Thursday, June 24, 2010

குழந்தை நக்மாவாக நான்

9.00 மணிக்கு சன் டிவியில் விறுவிறுப்பாக ஒளி
பரப்பாகிக் கொண்டிருக்கும் "தென்றல்' தொடரில் நல்ல பரிச்சயமான கதாபாத்திரம் தீபா. அத்தொடரின் கதாநாயகி துளசியின் தோழியாக வந்து "நிழல்கள்' ரவியை படாதபாடுபடுத்தும் கதாபாத்திரம் கலக்கிக் கொண்டிருக்கும் ஹேமா ஒரு சந்திப்பு..
சின்னத்திரையில் தொடர்கள் பக்கம் எப்போது வந்தீர்கள்?
ராடன் நிறுவனத்தின் "சித்தி' தொடர்தான் எனக்கு முதல் தொடர். அந்த முதல் தொடரிலேயே எனக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தது. அடுத்து "மனைவி' என்ற தொடரில் நடித்தேன்.
அதன்பிறகு ஒரு சிறிய இடைவெளி. "விஜய்' டிவியில் "கனா காணும் காலங்கள்' தொடரில் நடித்தேன். எனக்கு அதில் நன்றாக நடிக்கக் கூடிய வேடம் கிடைத்தது. அந்தத் தொடர் என் வயதுக்குரிய தொடராக அமைந்தது. பள்ளியில் படிக்கும் பெண்ணாக நடித்திருந்தேன். அதற்குப் பின் இப்போது "தென்றல்' தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.
"தென்றல்' தொடரில் நடிக்கும் அனுபவம் பற்றி சொல்லுங்கள்?
"கனா காணும் காலங்கள்' தொடரில் எனக்கு அமைதியான கேரக்டர். அதற்கு நேர் எதிரான கேரக்டர் "தென்றலி'ல் வரும் தீபா கேரக்டர். வெளியே எங்காவது போகும் போது "தீபா வராங்கன்னு' சொல்கிறார்கள். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது கேட்பதற்கு. அதுதான் இந்த கேரக்டருக்குக் கிடைத்த வெற்றி என்று நினைக்கிறேன்.
சினிமாத் துறைக்கு எப்போது வந்தீர்கள்?
என் அம்மாவோட தம்பிகள் உதய்குமார்- சுரேஷ் என்ற என் மாமா இருவரும் சினிமாத்துறையில்தான் இருக்கிறார்கள். ஒரு மாமா, மணிரத்னம் சார் இயக்கிய "நாயகன்' படத்தில் நடித்திருக்கிறார். அவர் ஷூட்டிங் போகும் போது என் பாட்டி எங்களை எல்லாம் அங்கு அழைத்துப் போவார்கள்.
இப்படி போன போது எனக்கு ரஜினி சாரோட "பாட்ஷா' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தில் ரகுவரன் சாரோட பெண்ணாக வரும் சின்னகுழந்தை நான்தான். இப்படித்தான் சினிமாத் துறைக்குள் வந்தேன். "சூர்ய வம்சம்' போன்ற படங்களிலும் நடித்துள்ளேன். நடிப்பு என் ரத்தத்தோடு கலந்துவிட்டது.
மறுபடியும் பெரிய திரை பக்கம் போகும் எண்ணம் உண்டா?
பெரிய திரையில் இருந்து வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. எனக்கு பொருத்தமான நல்ல ரோலில்தான் நடிக்கவேண்டும் என்று ரொம்ப உறுதியாக இருக்கிறேன். சும்மா வந்து நின்றுவிட்டுப் போக எனக்கு ஆசையில்லை. ஒரே படம் நடித்தாலும் எல்லாருடைய மனதிலும் நிற்கும்படி நடிக்கவேண்டும்.
வேறு என்ன தொடர்கள் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள்?
சன் டிவியில் காலை பத்தரை மணிக்கு ஒளிபரப்பாகும் "மகள்' தொடரில் நடிக்கிறேன். அதில் சந்திரா லக்ஷ்மன் அவங்களோட உறவுக்கார பெண்ணாக நடித்து வருகிறேன்.
என்ன மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க விருப்பப்படுவீர்கள்?
நடிக்க வந்தாச்சு. இதில் இந்த மாதிரியான கேரக்டரில்தான் நடிக்கவேண்டும் என்று நினைக்காமல் எல்லாவிதமான கேரக்டர்களும் நடிக்கணும்.
சின்ன வயதிலிருந்தே நடிப்பின் மீது எனக்கு ஆர்வம் அதிகம். ஒரு நல்ல நடிகையாகத்தான் வரவேண்டும் என்று எப்போதுமே நினைத்துக் கொண்டிருப்பேன். அந்த ஆசை இன்று ஓரளவு நிறைவேறியிருக்கிறது.
உங்கள் குடும்பத்தில் உங்களுக்கு யாருடைய சப்போர்ட் அதிகமாகக் கிடைக்கும்?
எங்கள் குடும்பம் பெரியது. எனக்கு இரண்டு அண்ணன், இரண்டு அக்கா இருக்கிறார்கள்.
நான்தான் வீட்டில் கடைசி பெண். அண்ணன்கள், அக்காவுக்கு எல்லாம் திருமணம் ஆகிவிட்டது. எல்லாருமே எனக்கு ரொம்ப துணையாக இருப்பாங்க. நான் நடிப்பது எல்லாருக்குமே ரொம்பப் பிடிக்கும். அக்கா, மாமா, சித்தப்பா, சித்தி என்று எல்லாருமே என் நடிப்பை விரும்பிப் பார்ப்பார்கள்.
பங்குச் சந்தை விவரங்கள் என்றாலே பெரும்பாலானோருக்கு எட்டிக்காய் கசப்பாக இருக்கும்.​ அதை அழகுத் தமிழில் விவரித்து அசத்தி வருகிறார் அருள்செல்வி.​ மக்கள் தொலைக்காட்சியில் தினமும் காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை 'வளாகம்' நிகழ்ச்சியின் மூலம் எடுத்துச் சொல்லும் அவரைச் சந்தித்தோம்.
நிகழ்ச்சி தொகுப்பாளினியானது எப்படி?​​
நான் கல்லூரி முடித்துவிட்டு பள்ளி ஆசிரியையாக வேலை பார்த்துக்கொண்டிருந்தேன்.​ திருமணமானதால் ஆசிரியை வேலையைத் தொடர முடியாமல் வீட்டில் இருந்தேன்.​ அந்த நேரத்தில் மக்கள் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் தேவை என்று விளம்பரப் படுத்தியிருந்தார்கள்.​ எனக்குத் தமிழ் மீது இருந்த ஆர்வத்தினால் அதற்கு விண்ணப்பித்தேன்.​ ஆடிஷனுக்குக் கூப்பிட்டார்கள்.​ சென்று வந்த இரண்டு நாளில் நான் தேர்வாகி என்னுடைய நிகழச்சியைத் தொகுத்து வழங்க ஆரம்பித்துவிட்டேன்.​ ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.
​ ​தற்போது என்னென்ன நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறீர்கள்?​​
காலை 8.30 முதல் 9.30 வரையில் ஒளிபரப்பாகும் பங்குச் சந்தை தொடர்புடைய 'வளாகம்' நிகழ்ச்சியும்,​​ வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகும் 'கை மணம்' என்ற நிகழ்ச்சியும் வழங்கிக் கொண்டிருக்கிறேன்.​ ஒரு சில நேரங்களில் வழக்கமான தொகுப்பாளர்கள் வரவில்லை என்றால் வேளாண் சந்தை,​​ ஏற்றுமதி இறக்குமதி,​​ வேலைவாய்ப்பு தகவல் போன்ற ​ நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குவேன்.
​ ​பொதுமக்களிடம் நேரடித் தொடர்பு கொண்டு உரையாடும்போது என்ன உணர்வு ஏற்படும்?​​
சந்தோஷமாக இருந்தாலும் சரி,​​ கோபமாக இருந்தாலும் சரி கேமிரா முன் வந்து நின்று விட்டால் எல்லாவற்றையும் மறந்து நிகழ்ச்சியில் மட்டுமே கவனம் இருக்கும்.​ சில சமயங்களில் ஊர் பக்கத்தில் இருந்து மக்கள் பேசும் போது அவர்கள் தமிழைக் கேட்டதும்,​​ முகம் தெரியாத நபராக இருந்தாலும் ஓர் இனம் புரியாத சந்தோஷம் ஏற்படும்.​ நம்ம சொந்த ஊரில் இருந்து தொடர்பு கொண்டு பேசுகிறார்கள் என்று ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கும்.​ அதே சமயத்தில் கிராமத்து மக்களிடம் ஏற்பட்டிருக்கும் ​ வளர்ச்சியையும்,​​ விழிப்புணர்வையும் தெரிந்துகொள்ள முடியும்.​ ​
தொடர்களில் உங்களைப் பார்க்க முடியவில்லையே?​​
தொடர்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வருகின்றன.​ ஆனால் எனக்கு நடிப்பதில் அவ்வளவாக விருப்பமோ,​​ ஆர்வமோ இல்லை என்பதால் வாய்ப்புகளை ஏற்றுக் கொள்வதில்லை.​ ஆனால் எனக்கு சிறு வயது முதலே விளம்பரப் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.​ அதற்கு இது வரை சரியான வாய்ப்பு அமையவில்லை.
மக்கள் தொலைக்காட்சியைப் பொருத்தவரை தமிழுக்கு முன் உரிமை அதிகமாக இருக்குமே எப்படிச் சமாளீக்கிறீர்கள்?​​
ஆங்கிலம் கலக்காமல் நல்ல தமிழில் பேசி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவது எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது.​ நிகழ்ச்சி வழங்கும் ஒரு மணி நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் ஆங்கிலம் கலந்து பேசுவதை நினைத்தால் சில நேரம் வெட்கமாக இருக்கும்.​ பொதுவாக நிறைய பேர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள் ​ எப்படி ஆங்கிலம் கலக்காமல் உங்களால் தமிழில் மட்டுமே பேச முடிகிறது என்று.​ எனது குடும்பம் தமிழ் பாரம்பாரிய மிக்க குடும்பம்.​ என் வீட்டில் உள்ளவர்கள் எல்லாருமே தமிழ் எம்.ஏ.​ படித்தவர்கள்.​ அதனால் பொழுதுபோக்குக்காக அமர்ந்து பேசும்போது கூட சிலப்பதிகாரம்,​​ மணிமேகலை போன்றவற்றைப் பற்றிப் பேசுவார்கள்.​ அதுதான் எனக்கு தமிழ் மீது பற்று ஏற்பட ஒரு காரணம் என்று நினைக்கிறேன்.​ இப்படி ஒரு மணி நேரம் தமிழிலேயே பேசுவதை எனக்குக் கிடைத்த அரிய வாய்ப்பாக நினைக்கிறேன்.​ ​
உங்களுடைய பொழுதுபோக்கு என்ன?​​
எனக்கு கைவினைப் பொருட்கள் செய்வதில்,​​ ஓவியம் வரைவதில்,​​ தஞ்சாவூர் ஓவியங்கள் வரைதல் போன்ற கலைநயம் மிக்க வேலைகள் மீது ஈடுபாடு அதிகம்.​ அதற்கான பயிற்சி வகுப்புகளும் நடத்தி வருகிறேன்.​ யோகா முறைப்படி கற்றுக்கொண்டிருக்கிறேன்.​ அதனால் யோகா பயிற்சியும் அளித்து வருகிறேன்.
உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?​​
ஒரு தயாரிப்பாளராக நிகழ்ச்சிகளைத் தயாரித்துக் கொடுக்க வேண்டும் என்கிற ஆசை நிறைய இருக்கிறது.
-ஸ்ரீதேவிகுமரேசன்

சஹானா சாரல் தூவுதோ..!

சின்னத்திரை தொடர்கள் மூலம் தனது அமைதியான நடிப்பால் ரசிகர்களின் மனதை கவர்ந்த பிரபல கர்நாடக இசை பாடகியான அனுராதா கிருஷ்ணமூர்த்தியை ஒரு திரைவிழாவில் சந்தித்தோம்.
பிரபல பாடகியான நீங்கள் சின்னத்திரை பக்கம் வந்தது எப்போது, எப்படி?
ஜெயா டிவியில் "சஹானா' என்ற தொடர் மூலம் சின்னத்திரையில் என்னை அறிமுகப்படுத்தியவர் பாலசந்தர் சார்தான். "சிந்து பைரவி' படத்தின் இரண்டாம் பகுதிதான் அந்தத் தொடர். சுஹாசினி செய்த அந்தக் கதாபாத்திரத்தை நான் செய்தேன். அந்தக் கதைக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று என்னை நடிக்க வைத்தார் பாலசந்தர். அதுவே எனக்குப் பெருமையாக இருந்தது.
இப்போது என்ன என்ன தொடர்கள் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள்?​​
கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்யராஜ் சாரோட "விளக்குவெச்ச நேரத்துல', பாலிமர் சேனலில் ஒளிபரப்பாக உள்ள "மூன்று முகம்' தொடரில் நடித்துள்ளேன். தற்போது இந்த இரண்டு தொடர்கள்தான்.
அரசி தொடரில் உங்கள் நடிப்பை பார்த்துவிட்டு உங்கள் நண்பர்கள், வீட்டில் உள்ளவர்கள் என்ன சொன்னார்கள்?​​
ராதிகாவுடன் நடிதது நல்ல அனுபவமாக இருந்தது.புரொடியூசரா,நடிகையா ரொம்ப சாலியான அவரகளுடன் நடித்தது ரொம்ப நம்பிக்கையாக இருந்தது. அந்தத் தொடரில் என்னை கொடுமைப்படுத்துவது போல் வரும் காட்சிகளையெல்லாம் என் மாமியார், என் நண்பர்கள் எல்லாம் பார்த்துவிட்டு இந்த மாதிரி கேரக்டர் எல்லாம் செய்ய வேண்டாம் என்று சொல்வார்கள்.
மேடையில் பாடல்கள் பாடுவதற்கும், திரையில் நடிப்பதற்கும் என்ன வித்தியாசம் உணர்ந்தீர்கள்? எது சுலபமாக இருப்பதாக நினைக்கிறீர்கள்?​​
மேடை கச்சேரிகள் மக்களின் பார்வையில் நேரடியாக செய்கிறோம். ஆனால் திரையில் அப்படியில்லை. நம்ம மனதிற்குள் ஒரு கேரக்டரை சித்திரிச்சு அதை நடித்து மக்களிடம் டிவியின் மூலமா கொண்டு செல்கிறோம். இரண்டுமே சுலபம் இல்லை. இரண்டிலுமே கஷ்டங்கள் இருக்கின்றன. இரண்டிலுமே முழுமையான கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.
நீங்கள் நடித்த கேரக்டரில் ரொம்பவும் விரும்பி நடித்த கேரக்டர் எது?​​
"சஹானா' சிந்து, "திருப்பாவை' ரங்கநாயகி, "விளக்குவெச்ச நேரத்துல' ஞானாம்பிகாவாக, பாலிமர்காக இப்போது நடித்திருக்கும் திலகவதி கேரக்டர்... எல்லாமே நான் ரொம்ப விரும்பி நடித்தவைதான். அதில் ரொம்ப பிடித்தது "சஹானா' தொடர். ஏன் என்றால் அதுதான் நான் முதன் முதலில் நடித்த தொடர். நடிப்பே தெரியாமல் செய்தது அந்த கேரக்டர். அதே மாதிரி எனக்கு அமைந்த கதாபாத்திரங்களின் பெயர்களும் கடவுள் கிருபையால் கிடைத்தது என்று நினைக்கிறேன்.
நீங்கள் விரும்பி ரசிக்கும் சங்கீதம் யாருடையது?​​
நான் எப்பவுமே சொல்வது போல் எம்.எஸ்.அம்மாவின் இசையும்என் தந்தையின் இசையும்தான் மிகவும் விரும்பி ரசிப்பேன். ஆனால் விதவிதமான சங்கீதங்களைக் கேட்க கேட்க நான் புரிந்து கொண்ட ஒரு விஷயம் என்னவென்றால் சங்கீதம் ஒரு வாகனம் போல பயணம் செய்து கொண்டே இருக்கும். அதில் உங்கள் மனதை தாக்கி ஒரு சங்கீதம் ஈரப்படுத்தியது என்றால் அது யார் பாடினாலும் ரசிக்க தோன்றும். அப்படி பாதித்தவர்கள் ஒவ்வொருத்தர் பெயராக சொல்ல வேண்டும் என்றால் நேரம் போதாது.
சாந்தமான குரலால் உங்கள் ரசிகர்களை ஈர்த்து வைத்திருக்கும் ரகயம் என்ன?​​
என் இசை அப்படி ரசிகர்களை ஈர்த்து வைத்திருந்தால் கடவுளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். அதே போல எனக்கு இந்த சங்கீதத்தை அளித்த என் தாய் தந்தைக்கும், எம்.எஸ்.அம்மாவுக்கும் தான் நன்றி சொல்லணும். சங்கீதம் என்று இல்லை எந்த ஒரு வேலையாக இருந்தாலும் அதை முழு மனதோடு, ஆத்மார்த்தமாக செய்தால் வெற்றி நிச்சயம். அதே போல நம் தன்மானத்துக்கு எந்த பாதிப்பும் இல்லால் செய்தால் நம் உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
உங்கலுடைய இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருப்பவர்கள் யார்?​​
என் கணவர், புகுந்த வீட்டு நபர்களும், பிறந்த வீட்டு நபர்களும் ரொம்ப துணையாக இருக்கிறார்கள். அதேபோல் சினிமாத் துறையில் இருந்து நிறைய பேர் உறுதுணையாக இருக்கிறார்கள். எனக்கு கச்சேரிகள் வரும் நாட்களில் டேட்களை மாற்றி கொடுத்து நிறைய ஒத்துழைப்பு தருகிறார்கள்.இந்த நேரத்தில் அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்ள வேண்டும்.
உங்கள் ஓய்வு நேரத்தை எப்படிச் செலவிடுகிறீர்கள்?
கற்றது கையளவு, கல்லாதது உலகளவு என்பார்களே அது போல சங்கீதத்தில் பாடம் செய்து கொள்வேன். புத்தகங்கள் படிப்பேன். இப்போது சமீப காலமாக நிறைய படங்கள் பார்க்க ஆரம்பித்துள்ளேன். எனக்கென்று ஒரு சிறிய நண்பர்கள் வட்டம் இருக்கிறது. அவர்களோடு அமர்ந்து நிறைய நல்ல விஷயங்களைப் பகிர்ந்து கொள்வேன்.

கா‌தல் !

நி‌த்‌தம்‌ நி‌த்‌தம்‌ என்‌ நி‌னை‌வி‌ல் ‌வந்‌து
யு‌த்‌தம் ‌செ‌ய்‌தா‌ய்‌ என்‌உயி‌ரே‌!
ஒரா‌யி‌ரம்‌ முறை ‌எனக்‌கு‌
நா‌னே‌கே‌ட்‌டு கொ‌ண்‌டே‌ன்‌
நீ ‌எனக்‌குள்‌இருப்‌பது நி‌ஜம்‌ தா‌னா‌ என்‌று!
எத்‌தனை ‌முறை‌ நீ‌ சொ‌ல்‌ல கே‌ட்‌டி‌ருந்‌தா‌லும்‌
மறுபடி‌யு‌ம்‌ மறுபடி‌யு‌ம்‌ கே‌ட்‌டு தூ‌ண்‌டுகி‌றது
உனக்‌குள்‌ நா‌ன் ‌வந்‌ததை‌ பற்‌றி‌!
உரை‌ந்‌து கி‌டக்‌கி‌றே‌ன் ‌உன்‌னுள் ‌நா‌ன்‌
பி‌ரி‌த்‌து எடுப்‌ப‌து உன்‌னா‌ல்‌ சா‌த்‌தி‌யமா?
அழகே ‌என்‌றா‌ய் ‌நா‌ன்‌அழகி‌ல்‌லா‌த போ‌தி‌லும்‌.
அன்‌பே‌ என்‌றா‌ய்‌ நா‌ன்‌கோ‌வப்‌பட்‌ட போ‌தி‌லும்‌.
தொ‌ட்‌டும்‌, தொ‌டா‌மலும்‌‌ நீ ‌உரசி‌ய போ‌தெ‌ல்‌லா‌ம்‌
எனக்‌குள் ‌உயி‌ர்‌த்‌து எழுந்‌தது கா‌தல்‌!
உன்‌ ஸ்‌பரி‌சம் ‌நி‌னை‌வி‌ல் ‌வந்‌து
உரசி‌ய போ‌தெ‌ல்‌லா‌ம் ‌பட்‌டா‌ம்‌பூ‌ச்‌சி‌யா‌ய்‌
சி‌றகடி‌த்‌தது என்‌மனம்‌!.