Wednesday, September 30, 2009

மறக்கமுடியாதரசிகர்! - அர்‌ச்‌சனா‌

சீரியலில் நடிப்பதை விட்டு விட்டு இப்போது காம்பியரிங் மட்டும் செய்து வருகிறார் "அரசி' புகழ் அர்ச்சனா. இதில் அவரது ரசிகர்கள் பலருக்கு வருத்தம். இது குறித்து அவரிடமே கேட்டுவிடலாம் என ஒரு ஷுட்டிங் ஸ்பாட்டில் அவரை மடக்கிப் பேசினோம்:

நீங்கள் இந்தத் துறைக்கு வரவேண்டும் என்று எப்போது நினைத்தீர்கள்?

நான் கல்லூரியில் படிக்கும்பொழுதே இந்தத் துறையில்தான் வரவேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். ரொம்பரொம்ப பிடித்துத்தான் வந்தேன்.

தொகுப்பாளினியாக இருந்த நீங்கள் திடீரென நடிகையானது எப்படி?

எனக்கு நடிப்பதைவிட, காம்பியரிங் செய்வதில்தான் அதிக விருப்பம். ஒரு நிகழ்ச்சியில் என்னைப் பார்த்துவிட்டு இயக் குனர் சமுத்திரக்கனி முதன்முதலில் அரசி தொடரில் நடிப்பதற்கு அழைத்தார். எனக்கு நடிப்பெல்லாம் வராது என்று பயந்தேன். அவர்தான் உன்னால முடியும் தைரியமா செய் என்று என்கரேஜ் செய்தார். ராதிகா மேடத்தோடு நடிக்கிற வாய்ப்பு வேறு. ஏன் வீண் செய்ய வேண்டும் என்று ஒத்துக் கொண்டேன். ஆனால் அரசி தொடர் மூலம் மக்கள் மனதில் எனக்கு ஒரு பெரிய அங்கீகாரம் கிடைத்தது.

திடீரென நாடகத்தில் நடிப்பதை ஏன் விட்டீர்கள்?

எனக்கு திருமணம் ஆனதினால் பாதியில் விலகிவிட்டேன். நடிப்பு, காம்பியரிங், குடும்பம் என எல்லாத்தையும் ஒரே நேரத்தில் கவனிக்க முடியாது. நேரம் இருக்காது என் பதினால் நடிப்பில் இருந்து விலகிவிட்டேன். குடும்பம் என்று வந்தபிறகு அதைக் கொஞ்சம் விட்டுக் கொடுக்கத்தானே வேண்டும். தற்போது வேறு எந்தத் தொடரிலும் நடிக்கவில்லை. காம்பியரிங் மட்டும் செய்கிறேன்.

சொந்தமாக நிகழ்ச்சிகள் தயாரிப்பது அல்லது இயக்குவது என ஏதாவது ஐடியா இருக்கிறதா?

இதுவரைக்கும் அதுபோன்ற எண்ணமில்லை அப்படி வந்தால் கண்டிப்பாக செய்வேன். உங்கள் திருமணம் காதல் திருமணமா? இல்லை... இல்லை...(அலறுகிறார்) வீட்டில் பார்த்து முடிவு செய்த பின்புதான் காதலித்தோம். நிச்சயத்திற்கும், திருமணத்திற்கும் இடையே ஆறுமாத இடைவெளி இருந்தது அப்போதுதான் கடலை போட்டோம்.

உங்கள் கணவர் எந்தளவிற்கு உங்களை புரிந்து கொண்டார்? உங்கள் நிகழ்ச்சிகளை பார்த்துவிட்டு என்ன சொல்லுவார்?

திருமணத்திற்கு முன்பு என் கணவர் அமெரிக்காவில் இருந்தார். என் நிகழ்ச்சிகளை எல்லாம் பார்த்து பார்த்து உடனுக்குடன் விமர்சிப்பார். அப்போதே ஏதாவது ஒரு ஷோ வந்தால் கூட அதைப் பார்த்துவிட்டு இப்படி பண்ணலாமே.. அப்படி பண்ணலாமே என்று சொல்லுவார். எந்த தவறு என்றாலும் வெளிப்படையாகச் சொல்வார்.

சினிமாவில், சின்னத்திரையில் நீங்கள் அதிகம் மதிக்கும் நபர் யார்?

சின்னத் திரையில்தான் எனக்கு அதிகம் தெரியும். எனக்கு மிகவும் பிடித்தவர்கள் என்று சொன்னால் அம்மு. சந்தோஷ் இவர்கள்தான்.

ரசிகர்களைச் சந்தித்திருக்கிறீர்களா? அதில் ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவம்?

காளிதாஸ் என்ற ரசிகர். அவர் அடிக்கடி ஃபோன் செய்துகொண்டே இருப்பார். ஒரு நிகழ்ச்சியில் அவரைச் சந்தித்தேன். மிகவும் சந்தோஷப்பட்டார். என் அப்பா, அம்மா போன்று சாப்பிட்டீங்களா, தூங்குனீங்களா, உடம்பை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்... என்று பாசத்தைப் பொழிந்தார். அந்த ரசிகரை மறக்கமுடியாது.

வி.ஐ.பி.களில் உங்களைப் பாராட்டியவர் யார்?

இயக்குனர் சமுத்திரகனிதான் பாராட்டியிருக்கிறார். அவர் எதிர்பார்க்கும் அளவிற்கு நடித்திருந்தால் கண்டிப்பாக பாராட்டுவார். சிவசந்திரன் சார் கூட பாராட்டியிருக்கிறார்.

தினமும் சன் டிவியில் பிறந்த நாள் வாழ்த்து நிகழ்ச்சியில் குட்டி குட்டி செய்தி சொல்வீங்களே.. அதை எல்லாம் யார் தொகுத்து கொடுப்பார்கள்?

எங்க தயாரிப்பாளர்தான். அவரே நூலகத்திலிருந்து புத்தகங்கள் எடுத்துவந்து, நிகழ்ச்சிக்கான சுவையான செய்திகளை தயாரித்துக் கொடுப்பார்.சீரியலில் நடிப்பதை விட்டு விட்டு இப்போது காம்பியரிங் மட்டும் செய்து வருகிறார் "அரசி' புகழ் அர்ச்சனா. இதில் அவரது ரசிகர்கள் பலருக்கு வருத்தம். இது குறித்து அவரிடமே கேட்டுவிடலாம் என ஒரு ஷுட்டிங் ஸ்பாட்டில் அவரை மடக்கிப் பேசினோம்:

நீங்கள் இந்தத் துறைக்கு வரவேண்டும் என்று எப்போது நினைத்தீர்கள்?

நான் கல்லூரியில் படிக்கும்பொழுதே இந்தத் துறையில்தான் வரவேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். ரொம்பரொம்ப பிடித்துத்தான் வந்தேன்.

தொகுப்பாளினியாக இருந்த நீங்கள் திடீரென நடிகையானது எப்படி?

எனக்கு நடிப்பதைவிட, காம்பியரிங் செய்வதில்தான் அதிக விருப்பம். ஒரு நிகழ்ச்சியில் என்னைப் பார்த்துவிட்டு இயக் குனர் சமுத்திரக்கனி முதன்முதலில் அரசி தொடரில் நடிப்பதற்கு அழைத்தார். எனக்கு நடிப்பெல்லாம் வராது என்று பயந்தேன். அவர்தான் உன்னால முடியும் தைரியமா செய் என்று என்கரேஜ் செய்தார். ராதிகா மேடத்தோடு நடிக்கிற வாய்ப்பு வேறு. ஏன் வீண் செய்ய வேண்டும் என்று ஒத்துக் கொண்டேன். ஆனால் அரசி தொடர் மூலம் மக்கள் மனதில் எனக்கு ஒரு பெரிய அங்கீகாரம் கிடைத்தது.

திடீரென நாடகத்தில் நடிப்பதை ஏன் விட்டீர்கள்?

எனக்கு திருமணம் ஆனதினால் பாதியில் விலகிவிட்டேன். நடிப்பு, காம்பியரிங், குடும்பம் என எல்லாத்தையும் ஒரே நேரத்தில் கவனிக்க முடியாது. நேரம் இருக்காது என் பதினால் நடிப்பில் இருந்து விலகிவிட்டேன். குடும்பம் என்று வந்தபிறகு அதைக் கொஞ்சம் விட்டுக் கொடுக்கத்தானே வேண்டும். தற்போது வேறு எந்தத் தொடரிலும் நடிக்கவில்லை. காம்பியரிங் மட்டும் செய்கிறேன்.

சொந்தமாக நிகழ்ச்சிகள் தயாரிப்பது அல்லது இயக்குவது என ஏதாவது ஐடியா இருக்கிறதா?

இதுவரைக்கும் அதுபோன்ற எண்ணமில்லை அப்படி வந்தால் கண்டிப்பாக செய்வேன். உங்கள் திருமணம் காதல் திருமணமா? இல்லை... இல்லை...(அலறுகிறார்) வீட்டில் பார்த்து முடிவு செய்த பின்புதான் காதலித்தோம். நிச்சயத்திற்கும், திருமணத்திற்கும் இடையே ஆறுமாத இடைவெளி இருந்தது அப்போதுதான் கடலை போட்டோம்.

உங்கள் கணவர் எந்தளவிற்கு உங்களை புரிந்து கொண்டார்? உங்கள் நிகழ்ச்சிகளை பார்த்துவிட்டு என்ன சொல்லுவார்?

திருமணத்திற்கு முன்பு என் கணவர் அமெரிக்காவில் இருந்தார். என் நிகழ்ச்சிகளை எல்லாம் பார்த்து பார்த்து உடனுக்குடன் விமர்சிப்பார். அப்போதே ஏதாவது ஒரு ஷோ வந்தால் கூட அதைப் பார்த்துவிட்டு இப்படி பண்ணலாமே.. அப்படி பண்ணலாமே என்று சொல்லுவார். எந்த தவறு என்றாலும் வெளிப்படையாகச் சொல்வார்.

சினிமாவில், சின்னத்திரையில் நீங்கள் அதிகம் மதிக்கும் நபர் யார்?

சின்னத் திரையில்தான் எனக்கு அதிகம் தெரியும். எனக்கு மிகவும் பிடித்தவர்கள் என்று சொன்னால் அம்மு. சந்தோஷ் இவர்கள்தான்.

ரசிகர்களைச் சந்தித்திருக்கிறீர்களா? அதில் ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவம்?

காளிதாஸ் என்ற ரசிகர். அவர் அடிக்கடி ஃபோன் செய்துகொண்டே இருப்பார். ஒரு நிகழ்ச்சியில் அவரைச் சந்தித்தேன். மிகவும் சந்தோஷப்பட்டார். என் அப்பா, அம்மா போன்று சாப்பிட்டீங்களா, தூங்குனீங்களா, உடம்பை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்... என்று பாசத்தைப் பொழிந்தார். அந்த ரசிகரை மறக்கமுடியாது.

வி.ஐ.பி.களில் உங்களைப் பாராட்டியவர் யார்?

இயக்குனர் சமுத்திரகனிதான் பாராட்டியிருக்கிறார். அவர் எதிர்பார்க்கும் அளவிற்கு நடித்திருந்தால் கண்டிப்பாக பாராட்டுவார். சிவசந்திரன் சார் கூட பாராட்டியிருக்கிறார்.

தினமும் சன் டிவியில் பிறந்த நாள் வாழ்த்து நிகழ்ச்சியில் குட்டி குட்டி செய்தி சொல்வீங்களே.. அதை எல்லாம் யார் தொகுத்து கொடுப்பார்கள்?

எங்க தயாரிப்பாளர்தான். அவரே நூலகத்திலிருந்து புத்தகங்கள் எடுத்துவந்து, நிகழ்ச்சிக்கான சுவையான செய்திகளை தயாரித்துக் கொடுப்பார்.