​பொ​றந்​தாச்சு படத்​தில் அறி​மு​க​மான காவே​ரிக்​கும். இப்​போது இள​வஞ்​சியா நடிக்​கும் காவே​ரிக்​கும் வித்​தி​யா​சம் எப்​படி இருக்கு?​

​சினிமா, ​ சீரி​யல்ன்னு நான் பிரித்து பார்த்​த​தில்லை. என்னை பொருத்​த​வரை கேமிரா லைட்​டிங் மட்​டும் தான் வித்​தி​யா​ச​மாக இருக்​குமே தவிர மற்ற எல்​லாமே ஒரே மாதி​ரி​தான் இருக்​கும். ​ எனக்கு எங்கு போனா​லும் சந்​தோ​ஷமா இருக்​க​ணும். எல்​லோ​ரை​யும் சிரிக்க வைக்​க​ணும். "வைகாசி பொறந்​தாச்சு' முதல் படம்ங்​கி​ற​து​னால அப்போ எது​வுமே தெரி​யா​தில்​லையா அத​னால் பயம் இருந்​தது. இப்​பொ​ழுது பழ​கி​டுச்சு. இரு​பது வரு​டமா இது மட்​டும் தான் தெரி​யும். சினி​மாவை தவிர வேற உல​கமே எனக்குத் தெரி​யாது.​

ரம்யா கிருஷ்​ண​னோட நடிப்​பது பற்றி சொல்​லுங்​கள்?​​

அவர் ஒரு ஜெம் ஆஃப் பெர்​சன். ரொம்​ப​வும் ஃபி​ரண்ட்​லியா பழ​கு​வாங்க. புரோ​டி​யூ​சர்ங்​கிற மாதிரி நடந்​துக்க மாட்​டாங்க. ஒரு ஃபேமிலி மாதி​ரி​தான் எல்​லோ​ரி​ட​மும் பழ​கு​வாங்க. ​

உங்​கள் ஃபேமிலி பற்றி சொல்​லுங்​கள்?​​

எனக்கு நாலு அண்​ணன்​கள்,​ நான் ஒரே பெண் தான்,​ இப்​பொ​ழுது அம்​மா​வோட தான் இருக்​கேன். என் கல்​யாண வாழ்க்​கை​யைப் பற்றி நான் எதை​யும் சொல்ல விரும்​ப​வில்லை. ஒரு ஆர்ட்​டிஸ்ட்​டாக இல்​லா​மல் ஒரு பெண்​ணாக இருந்து என் பிரச்​ச​னை​க​ளு​டன் போரா​டிக்​கிட்டு இருக்​கேன்.

No comments:

Post a Comment