Thursday, November 12, 2009

கவிதைகள்

நா‌ன்‌ என்‌னை‌ அறி‌யா‌த வயதி‌ல்‌ எழுத நி‌னை‌த்‌து மனதி‌ல்‌ தோ‌ன்‌றி‌ய சி‌லவற்‌றை‌ கி‌றுக்‌கி‌யு‌ள்ளே‌ன்‌ அவை‌‌ பு‌து கவி‌தைகள்‌ என்‌று இதுவரை‌ நா‌ன்‌ நி‌னை‌த்துக்‌ கொ‌ண்‌டி‌ருக்‌கி‌றே‌ன்‌. இதை‌ படி‌க்‌கும்‌ வா‌சகர்‌களா‌கி‌ய நீ‌ங்கள்‌.உங்‌கள்‌ கருத்‌துக்‌களை‌ பதிவு‌ செ‌ய்‌தா‌ல்‌ மகி‌ழ்‌ச்‌சி‌யடை‌வே‌ன்‌.

நா‌ன்‌ படி‌த்‌ததி‌ல்‌ பி‌டி‌த்‌தது:
வா‌ரி‌யா‌ர்‌ சுவா‌மி‌களி‌ன்‌
பொ‌ன்‌ மொ‌ழி‌கள்‌
வருவதும்‌, போ‌வதும்‌ - இரண்‌டு- இன்‌பமும்‌, துன்‌பமும்‌
வந்‌தா‌ல்‌ போ‌கா‌தது-இரண்‌டு-பு‌ககும்‌‌, பழி‌யு‌ம்‌
போ‌னா‌ல்‌ வரா‌தது-இரண்‌டு-மா‌னமும்‌, உயி‌ரும்‌
தா‌னா‌க வருவது-இரண்‌டு-இளமை‌யு‌ம், மூ‌ப்‌பு‌ம்‌
நம்‌முடன்‌ வருவது-இரண்‌டு-பா‌வமும்‌, பு‌ண்‌ணி‌யமும்‌
அடக்‌க முடி‌யா‌தது-இரண்‌டு-ஆசை‌யு‌ம்‌, துக்‌கமும்‌
தவி‌ர்‌க்‌க முடி‌யா‌தது-இரண்‌டு-பசி‌யு‌ம்‌, தா‌கமும்‌
நம்‌மா‌ல்‌ பிரி‌க்‌கமுடி‌யா‌தது-இரண்‌டு-பந்‌தமும்‌, பா‌சமும்‌
அழி‌வை‌த்‌ தருவது-இரண்‌டு-பொ‌றமை‌யு‌ம்‌, கோ‌பமும்‌
எல்‌லோ‌ருக்‌கும்‌ சமமா‌னது-இரண்‌டு-பி‌றப்‌பு‌ம்‌, இறப்‌பு‌ம்‌

‌ை‌கள்‌ பு‌து கவி‌தை‌‌தயக்‌கம்
ஆசை‌ என்‌னும்‌ கடலி‌னி‌லே‌
அகல்‌வி‌ளக்‌கா‌ய்‌ வந்‌தவளே‌…‌
அன்‌பு‌ என்‌னும்‌ நதி‌யி‌னி‌லே‌
அறம்‌ பொ‌ருளா‌ய்‌ நி‌ன்‌றவளே‌…
ஏன்‌- னெ‌டுத்‌தா‌ய்‌ இப்பி‌றவி‌
என்‌உயி‌ரை‌ கொ‌டுத்‌துவி‌ட்‌டே‌ன்‌
உன்‌ உயி‌ரை‌ கொ‌டுப்‌பதற்‌கு
இன்‌னும்‌ என்‌ன தயக்‌கம்…‌

கா‌தல்‌
நா‌ன்‌ மழலை‌யா‌ய்‌
தா‌ன்‌ இருந்‌தே‌ன்‌
இளமை‌யை‌ அறி‌யு‌ம்‌ வரை‌…
நா‌ன்‌ நம்‌பி‌க்‌கை‌யு‌டன்‌
தா‌ன்‌ இருந்‌தே‌ன்‌
தோ‌ல்‌வி‌களை‌ தா‌ங்‌கும்‌ வரை‌…
நா‌ன்‌ கோ‌ழை‌யா‌க
தா‌ன்‌இருந்‌தே‌ன்‌
கொ‌டுமை‌களை‌ சந்‌தி‌க்‌கும்‌ வரை‌…
நா‌ன்‌ நா‌னா‌கத்‌
தா‌ன்‌ இருந்‌தே‌ன்‌
உன்‌னை‌ சந்‌தி‌க்‌கும்‌ வரை‌…


நா‌ன்‌ யா‌ர்‌?
உன்‌ உதட்‌டோ‌ர மச்‌சத்‌தி‌ல்‌
ஒளி‌ந்‌து கி‌டக்‌கும்‌ சி‌ரி‌ப்‌பி‌ல்‌
நா‌ன்‌ கொ‌ஞ்‌சம்‌ கொ‌ஞ்‌சமா‌ய்‌
தஞ்‌சம்‌ அடை‌ந்‌துவி‌ட்‌டே‌ன்‌…
உன்‌னை‌ கவி‌ பா‌டி‌யி‌ருப்‌பே‌ன்‌
கா‌தலி‌யா‌க இருந்‌தா‌ல்‌…
உன்‌ துணை‌ தே‌டி‌யி‌ருப்‌பே‌ன்‌
மனை‌வி‌யா‌க இருந்‌தா‌ல்‌…
உன்‌ நலம்‌ நா‌டி‌யி‌ருப்‌பே‌ன்‌
நண்‌பனா‌க இருந்‌தா‌ல்‌…
நா‌ன்‌ என்‌னவா‌க இருக்‌கி‌றே‌ன்‌
உன்‌னி‌டத்‌தி‌ல்‌?

மனி‌தன்‌
பி‌றக்‌கும்‌ போ‌ழுது தான்‌ ஆழுது
இறக்‌கும்‌ போ‌ழுது மற்‌றவர்‌களை‌
அழவை‌ப்‌பவன்‌.

கண்‌ணதா‌சன்‌
கற்‌பனை‌க்‌கு எட்‌டா‌த
கா‌லத்‌தா‌ல்‌ அழி‌க்‌கமுடி‌யா‌த
தெ‌ய்‌வ கவி‌ஞன்‌.

தை‌-மா‌த சீ‌சன்‌
மலர்‌களுக்‌கும்‌ கனி‌களுக்‌கும்‌
மட்‌டுமல்‌ல
பெ‌ண்‌களுக்‌கும்‌ தா‌ன்‌.

வா‌னவி‌ல்‌
பல வண்‌ணங்‌களி‌ல்‌
வரும்‌
இவர்‌ தா‌ன்‌
வர்‌ணங்‌களி‌ன்‌ தலை‌வன்‌




மதி‌வண்‌டி‌
ஏழை‌களி‌ன்‌
ஏற்‌றி‌ செ‌ல்‌லும்
‌தோ‌ழன்‌

மழை‌
மா‌மன்‌ அடி‌த்‌தா‌னோ‌
மல்‌லி‌கை‌ப்‌ பூ‌ சண்‌டா‌லே…‌
தா‌ய்‌ தா‌ன்‌ அடி‌த்‌தா‌லோ‌
தா‌மரை‌ப்‌ பூ‌ சண்‌டா‌லே‌…
யா‌ர்‌ அடி‌த்‌தா‌ர்‌ என நீ‌
அழுகி‌றா‌ய்‌…

ஜன்‌னல்‌
ஜெ‌யி‌ல்‌ கம்‌பி‌களுக்‌கு பி‌ன்‌
என்‌ கா‌தலி‌…
எதி‌ர்‌வீ‌‌ட்‌டி‌ல்‌

கா‌தல்‌
நா‌ன்‌ பி‌ற்‌பட்‌டவன்‌என்‌று
தெ‌ரி‌ந்‌தும்‌
உன்‌ இதயத்தி‌ல்‌ இடம்‌
கொ‌டுத்‌துவி‌ட்‌டா‌யே‌

தீ‌க்‌குச்‌சி‌
சா‌ப்‌பி‌ட முடி‌யா‌த
லா‌லி‌ப்‌பா‌ப்‌

கதவு‌
என்‌ன ? தவறு செ‌ய்‌தா‌ய்‌
நி‌ற்‌கும்‌ தண்‌டனை‌யை‌
அளி‌த்‌தது யா‌ர்‌?

நி‌லவு‌
வா‌னத்‌தி‌ல்‌
ஓர்‌
மி‌ஸ்‌யூ‌னி‌வர்‌ஸ்‌

பு‌ல்‌லா‌ங்‌குழல்‌
இசை‌களி‌ன்‌
இன்‌னி‌சை‌ குழல்‌

தா‌லி‌
செ‌ல்‌வி‌யை‌
தி‌ருமதி‌
ஆக்‌குவது…

தா‌லி‌
மி‌ஸ் மி‌ஸ்‌ பண்‌ணி‌யது…

ஒரு தோ‌ழி‌யி‌ன்‌ ஏக்‌கம்‌
உள்‌ளம்‌ நி‌றை‌ந்‌த தோ‌ழி‌
உன்‌ நி‌னை‌வி‌ல்‌ என்‌றும்‌ ஏங்‌கி‌
என்‌ உள்‌ளம்‌ அடை‌ந்‌தது ஏக்‌கம்‌
பல நா‌டட்‌கள்‌ வரவி‌ல்‌லை‌ தூ‌க்‌கம்‌
உன்‌ உறவி‌னி‌ல்‌ கி‌டை‌த்‌தது இனி‌மை‌
வெ‌ண்‌மதி‌யி‌ன்‌ வரவி‌னை‌ கா‌த்‌து
கலை‌ந்‌தி‌டும்‌ முகை‌கள்‌ பூ‌த்‌து
உந்‌தன்‌ வரவி‌னை‌ கா‌த்‌து
கா‌த்‌தி‌ருந்‌தே‌ன்‌ வி‌ழி‌மலர்‌ பூ‌த்‌து
நி‌லவெ‌ன நீ‌யு‌ம்‌ வா‌ரா‌யோ‌
என்‌மனதி‌ல்‌ மகி‌ழ்‌வி‌னை‌ தா‌ரா‌யோ‌

என்‌றும்‌ அன்‌பு‌டன்‌
அன்‌பு‌ தோ‌ழி‌.

ரோ‌ஜா‌ பூ‌
ஓ ரோ‌ஜா‌வே‌
உன்‌னை‌ பா‌ர்‌த்‌து தா‌ன்‌
பெ‌ண்‌களுக்‌கு அழகு
வை‌த்‌தா‌னா‌ ஆண்‌டவன்…‌

கடவு‌ள்‌
கடவு‌ளுக்‌கு கண்‌இல்‌லை‌
என்‌பது தவறு
அவன்‌ கண்‌ இருந்‌தும்‌
கண்‌டு கொ‌ள்‌ளவி‌ல்‌லை‌
ஏழை‌களை…‌

மரணம்‌
வா‌ழ்‌க்‌கை‌யி‌ன்‌
முற்‌றுப்‌பு‌ள்‌ளி…

சுவர்‌ கடி‌கா‌ரம்‌
‌வா‌ழ்‌க்‌கை‌ தா‌ன்‌
மெ‌துவா‌க செ‌ல்‌கி‌றது
என்‌றா‌ல்‌ என்‌
வி‌ட்‌டு கடி‌கா‌ரம்‌ கூடவா‌?

தா‌டி‌
கா‌தல்‌ தோ‌ல்‌வி‌க்‌கா‌க
நீ‌ வளர்‌த்‌த தா‌டி‌
அழி‌ந்‌து வி‌ட்‌டதே‌
ஏன்‌? பு‌தி‌யவள்‌
வந்‌துவி‌ட்‌டா‌ளா‌?

வே‌ப்‌பமரம்‌
ஏழை‌ வீ‌ட்‌டி‌ன்‌
ஏசி‌

அமா‌வா‌சை‌
நி‌லவு‌க்‌கு என்‌மே‌ல்‌
என்‌னடி‌ கோ‌பம்…‌
ஏன்? ‌இன்‌று வரவி‌ல்‌லை‌

கா‌லண்‌டர்‌
மற்‌றவர்‌களுக்‌கு நா‌ள்‌
கா‌ட்‌டி‌யா‌ய்‌ இருந்‌து
தன்‌ நா‌ளை‌ எண்‌ணி‌க்‌
கொ‌ண்‌டி‌ருப்‌பவர்‌

இளமை‌
இனி‌மை‌யி‌ன்‌
துவக்‌கம்‌



மருத்‌துவமனை‌
ஜனமும்‌, மரணமும்‌
ஒரே‌ இடத்‌தி‌ல்‌

சுமை‌
பி‌றக்‌கும்‌ போ‌ழுது
ஒருத்‌தி‌க்‌கு சுமை‌…
இறக்‌கும்‌ போ‌ழுது
மற்‌றவர்‌க்‌கு….
பெ‌ண்‌
தலை‌முறை‌யை
உருவா‌க்‌குபவள்‌

குழந்‌தை‌
அழுகை‌யி‌ல்‌
ஆரம்‌பம்‌

பூக்‌களி‌ன்‌ பு‌லம்‌பல்‌
ஓ அணி‌லே‌
உன்‌ நகங்‌களை‌ வெ‌ட்‌டி‌
நா‌ட்‌கள்‌ அகி‌ன்‌றனவோ‌
பூ‌க்‌களி‌ன்‌ முகங்‌களி‌ல்‌லா‌ம்‌
ரத்‌த கீ‌றல்‌கள்‌

எண்‌ணெ‌ய்‌
தண்‌ணி‌ர்‌ மீ‌து
ஏன்? ‌கோ‌பம்‌
உன்‌னை‌ கா‌தலி‌த்‌து
ஏமா‌ற்‌றி‌வி‌ட்‌டதோ‌…

பெ‌ண்‌
சி‌னந்‌தா‌ல்‌ அக்‌னி‌
குளி‌ர்‌ந்‌தா‌ல்‌ தெ‌ன்‌றல்…‌

வி‌டி‌யற்‌கா‌லை‌
சூ‌ரி‌யன்‌ மெ‌ல்‌ல மெ‌ல்‌ல
வா‌னத்‌து சே‌லை‌யை‌
மடி‌த்‌து கொ‌ண்‌டி‌ருக்‌கி‌றா‌ன்‌.


பி‌றப்‌பு‌
இறப்‌தற்‌கு
சமா‌தா‌னம்‌

மயி‌ல்‌
ஓ… மயி‌லே‌ உன்‌
தோ‌கை‌கள்‌ இன்‌னும்‌
வி‌ரி‌யவி‌ல்‌லை‌யா…‌
உன்‌ கா‌ல்‌கள்‌
இன்‌னும்‌ ஆடவி‌ல்‌லை‌யா‌…
மெ‌ளனம்‌ ஏன்‌?
உன்‌ கண்‌களை‌ முடிக்‌‌
கொ‌ண்‌டி‌ருக்‌கி‌றா‌யோ‌…
வா‌னத்‌து சூ‌ரி‌யன்‌
மெ‌ல்‌ல மறை‌ந்‌து
கொ‌ண்‌டி‌ருக்‌க…
மே‌கங்‌கள்‌ மழை‌யை‌
வரவே‌ற்‌க அழகா‌ய்‌
வந்‌து கொ‌ண்‌டி‌ருக்‌கி‌றது
ஆடட்‌டும்‌ உன்‌ கா‌ல்‌கள்…
வி‌ரி‌யட்‌டும்‌ உன்‌ தோ‌கை‌கள்‌…
நடதெ‌றட்‌டும்‌ உன்‌ நடன அரங்‌கே‌ற்‌றம்‌…

கா‌தல்‌ ஏமா‌ற்‌றம்‌
கண்‌களா‌ல்‌ சந்‌தி‌த்‌து…
கா‌தலி‌ல்‌ கலந்‌து…
கா‌த்‌தி‌ருந்‌தே‌ன்‌ கை‌ பி‌டி‌க்‌க
கன்‌னி‌யவள்‌ மறந்‌து
கசங்‌கி‌ போ‌னா‌ள்‌
கணவன்‌ அவனி‌டம்‌…‌

கர்‌பி‌ணி‌
சி‌ப்‌பி‌க்‌குள்
முத்‌து

கற்‌பனை‌
தி‌ரை‌க்‌கு வரா‌த
வண்‌ணப்‌படம்‌


நர்‌சரி‌ குழந்‌தை‌
அய்‌யகோ‌
பூ‌க்‌கள்‌ கசங்‌குகி‌றதே‌
ஆட்‌டோ‌வி‌ல்‌…

முதி‌ர்‌கன்‌னி‌கள்‌
கல்‌யா‌ண சந்‌தை‌யி‌ல்‌
வி‌லை‌போ‌கா‌த
(ஏழை)‌ வி‌தவை‌கள்‌…

வி‌லை‌மா‌து
பசி‌ வந்‌ததா‌ல்‌
பத்‌தும்‌ பறந்‌தது…
என்‌ கற்‌பு‌ம்‌ சே‌ர்‌ந்‌து தா‌ன்‌…

பெ‌ண்‌ சி‌சு மரணம்‌
பட்‌டு,பட்‌டு
தளர்‌ந்‌து போ‌னே‌ன்‌…
அடி‌ பட்‌டு பட்‌டு
துவண்‌டு போ‌னே‌ன்‌…
அவன்‌ நா‌வி‌னா‌ல்‌ சுட்‌ட வடு
தா‌ங்‌கலை‌யே‌…
இருந்‌தா‌லும்‌ வி‌ட்‌டு வி‌டு
என்‌ சி‌சுவை‌ என்‌று
கெ‌ஞ்‌சி‌க்‌கே‌ட்‌டே‌ன்‌
படுபா‌வி‌ மா‌ட்‌டே‌ன்‌
என்‌று சொ‌ல்‌லி‌வி‌ட்‌டே‌ன்‌…
வே‌று வழி‌யறி‌யா‌து நா‌னும்‌
உனக்‌கும்‌ இந்‌த வே‌தனை‌கள்‌
வே‌ண்‌டா‌மெ‌ன்‌று
போ‌ய்‌வா‌டி‌ கண்‌னே‌ நீ‌ போ‌ய்‌வா‌ என்‌று
மறுபி‌றப்‌பு‌ ஒன்‌று உண்‌டு ஏனி‌ல்‌
ஒரு பு‌னி‌யவதி‌ வயற்‌றி‌ல்‌
பி‌றந்‌து வா‌ழ்‌கன்‌று
தா‌லா‌ட்‌டு பா‌டி‌ என்‌ பெ‌ண்‌ணை‌
அனுப்‌பி‌ வை‌த்‌தே‌ன்‌
சொ‌ர்‌கத்‌துக்‌கு…




பெ‌ண்‌ அடி‌மை‌…
அன்‌று
அடி‌மை‌ப்‌பட்‌டு கி‌டந்‌ததா‌ல்‌
சீ‌தை‌ தீ‌ குளி‌த்‌தா‌ல்‌
பு‌ரட்‌சி‌யா‌க இருந்‌ததா‌ல்‌
கண்‌ணகி‌ ஊரை‌ ஏறி‌த்‌தா‌ள்‌
பு‌துமை‌ பெ‌ண்‌களடி‌ நா‌ங்‌கள்‌
அதனா‌ல்‌
தீ‌ குளி‌க்‌கவோ‌…
அல்‌லது
தீ‌ வை‌க்‌கவோ‌…
எப்‌படி‌யு‌ம்‌
சரி‌த்‌தி‌ரத்‌தி‌ல்‌ இடம்‌
பெ‌றுவோ‌ம்‌ என்‌று கூறி‌னே‌ன்‌…
போ‌டி‌ உள்‌ளே‌ என்‌று
கூரல்‌ ஒலி‌த்‌த தீ‌க்‌கை‌
நோ‌க்‌கி‌னே‌ன்‌…
அறி‌வா‌ளுடன்‌
அப்‌பா‌வு‌ம்‌, அண்‌ணனும்‌
அருகி‌ல்‌ வந்‌தனர்‌
வா‌ய்‌பே‌ச முடி‌யா‌மல்‌
தி‌ரும்‌பி‌ச்‌ செ‌ன்‌றே‌ன்‌…
இந்‌த நி‌லை‌மை‌ தா‌ன்‌ பெ‌ண்‌களுக்‌கு இன்‌னும்‌,
பொ‌றுத்‌தது போ‌துமடி‌ பெ‌ண்‌னே‌
என்‌று கூற…
பு‌தியதொ‌ரு பா‌ரதி‌ பி‌றப்‌பா‌னோ‌?
என்‌ குலப்‌ பெ‌ண்‌களுக்‌கு வி‌டுதலை‌
அளி‌ப்‌பா‌னோ‌?

வி‌லை‌மமா‌து
பயன்‌படுத்‌துவதற்‌கு முன்‌
வா‌ழை‌ இலை‌கள்‌ நா‌ங்‌கள்‌…
பயன்‌படுத்‌தி‌ய பி‌ன்
எச்‌சி‌ல்‌ இலை‌கள்‌ நா‌ங்‌கள்‌…
இருப்‌பி‌னும்‌ வண்‌டுகள்‌
எங்‌களை‌ வி‌டுவதி‌ல்‌லை‌
கா‌கி‌த பூ‌க்‌களி‌ன்‌ கண்‌ணீ‌ர்‌ துளி‌கள்‌…


வி‌தவை‌
வெ‌ள்‌ளை‌ பு‌றா‌ ஒன்‌று
என்‌ வா‌சல்‌ வந்‌தது…
அதன்‌ ஆசை‌ சி‌றகுகள்‌ ஓடி‌ந்‌துவி‌ட்‌டது
கட்‌டி‌யவன்‌ பறந்‌துவி‌ட்‌டா‌ன்‌ என்‌று
அழுதா‌ளோ‌…
அவன்‌ முகம்‌ பா‌ரா‌மல்‌
வயி‌ற்‌றி‌ல்‌ துள்‌ளும்‌ சி‌சுவை‌
எண்‌ணி‌ அழுதா‌ளோ‌…
கதறி‌ கதறி‌ அழுதா‌ள்‌
தன்‌னை‌யு‌ம்‌ கூட்‌டி‌ செ‌ல்‌லுமா‌று..
ஆண்‌டவனோ‌ அந்‌த
மஞ்‌சள்‌ நி‌ல‌வை‌
வெ‌ண்‌ணி‌லவா‌க்‌கி‌ பா‌ர்‌க்‌க
ஆசை‌ப்‌பட்‌டா‌ன்‌ போ‌லும்‌…
பா‌வை‌யவள்‌ கா‌த்‌தி‌ருந்‌தா‌ள்‌
வழி‌ மி‌து வி‌ழி‌ வை‌த்‌து
பா‌ர்‌த்‌தி‌ருந்‌தா‌ள்‌…
மன்‌னவள்‌ மீ‌ண்‌டும்‌
மீ‌ள்‌வா‌னோ‌…
மா‌ற்‌றா‌ன்‌ ஒருவன்‌
வருவா‌னோ‌…
சி‌றகு ஒடி‌ந்‌த
இந்‌த ஊமை‌ குயி‌லி‌ன்‌
மெ‌ளன கீ‌தம்‌
கா‌ற்‌றோ‌டு கலக்‌கி‌றது…

வா‌னம்‌- நட்‌சத்‌தி‌ரம்‌
அடி‌ பெ‌ண்‌ணே‌
உன்‌கி‌ழி‌சல்‌ ஆடை‌யை‌
சி‌ர்‌படுத்‌து
உன்‌ அழகை‌யெ‌ல்‌லா‌ம்‌
தி‌ருட்‌டுதனமா‌ய்‌ ரசி‌க்‌கி‌றா‌ன்‌
தெ‌ன்‌றல்‌ ஆடவன்‌

வா‌னம்‌
உன்‌ அழகா‌ன
சே‌லை‌யி‌ல்‌
இத்‌தனை‌ ஓட்‌டை‌யா‌?

கணவன்‌
கன்‌னி‌ப்‌பருவத்‌தை‌
களை‌ந்‌தெ‌றி‌ய
வந்‌தவன்‌

வி‌டி‌யல்‌
என்‌வி‌ட்‌டு நந்‌தவனத்‌தி‌ல்‌
பழை‌ய கதி‌ரவன்‌ தா‌ன்‌
பு‌த்‌தா‌டை‌ பூ‌ண்‌டு ரதத்‌தி‌ல்‌
ஏறி‌பு‌றப்‌பட்‌டுவி‌ட்‌டா‌ன்‌…
அந்‌த குதி‌ரை‌களி‌ன்‌ குளம்‌படி‌ சத்‌தத்‌தி‌ல்‌
பழை‌ய தோ‌ட்‌டம்‌ தா‌ன்‌
பு‌து பூ‌க்‌கள்‌ மலர்‌ பூ‌த்‌து மனம்‌வீ‌சி‌யது…
அதோ‌ அந்‌த மரக்‌கி‌ளை‌யி‌ல்‌
பழை‌ய குயி‌ல்‌கள்‌ தா‌ன்‌
பு‌து ரா‌கம்‌ அல்‌லலோ‌ பா‌டுகி‌றது…
இதோ‌ அந்‌த பச்‌சை‌ வர்‌ண தரை‌யி‌ல்‌
பழை‌ய பு‌ல்‌வெ‌ளி‌ தா‌ன்‌
பு‌து பனி‌த்‌துளி‌ அரும்‌பி‌யு‌ள்‌ளது…
பழை‌ய குளம்‌ தா‌ன்‌
பு‌து தா‌மரை‌ பூ‌த்‌து நி‌ற்‌கி‌றா‌ள்‌
என்‌ வி‌ட்‌டு தோ‌ட்‌டத்‌தி‌ல்‌ - ஏன்‌?
இத்‌தனை‌ மா‌ற்‌றம்‌?
ஓ அத்‌தனை‌யு‌ம்‌ பு‌த்‌தா‌ண்‌டு வா‌ழ்‌த்‌து கூறுகி‌றதோ‌?

பெ‌ற்‌றோ‌ர்‌கள்‌
பா‌ச(ம்‌) கயி‌ற்‌றி‌ல்‌
கா‌தலை‌
தூ‌க்‌கி‌லி‌டுபவர்‌கள்‌.

கா‌தல்‌ தோ‌ல்‌வி‌‌
கற்‌பனை‌ குதி‌ரை‌ ஏறி‌
பு‌றப்‌பட்‌டுவி‌ட்‌டா‌ன்‌
என்‌ தலை‌வன்‌…
அப்‌போ‌து அவன்‌ முகம்‌ எனக்‌கு
சரி‌யா‌க தெ‌ரி‌யவி‌ல்‌லை‌
ஆயி‌னும்‌ ஆசை‌ப்‌பட்‌டவன்‌
அருகி‌ல்‌ வரப்‌போ‌கி‌றா‌ன்‌
என்‌று வி‌ட்‌டுவி‌ட்‌டே‌ன்‌
கா‌ல சக்‌கரம்‌ சூ‌ழன்‌றது
அருகி‌ல்‌ வந்‌தா‌ன்‌ அவன்‌
என்‌ இதயமா‌ளி‌கை‌யி‌ன்‌
அஸ்‌தி‌வா‌ரம்‌ அல்‌லவோ‌ ஆடி‌யது.
அந்‌த தூ‌ண்‌களை‌
தா‌ங்‌கி‌ப்‌பி‌டி‌க்‌க
அதரவு‌ இல்‌லை‌…
அதை‌
தூ‌க்‌கி‌ நி‌றுத்‌த ஆள்‌ இல்‌லை‌…
இருந்‌தும்‌
என்‌னை‌ அதி‌ல்‌ ஏற்‌றி‌விட்‌டுவி‌ட்‌டனர்‌
என்‌ வசந்‌த மா‌ளி‌கை‌
ஒடி‌ந்‌துவி‌ழுவதை‌
பா‌ர்‌க்‌க பொ‌றுக்‌கவி‌ல்‌லை‌
என்‌ ஆசை‌ கனவு‌கள்‌ தவி‌டுபொ‌டி‌யா‌வதை‌
சகி‌த்‌து கொ‌ள்‌ள முடி‌யவி‌ல்‌லை‌
என்‌ செ‌ய்‌வே‌ன்‌ .. நா‌ன்‌ செ‌ய்‌வே‌ன்‌…

பவனி‌ வரும்‌ தெ‌ன்‌றல்‌
வா‌யு‌ பகவா‌ன்‌
தே‌ர்‌ ஏறி‌ பு‌றப்‌பட்‌டுவி‌ட்‌டா‌ன்‌
தெ‌ன்‌றல்‌ என்‌ற பெ‌யரி‌ல்‌
சத்‌தமி‌ன்‌றி‌ அவன்‌ தொ‌ட்‌டு செ‌ன்‌றதா‌ல்‌
செ‌டி‌, கொ‌டி‌கள்‌ எல்‌லா‌ம்‌ பு‌த்‌துனர்‌ச்‌சி‌
பெ‌ற்‌றன…
அரும்‌பு‌களை‌ அவன்‌ தா‌ண்‌டி‌ செ‌ன்‌றதா‌ல்‌
அவை‌ மொ‌ட்‌டு அவி‌ழ்‌ந்‌து மலர்‌ந்‌தன
பூ‌க்‌களி‌ன்‌ பட்‌டி‌மன்‌ற தீ‌ர்‌ப்‌பு‌
தெ‌ன்‌றல்‌ ஒரு ஆடவன்‌ என்‌று…
அவன்‌ ஆண்‌ என்‌பதலோ‌
அல்‌லது அனுமதி‌யி‌ன்‌றி‌
என்‌ குலப்‌ பெ‌ண்‌களை‌
தீ‌ண்‌டி‌யதலோ‌
சி‌ன்‌னவு‌டல்‌ சி‌ல்‌லி‌ட்‌டு போ‌னது
இத்‌தனை‌யு‌ம்‌ செ‌ய்‌துவி‌ட்‌டு
மா‌யக்‌ கண்‌ணன்‌ போ‌ல்‌ மறை‌ந்‌துவி‌ட்‌டா‌ன்‌…
யா‌ர்‌ இவனுக்‌கு போ‌ட்‌டது வே‌லி‌?
கடந்‌து செ‌ன்‌று
கடல்‌ மங்‌கை‌யோ‌டு கலந்‌துவி‌ட்‌டா‌னே‌…


பு‌லம்‌பல்‌
இத்‌தனை‌ கா‌லம்‌ என்‌னை‌
தொ‌ட்‌ட தெ‌ன்‌றல்‌ தா‌னே‌
இவன்‌…
இன்‌று ஏன்‌ இத்‌தனை‌ மா‌ற்‌றம்‌
ஓ நா‌ன்‌ மலர்‌ந்‌துவி‌ட்‌டே‌ன்‌
அம்‌மா‌ செ‌ன்‌னா‌ளே‌…
அதனா‌லயோ‌
பூ‌க்‌களி‌ன்‌ பு‌லம்‌பல்‌.

கா‌தல்‌ தோ‌ல்‌வி‌
வா‌ழ மறுக்‌கி‌றே‌ன்‌
சா‌க துடி‌க்‌கி‌றே‌ன்‌
மனதோ‌டு பே‌சுகி‌றே‌ன்‌
மெ‌ளனமா‌ய்‌ அழுகி‌றே‌ன்‌
மனம்‌வி‌ட்‌டு சி‌ரி‌க்‌கி‌றே‌ன்‌
ஏன்‌இந்‌த நி‌லை
அது தா‌ன்‌ கா‌தலா‌?

தொ‌லை‌ந்‌து போ‌ன நி‌னை‌வு‌கள்‌
நா‌ன்‌ வி‌ளை‌யா‌ட
நி‌னை‌த்‌த போ‌து
என்‌வயது பி‌ரி‌ந்‌துவி‌ட்‌டது…
நா‌ன்‌ பழக
நி‌னை‌த்‌த போ‌து
என்‌ நண்‌பர்‌கள்‌ பி‌ரி‌ந்‌துவி‌ட்‌டனர்‌…
நா‌ன்‌ படி‌க்‌க
நி‌னை‌த்‌தபோ‌து
என்‌ கல்‌வி‌ உதறி‌வி‌ட்‌டது…
நா‌ன்‌ வா‌ழ
நி‌னை‌த்‌த போ‌து
என்‌வா‌ழ்‌க்‌கை‌ மா‌றி‌வி‌ட்‌டது…
நா‌ன்‌ கா‌தலி‌க்‌க
நி‌னை‌த்‌த போ‌து
என்‌ கா‌தல்‌ ஏமா‌ற்‌றிவி‌ட்‌டது…
நா‌ன்‌ என்‌னை‌
நி‌னை‌த்‌த போ‌து
முதுமை‌யி‌ன்‌ வி‌ளி‌ம்‌பி‌ல்‌ ‌
என்‌ தொ‌லை‌ந்‌துபோ‌ன
நி‌னை‌வு‌களோ‌டு…

ஆவல்‌
நா‌டி‌, நரம்‌பு‌ தளர்‌ந்‌து
நடை‌ தளர்‌ந்‌து
கூனி‌ குறுகி‌
பா‌ர்‌வை‌ மங்‌கி‌
இளம்‌பஞ்‌சுபோ‌ல்‌
நரை‌தி‌ட்‌ட
கூந்‌தல்‌ கொ‌ண்‌டு
முதுகலே‌ம்‌பு‌ முதி‌ர்‌ந்‌து
தள்‌ளா‌டி‌ கொ‌ண்‌டுவரும்‌
யா‌ர்‌ இந்‌த பழுத்‌த பழம்‌
ஓ என்‌ இந்‌தி‌யதாய்‌
அல்‌லவோ‌ அவள்‌‌
என்‌ன முனகுகி‌றா‌ள்‌
சா‌தி‌ சமய வெ‌ரி‌ன்‌றி‌
கத்‌தி‌ன்‌றி‌, ரத்‌தமி‌ன்‌றி‌
என்‌தா‌ய்‌நா‌ட்‌டை‌ கா‌க்‌க
இதோ‌ உன்‌ வா‌ரி‌சு‌கள்‌
என்‌று மா‌ர்‌தட்‌டி‌ கொ‌ள்ளும்‌
இளை‌ஞனை‌ கா‌ண
ஆவல்‌ கொ‌ண்‌டி‌ருக்‌கி‌றா‌ள்‌.