Tuesday, October 13, 2009

உறுதியாக இருந்தோம் என்றால் நம்மால் சாதிக்க முடியும். - ரா‌தி‌கா‌சரத்‌குமா‌ர்‌


அரசி இப்போது "செல்லமே' ஆகிவிட்டார். ஆமாம்! இதுவரை அரசியாக தமிழ் நெஞ்சங்களின் இல்லத்திற்கு வந்து இதயத்தில் இடம் பிடித்த ராதிகா, இப்போது போலீஸ் தொப்பியைக் கழட்டி வைத்துவிட்டு "செல்லமாக' செல்லம்மாவாகி பாசத்தைக் கொட்ட வருகிறார். சித்தி தொடருக்காக திருச்சி ஸ்ரீரங்கம், சென்று படப்பிடிப்பை நடத்தி வந்தவர், இப்போது திருக்கோவில்கள் குடிகொண்டிருக்கும் கும்பகோணம், சுவாமிமலையைச் சுற்றி படமாக்கி வந்திருக்கிறார். ஒரு மாலை வேளையில் அவரது அலுவலகத்தில் அவரிடம் பேச ஆரம்பித்தோம்:

செல்லமே' என்ன மாதிரியான தொடர்? மற்ற தொடர்களிலிருந்து இது எப்படி மாறுபட்டது?

அரசி, சித்தி இரண்டிலும் என்னை மையப்படுத்தி எடுத்திருந்தோம். "செல்லமே' ஒரு குடும்பத்தின் கதை. குடும்பத்தில் எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது பெரிய சவாலாக இருக்கும். இவங்க கெட்டவங்க. இவங்க ரொம்ப நல்லவங்க என பட்டியல் போடாமல் சாதாரண குடும்பங்களில் உள்ள கஷ்ட நஷ்டங்களைப் பாசப் பிரச்னைகளோடு சொல்கிற கதை. இன்றைய காலகட்டத்தில் கூட்டு குடும்ப வாழ்க்கையின் பெருமையை உணர்த்துவதாக இருக்கும். உயிருக்கு உயிரான நண்பர்கள்கூட சொத்துக்கு ஆசைப்பட்டு எதிரியாகிவிடுகிறார்கள். உறவுகள் பிரிந்தால் அந்தக் குடும்பம் எப்படித் தத்தளிக்கும் என்பதைச் சொல்லியிருக்கிறோம்.

வேறு என்ன புதிய சிறப்புகள் இருக்கிறது?

இந்தத் தொடர் கிராமிய மணத்தோடு இருக்கும்."மாறன்' என்கிற படத்தை இயக்கிய ஜவகர், இந்தத் தொடரை டைரக்ட் செய்கிறார். இதில் முதன் முறையாக என்னோடு சேர்ந்து எனக்கு அண்ணனாக ராதாரவி நடிக்கிறார். பெரும்பாலான காட்சிகளை கும்ப கோணம், சுவாமிமலை, திருவிடைமருதூர் போன்ற இடங்களில் எடுத்திருக்கிறோம். சினிமா படப்பிடிப்புக்குச் சென்ற மாதிரி அதே குவாலிட்டியோடு அவுட்டோரில் படமாக்கப்பட்டிருக்கிறது.

இரண்டு வருஷமா அரசியாக வாழ்ந்தீர்கள்? அந்தக் கதாபாத்திரத் திலிருந்து எப்படி வெளியே வந்தீர்கள்?

ரொம்ப கஷ்டமாகத்தான் இருந்தது. நான் அந்தக் கதாபாத்திரத்திலிருந்து வெளியே வர ரொம்ப நாளாகக் காத்திருந்தேன். சினிமாவில் வந்து ரெண்டு வேடம் பண்றதுக்கு நிறைய நேரம் எடுத்து பண்ணுவோம். டிவியைப் பொறுத்த வரைக்கும் நிற்கவே டயம் கிடையாது. அப்படி இருக்கும்போது ரெண்டு ரோல் செய்வது ரொம்ப கஷ்டமான விஷயம். குரலை மாற்ற வேண்டும், டிரெஸ் மாற்ற வேண்டும். ரொம்ப ரொம்ப சேலஞ்சிங்கான கேரக்டர். அந்த கேரக்டருக்கு குட்பை சொல்ற நேரம் வந்தது.. கஷ்டமாக இருந்தாலும் சந்தோஷம்தான்.

இரவு ஒன்பது முப்பது என்றால் அது உங்கள் நேரம் என பத்து வருடங்களுக்கும் மேலாக நிலைக்க வைத்துவிட்டீர்கள்? அதன் ரகசியம் என்ன?

ரகசியமே கிடையாது. எல்லாம் போராட்டம்தான். இயல்பிலேயே எனக்குள்ளே போராட்ட குணம் இருப்பதால் அதைத் தக்கவைத்துக் கொள்ள முடிகிறது. கஷ்டம் என்று சொல்ல முடியாது. தினம் ஒரு பிரச்னையை உருவாக்கி அதற்கு எதிர்பார்ப்பு உருவாக்க நிறைய உழைக்க வேண்டியிருக்கிறது. சில சமயம் மிகப்பெரிய சிக்கல்கள் எல்லாம் வரும். அதையெல்லாம் தாங்கி சமாளிக்க வேண்டியதுதான்.

"செல்வி'யாவும் "அரசி'யாகவும் நடித்தீர்கள். இதில் எந்த வேடம் உங்களுக்குப் பிடித்திருந்தது?

ரெண்டும் வித்தியாசம்தான். "செல்வி' மூணு வருஷம் பண்ணுனேன். "அரசி' ரெண்டரை வருஷம் பண்ணுனேன். எனக்கு நான் எடுத்துக் கொண்ட எல்லா வேடங்களும் பிடிக்கும், அதை நான் ரசித்துப் பண்ணுவதால்.

நீங்கள் தயாரிக்கும் "செந்தூரப்பூவே' தொடரில் நீங்கள் ஏன் நடிக்கவில்லை?

எவ்வளவுதான் நடிக்கிறது? நான் பிஸினûஸப் பார்க்கணும். தயாரிப்பைப் பார்க்கணும். நடிப்பைப் பார்க்கணும். பசங்களைப் பார்க்கணும். கணவரைப் பார்க்கணும். எல்லாம் இருக்கே. ஒரு சீரியலுக்கு மேல் நடிக்கிறது ரொம்ப கஷ்டமான வேலை. நேரம் கிடைக் கும்போது பசங் ககூடதான் இருக்கேன். அவங்க ஹோம் ஒர்க் பார்ப்பது, ஸ்கூல் பிரச்னைகளைப் பற்றிப் பேசுவது இதற்கே நேரம் போய்விடுகிறது.

சில நடிகைகளிடம் பேசியபோது உங்களை ரோல் மாடலாக நினைக்கிறார்கள்? அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

கீழே விழுந்தாலும் டக்குன்னு எழுந்திருச்சி நடக்க வேண்டும். உருண்டு புரண்டு அழுதுகிட்டு இருக்கமுடியாது. அதை ரொம்ப சீக்கிரமா கத்துக்கிட்டேன். அதைப் பார்த்து அப்படி நினைச்சிருப் பாங்க. நான் எப்படி வந்தேன், எப்படி இருக்கேன், எப்படி எல்லாம் விழுந்து அடி பட்டு எழுந்தேன் என எல்லாமே அவர்களுக்குத் தெரிகிறதில்லையா?

வேறு படங்களில் நடிப்பதில்லையே ஏன்?

நடிக்கக் கூடாது என்று இல்லை. நேரம் சரியாக அமையவில்லை. கண்டிப்பாக நடிப்பேன். சரியான நேரமும் கேரக்டரும் அமைந்தால் நிச்சயம் நடிப்பேன்.

உங்களுடைய "அரசி' இயக்குநர் சமுத்திரக்கனி, "நாடோடிகள்' படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என எல்லா மொழிலேயும் வாய்ப்பு கிடைத்து உயர்ந்திருக்கிறாரே? அவரைப் பற்றி?

அந்தக் கதையை நான் பண்ண வேண்டியது. அவர் என்னிடம் அந்தக் கதையை சொன்னபோதே நான் சொன்னேன். ரொம்ப நல்லா இருக்கு கனி. இந்தச் சமயத்துல எனக்கு வேறு கமிட்மென்ட் இருந்ததால் இந்தப் படம் பண்ண முடியாமல் போய்விட்டது. இருந்தாலும் அவர் நம்பிக்கையோட ஜெயிச்சிருக்கார். "செல்லமே' தொடர் ஆரம்பமாவதைக் கேள்விப்பட்டு, "உங்க புது சீரியலில் பத்து நாள் வந்து ஒர்க் பண்ணிட்டு போவட்டுமா?'ன்னு போன் செய்தார். அப்படி ஒரு சென்டிமெண்ட் அவரிடம்.

சின்னத்திரை மூலமா மக்களைத் தினம் சந்திக்கிறீர்கள்? அவர்களுக்கு இதன் மூலமாக என்ன சொல்ல விரும்புறீர்கள்?

நான் நினைக்கிறது சொல்றது எல்லாமே சீரியல் மூலமா சொல்லிடுறேன். அடிப் படையில் எனக்கு "நீ அப்படி இருக்கணும், இப்படி இருக்கணும்' என்று அட்வைஸ் பண்ணுவதெல்லாம் பிடிக்காது.எந்தத் துறையில் இருந்தாலும் குடும்பத் தலை வியா இருந்தாலும் அல்லது வேலைக்குச் சென்றாலும் சமையல்காரியாக இருந்தாலும் எந்த இடத்திலும் உறுதியாக இருந்தோம் என்றால் நம்மால் சாதிக்க முடியும்.
ஸ்ரீதேவி குமரேசன்

என் கல்யாணம் எப்போது - நடி‌கை‌ சங்‌கவி‌


கன்னடத்தில் பிஸியாக இருக்கும் நடிகை சங்கவி ஜெயா டிவியில் புதியதாக ஒளிபரப்ப இருக்கும் புதிய தொடர் "சாவித்திரி'யில் அதன் நாயகியாக நடிக்கிறார். நடிகை சங்கவியை படப்பிடிப்புத் தளத்தில் சந்தித்தோம். ஒரு ஷாட் முடிந்து அடுத்த ஷாட்டிற்குச் செல்லும் இடைவெளியில் நம்மிடம் பேசினார்.
ஜெயா டிவியில் ஆரம்பமாகும் சாவித்திரி என்ன மாதிரியான கதை? அதில் நடிக்கிற அனுபவம் எப்படி இருக்கிறது?

சாவித்திரி ஒரு நடிகையின் கதை. கதையைக் கேட்கும்போதே எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. மூன்று வித்தியாசமான கேரக்டர். நல்லா பெர்ஃபாம் பண்ணுவதற்கான கேரக்டர். நல்ல சப்ஜெக்ட். கேரக்டர் மாறிக் கொண்டே இருக்கும். ரொம்ப இன்னோசென்ட்டாக இருக்கிற ஒரு பெண் அவள் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்னைகள், அதனால் ஏற்படுகின்ற மாற்றங்கள், அதில் இருந்து மீண்டும் எப்படி ஒரு நல்ல நிலைக்கு வருகிறாள் இதெல்லாம் சொல்வதுதான் "சாவித்திரி'. அழகே இல்லாத ஒரு பெண் தன்னை எப்படி ஒரு நடிகையாக்கிக் கொள்கிறாள். ஒரு நடிகையாக அவளுக்கு ஏற்படும் ஏமாற்றங்களை எப்படிச் சந்திக்கிறாள் என்பது போன்ற கதை. நிறைய முயற்சியெடுத்துப் பண்ணியிருக்கேன். மக்களிடம் எப்படி வரவேற்பு இருக்கும் என்று தெரியவில்லை.

சினிமா, சின்னத்திரை என்ன வித்தியாசம்?

சின்னத் திரையில் நடிக்கும்போது நான்தான் ஹீரோயின். சின்னத் திரையில் பெண்களுக்குத்தான் அதிகம் முக்கியத்துவம் இருக்கும். நடிப்புத் திறமையை முழுமையாகக் காட்டுவதற்கு வாய்ப்பும் இருக்கும். சினிமாவில் அப்படிக் கிடையாது. வந்தோமா? நாலு சீன் பண்ணினோமா? டான்ஸ் பண்ணினோமா? அப்படித்தான் இருக்கும்.

தொடர்களில் நடிப்பதால் சினிமா "டச்' குறைந்திருக்குமே?

அப்படி ஒன்றும் இல்லை. நான் இப்போதும் சினிமாவில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். இப்போது கூட "மன்மதராஜா' போய்க் கொண்டு இருக்கிறது. கன்னட படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

எல்லா மொழிகளிலும் சேர்த்து எத்தனை படங்கள் நடித்திருக்கிறீர்கள்? அவற்றில் மறக்க முடியாத படம்?

தமிழ், தெலுங்கு, கன்னடம் மூன்று மொழிகளிலும் சேர்த்து இதுவரை 100 படங்கள் பண்ணியிருக்கிறேன். மறக்க முடியாத படம் என்று சொல்வதை விட எனக்கு நல்ல பெயர் வாங்கித் தந்த படம் "செந்தூரம்' தெலுங்குப் படம். அந்தப் படத்திற்கு நேஷனல் அவார்டு கிடைத்தது. தமிழில் "ரசிகன்' படம்தான் எனக்கு ஒரு பிரேக் கொடுத்தது. அதற்குப் பிறகு கேரக்டர் ரோல் என்று சொல்வது போல அமைந்தது "பொற்காலம்' தான்.

சினிமாவுக்கு இப்போது வருகிற ஆர்ட்டிஸ்ட் சினிமாவைப் பற்றி நன்றாகத் தெரிந்து கொண்டு வருகிறார்கள். நான் அந்த மாதிரி ட்ரெயினிங் எதுவும் எடுத்துக் கொண்டு வரவில்லை. இங்கே வந்துதான் எல்லாவற்றையும் கற்றுக் கொண்டேன்.

தமிழ் தவிர பிறமொழிப் படங்களில் என்ன மாதிரியான கேரக்டர்ஸ் பண்ணுகிறீர்கள்?

சமீபத்தில் கன்னடத்தில் "அணாதெரு' - பிதாமகன் ரீமேக், அதில் உபேந்திரா - விக்ரம் ரோல் பண்ணினார். தர்ஷன் - சூர்யா ரோல் பண்ணினார். அடுத்து ரமேஷ் அரவிந்த் ஜோடியாக ஒரு படம் பண்ணிக் கொண்டு இருக்கிறேன். அந்தப் படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. அது மராட்டி மொழிப் படம் ரீமேக். அப்புறம் "இந்திரா' என்று ஒரு படம். தர்ஷன் ஜோடியாக நடிக்கிறேன். முனி ரத்தினம் சார் ரீமேக் செய்த "ரத்தக் கண்ணீர்' படத்தில் நடித்தேன். அது நல்ல பெயர் வாங்கித் தந்தது.

சூட்டிங் இல்லாத நேரத்தில் உங்களுடைய பொழுதுபோக்கு?

நண்பர்களோடு ஜாலியாக அரட்டை அடிப்பது. சினிமாவுக்குப் போவது. வெளியே போய் சாப்பிடுவது. சிலநேரம் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து கொண்டு இருப்பது.

எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள்?

என் கல்யாணம் எப்போது என்று எனக்கே தெரியாது. கடவுளுக்குத்தான் தெரியும். வீட்டில் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இன்னும் யாரும் முடிவாகவில்லை. முடிவானதும் எல்லாருக்கும் சொல்கிறேன்.
ஸ்ரீதேவி குமரேசன்

ஆர்‌த்‌தி‌-கணே‌ஷ்‌கர்‌ ஜா‌லி‌ கலா‌ட்‌டா‌...


இந்‌த மாதம் 23ம்‌ தே‌தி‌ நடக்கவிருக்கும் திருமண வேலைகளில் பரபரப்பாக இருக்கும் "மானாட மயிலாட' புகழ் ஆர்த்தி - கணேஷ் இருவரையும் ஒரு விழாவில் மடக்கிப் பிடித்தோம். இதோ அவர்களுடன் ஒரு ஜாலி கலாட்டா...

சின்னத்திரை, பெரிய திரை இரண்டிலும் நீங்கள் இருவரும் ஒன்றாக நடித்திருக்கிறீர்கள்? உங்கள் இருவரில் யார் முதன்முதலில் அன்பைத் தெரிவித்தீர்கள்?

ஆர்த்தி:அன்பைத் தெரியப்படுத்தியது என்று எதுவும் இல்லை. இருவரும் சிறுவயதிலிருந்து குடும்ப நண்பர்கள். அவரோட அம்மா இறந்த கொஞ்சநாள்லேயே அவுங்க பாட்டியும் இறந்துட்டாங்க. அவர்களுக்குப் பிறகு அவுங்க வீட்டைக் கவனித்துக் கொள்ள பெண்கள் யாரும் இல்லை. இந்தச் சமயத்தில் எங்கள் வீட்டில் எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்கள். ஆனால் அவருக்கு பெண் பார்க்க அவரது வீட்டில் யாரும் இல்லை. அப்பா மட்டும்தான். அவரும் அம்மா இறந்ததில் இருந்து ரொம்ப உடைந்து போய் இருந்தார். அதனால நாங்க ரெண்டு பேரும் மூணு மாதத்திற்கு முன்பு இது பற்றிப் பேசினோம். எங்க அப்பாவிடம் கலந்து சொல்றேன்னு சொன்னார். அவுங்க அப்பாவும் முறைப்படி வந்து எங்க வீட்ல பொண்ணு கேட்டார்.

உங்கள் இருவரையும் இணைத்து நிறையக் கிசுகிசு வந்ததே?
ஆர்த்தி:எங்களைப் பற்றி நிறைய கிசுகிசு எல்லாம் வந்தது. அது எங்களுக்கு ரொம்ப வருத்தமா இருக்கும். எங்க அம்மா ரொம்ப பீல் பண்ணுவாங்க. நல்ல பேமிலி, நல்ல பையன், நல்ல நட்பை இப்படிக் கெடுக்கிறாங்களேன்னு. இதனால் இரண்டு பேரோட பேரும் கெட்டுப் போகுதேன்னு கவலைப்பட்டாங்க. அந்த மாதிரி கிசுகிசு எல்லாம் வரும்போது அவர்களிடம் போய் சண்டை போட வேண்டும் என்று தோன்றும். அது போல கிசுகிசு வந்ததுனாலேயே நாங்கள் இரண்டு பேரும் ஒரு மூன்று மாதம் மீட் பண்ணவே இல்லை. அப்படி நாங்கள் காதலித்தால் இப்போ சொல்ற மாதிரி அப்பவே சொல்லிருக்கப் போறோம். இதுல என்ன வந்திருக்கு. நாங்க என்ன தப்பாவா முடிவெடுப்போம். உண்மையிலேயே காதல் கீதல் என்று ஒன்றும் கிடையாது. நீறைய சேர்ந்து நடித்திருக்கோம். அதனால வந்த வதந்திகள்.

உங்கள் இரண்டு பேரையும் கணவன் - மனைவியாகத்தான் மக்கள் நினைத்தார்கள். அதைப் பற்றி என்ன பீல் பண்ணுவீங்க?

கணேஷ்:எங்கள் இருவருக்கும் திருமணம் முடிவானது தெரிந்ததும் நிறையப் பேர் போன் பண்ணிக் கேட்டாங்க. இப்போதானா உங்கள் திருமணம். பேப்பர்ல செய்தி எல்லாம் கொடுத்து...காமெடியெல்லாம் பண்ணாதீங்க என்று சொன்னார்கள். கணேஷ் உண்மையைச் சொல்லு. முன்பே உனக்கு கல்யாணம் ஆகலன்னு சிலர் கேட்டாங்க. எனக்குத் தூக்கிப் போட்டுட்டு அடப்பாவிகளான்னு.

சின்ன வயதில் இரண்டு பேரும் ஒன்றாகப் படங்கள் நடித்திருக்கிறீர்கள்? வளர்ந்த பிறகு எப்போ எங்கே எப்படிச் சந்தித்தீர்கள்?

ஆர்த்தி:சின்ன வயசுல படங்கள் ஒண்ணா நடிச்சோம். அதன் பிறகு ஒரு பெரிய இடைவெளி ஏற்பட்டது. கிட்டத்தட்ட ஓர் ஆறுவருடம் கழித்து சன் டிவியில சூப்பர்10 நிகழ்ச்சிக்காக மறுபடியும் இரண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து பண்ணினோம். முதல் நாள் சூட்டிங் ஸ்பாட்லதான் மீட் பண்ணினோம்.
கணேஷ்:சூப்பர் 10 நிகழ்ச்சியிலதான் சந்தித்தோம். முதல் சந்திப்பிலேயே அடி பின்னி எடுத்துட்டாங்க.
ஆர்த்தி:ஆறு வருஷம் தொடர்ந்து நடிச்சோம். அந்த நிகழ்ச்சியில எங்க ரெண்டு பேரோட ஜோடி நல்லா இருக்குன்னு கலைஞர் டிவியில கூப்பிட்டாங்க. கலைஞர் டிவியில் பல நிகழ்ச்சிகள் பண்ணினாலும் மானாட மயிலாடதான் எங்களுக்குப் பெரிய பிரேக் கொடுத்தது.

திருமணத்திற்குப் பின்பு தொடர்ந்து நடிப்பீங்களா?

கணேஷ்:வழக்கமாப் பெண்களைத்தானே கேட்பீங்க. இப்போ எங்களையும் கேட்க ஆரம்பிச்சிட்டீங்களா?
ஆர்த்தி:திருமணத் திற்குப் பிறகு நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு திரும்ப வந்து நடிக்கிற மாதிரி பிட் போடறது எல்லாம் கிடையாது. கண்டிப்பா ரெண்டு பேருமே நடிப்போம். சினிமா எங்களுடைய தொழில் மட்டுமல்ல. உயிர்.