Wednesday, December 2, 2009

காதலிக்கவே மாட்டேன் - பூர்ணா!

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகைகளாக விளங்குபவர்களில் பெரும்பாலானோர் கேரளத்தைச் சேர்ந்தவர்களே! அதற்கு மிகச் சிறந்த உதாரணங்களாக நிறைய பேரைச் சொல்லலாம். தற்போது அவர்களது வெற்றிக்கொடி பாலிவுட்டிலும் பறக்க ஆரம்பித்திருக்கிறது.அந்த வரிசையில் தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பிலும், நடனத்திலும் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தி நடித்து வருபவர் பூர்ணா. இவர் தற்போது தமிழில், நான்கு படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். "துரோகி' படப்பிடிப்பில் இருந்தவரை சற்று ஓரம் ஒதுக்கிப் பேசினோம்.சினிமாவிற்குள் உங்களது பிரேவசம் எப்படி நிகழ்ந்தது? ""நான் கேரள - மலையாள முஸ்லீம் குடும்பத்தில் பிறந்த பொண்ணு. ஸ்கூலில் படிக்கும்போதே கிளாசிக்கல் டான்ஸ் முறைப்படி கற்றுக்கொண்டேன். கேரளாவில் ஒரு முறை "சூப்பர் டான்ஸர் ரியால்டி ஷோ' நடந்தது. அதில் கலந்துகிட்டு, நடனம் ஆடியபோது எனக்குத்தான் சிறந்த நடனத்திற்கான விருது கிடைத்தது. இதுதான் நான் சினிமாவிற்கு வருவதற்கான முதல் படி. காரணம், அதுவரைக்கும் தியேட்டரில் உட்கார்ந்து படம் பார்த்து, ரசிக்கிற சாதாரண பெண்ணாகத்தான் இருந்தேன். சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வமெல்லாம் அதன் பிறகுதான் ஆரம்பித்தது. மலையாளத்தில் மோகன்லால் ஸôருக்கு மகளாக "அலிபாய்' என்ற படத்தில் நடித்தேன். அப்போ நான் ப்ளஸ்-ஒன் மாணவி. இந்தப் படத்தை ஷாஜி கைலாஸ் இயக்கியிருந்தார். பிறகு மோகன்லால் ஸôருக்கே இரண்டாவது நாயகியாக "பிளாஷ்' என்கிற படத்தில் நடித்தேன். இந்த சமயத்தில்தான் எனக்கு திருமுருகன் ஸôர், தன்னோட படத்துக்கான நாயகியை தேடிக் கொண்டிருக்கிறார்ன்னு தெரிந்தது. உடனே அவரைப் போய்ப் பார்த்தேன். ஸ்கிரீன் டெஸ்ட் எடுத்துப் பார்த்தார். அவருக்கு பிடித்துப்போகவே "முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு' படத்திற்கு என்னை தேர்வு செய்தார். இப்படித்தான் தமிழுக்கு நான் அறிமுகமானேன்."முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு' படத்தில் வைகைப் புயலுடன் கோடாங்கி பாட்டுக்கு சிறப்பாக ஆடினீர்களே எப்படி?இந்தப் பாட்டுக்கு வடிவேலு ஸôரும், சாந்தி மாஸ்டரும் கொடுத்த உற்சாகம்தான் நான் நல்லா நடனம் ஆட உதவியது. அதுவுமில்லாமல், அடிப்படையில் நடனத்தில் நான் ஃபோக், கதகளியெல்லாம் கற்று வைத்திருந்ததும் சிறப்பாக நடனமாட உதவியது. இங்கே உங்ககிட்ட ஒரு உண்மையைச் சொல்லியாகணும். பள்ளி படிப்பை முடித்தவுடனே என்னோட ஆசையெல்லாம் சென்னை வந்து ஷோபனா மேடத்தின் நடனப்பள்ளியில் சேர்ந்து நடனம் கற்றுக்கொண்டு, நடன ஆசிரியை ஆக வேண்டுமென்பதுதான்!மலையாளத்தில் வெளிவந்த "மணிசித்திரத்தாழ்' படத்தில் ஷோபனா மேடத்தின் நடனத்தைப் பார்த்து நான் மெய்மறந்து போய் விட்டேன். என்னோட சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத படங்களில் இந்தப் படமும் ஒன்று. அதனால்தான் நடனமென்றால் மிகுந்த சிரத்தையெடுத்து ஆடுகிறேன்!"முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு' படத்திற்குப் பிறகு பெரிய இடைவெளி ஏன்? இந்தப் படத்திற்குப் பிறகு, எனக்கு கன்னடத்திலும், மலையாளத்திலும் நடிப்பதற்கு வாய்ப்புக் கிடைத்தது. அதனால் ஒரே நேரத்தில் இங்கேயும், அங்கேயும் நடிக்க முடியாது என்பதற்காக, பட வாய்ப்புகளை குறைத்துக் கொண்டேன். தற்போது "வித்தகன்', "துரோகி', "கந்தக்கோட்டை' போன்ற படங்களில் மாறுபட்ட வேடங்களை தேர்வு செய்து நடித்திருக்கிறேன். விரைவில் இந்தப் படங்களை நீங்கள் திரையில் பார்க்கலாம். "துரோகி' படத்தில் எல்லோரும் பெண்களாமே?ஆமாம். படத்தோட இயக்குனர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர் என எல்லோருமே பெண்கள்தான். பொதுவாக படப்பிடிப்பில் ஆண்களுடைய குரல்தான் ஓங்கி ஒலிக்கும். ஆனால், இந்தப் படத்தை பொருத்தவரைக்கும் பெண்களின் குரல்தான் எந்தப் பக்கம் திரும்பினாலும் கேட்கும். இந்தப் படத்தை மணிரத்னத்தின் உதவியாளரான சுதா மேடம் இயக்க, இந்திரா மேடம் தயாரிக்கிறாங்க. படத்தில் விஷ்ணு, ஸ்ரீகாந்த் என இரண்டு கதாநாயகர்கள். நான் விஷ்ணுவிற்கு தங்கையாகவும், ஸ்ரீகாந்திற்கு நாயகியாகவும் நடிக்கிறேன். முழுக்க முழுக்க பெண்களால் நிரம்பியிருக்கும் "துரோகி' படத்தில் வேறுபாட்டை ஏதேனும் உணர்ந்தீர்களா?பெண்களோடு சேர்ந்து வேலைப் பார்க்கும்போது கொஞ்சம் ரிலாக்ஸôக இருப்பதாக உணர்ந்தேன். படப்பிடிப்பிற்கு போய்விட்டால் எல்லாரிடமும் எளிதாக பழகலாம், பேசலாம், அரட்டை அடிக்கலாம். ஆனால் மற்ற படப்பிடிப்புகளில் அப்படி செய்ய முடியாது, அவ்வளவுதான். மற்றபடி எனக்கு பெரியதாக வேறுபாடுகள் எதுவும் தெரியவில்லை."வித்தகன்' படத்தில் சண்டையெல்லாம் போடுகிறீர்களாமே?இது ஒரு ஆக்ஷன் படம். இதுவரை கிராமத்து பெண்ணாகத்தான் நடித்து வந்திருக்கிறேன். ஆனால், முதன் முறையாக இந்தப் படத்தில் நகரத்தில் வாழும் நவநாகரீக பெண்ணாக நடிக்கிறேன். கிருஸ்துவ மதத்தில் பிறந்த மெர்சி பாத்திரத்தில் நடிக்கிறேன். இதில் நாயகன், நாயகி என்று இல்லாமல், வேறு ஒரு கோணத்தில் பார்த்திபன் ஸôர் படத்தை எடுத்திருக்கிறார். துப்பாக்கி எடுத்தெல்லாம் இதில் நான் சண்டை போட்டிருக்கிறேன். என்னுடைய ஆக்ஷன் பிடித்திருக்கிறதா? என்று படத்தைப் பார்த்துட்டு சொல்லுங்கள்!தற்போது நடித்து வரும் "கந்தக்கோட்டை' மற்றும் "அர்ஜுனன் காதலி' படங்களைப் பற்றி?"கந்தக்கோட்டை' சிறப்பம்சம் நிறைந்த ஒரு படம். இதை சக்தி ஸôர் இயக்க, ராஜா ஸôர் தயாரிக்கிறார். வழக்கமாக நாயகனுக்கும், வில்லனுக்கும்தான் போட்டி வரும். ஆனால், இந்தப் படத்தில் நாயகிக்கும், வில்லனுக்கும் இடையில்தான் போட்டி நடக்கும். வில்லனாக சம்பத் ஸôர் நடிக்க, நாயகன் நகுலுக்கு, நாயகியாக நான் நடிக்கிறேன். இந்தப் படத்தில் என்னோட அறிமுகமே ஒரு நாயகனுக்குரிய அறிமுகத்தோடதான் ஆரம்பமாகும். இந்தப் படத்தில் நகுலுக்கு காதலென்றாலே பிடிக்காது. ஆனால் நானோ காதலுக்கு ஆதரவா செயல்படுவேன். எங்களுக்குள்ளே நடக்கிற மோதல்தான் கதையே!"அர்ஜுனன் காதலி' படம் அப்படியே தலைகீழ்! இந்தப் படத்தில் எனக்கு காதல் என்றாலே பத்தடி தூரத்தில் இருப்பேன். என்னை காதலிக்க வைக்கிறதுதான் நாயகனோட வேலையே! நாயகனாக ஜெய் நடிக்கிறார். இந்தப் படத்தை பார்த்தி பாஸ்கர் இயக்க, சேகர் வி.ஜோசப் ஒளிப்பதிவு செய்கிறார். காதலிக்கவே மாட்டேன்னு பிடிவாதம இருக்கிறவங்க, இந்தப் படத்தைப் பார்த்தால் நிச்சயம் காதலிக்க ஆரம்பிச்சுடுவாங்க. அந்தளவிற்கு யதார்த்தமான காதல் கதையா இயக்குனர் உருவாக்கிஇருக்கிறார்'' என்றவாறு அடுத்த ஷாட்டுக்கு ரெடியானார் பூர்ணா.

No comments:

Post a Comment