Tuesday, April 13, 2010

சிரிப்பை நிறுத்தலாமா சோனியா?



'செல்லமே'- தொடரில் சம்பந்தமே இல்லாமல் சிரிச்சுக்கிட்டே இருக்கும் சோனியாவை அவரது வீட்டில் சந்தித்தோம்.​
''என்னங்க இப்படித் திடீர்ன்னு சிரிப்பதை விட்டு விட்டு பழிவாங்குதில் இறங்கிட்டீங்க'' என்றவுடன் கலகலவெனச் சிரிக்கத் தொடங்கி விட்டவரை நிறுத்தி சற்று சீரியஸôகப் பேச வைத்தோம்:​ ​
'ஆமாம்.​ இப்போது சிரிக்க முடியவில்லையே என்று கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது.​ கதையோட களம் எல்லாம் மாறிப்போனதுனால இப்போது சிரிக்க முடியவில்லை.​ இருந்தாலும் சிரிப்பதற்கு முயற்சி செய்துகிட்டுத்தான் இருக்கிறேன்.​ இந்தத் தொடரில் என் அம்மா இறந்துபோன பிறகு கதை கொஞ்சம் மாறி ரொம்ப சீரியஸôன சீன்ஸ் போய்க்கிட்டு இருக்கிறது.​ ராதிகா மேடமை எதிர்த்து யாராவது சண்டை போட வேண்டியிருப்பதினால்,​​ அது நாத்தனாராக இருந்தால் நன்றாக இருக்கும் என்பதால் என்னால் சிரிக்க முடியாமல் போய்விட்டது.​ எவ்வளவு கஷ்டமான கதாபாத்திரமாக இருந்தாலும் செய்துவிடலாம்.​ ஆனால்,​​ எல்லாரையும் சிரிக்க வைப்பதுதான் சிரமம்.​ ​ ​
இந்தச் சிரிப்பு பாத்திரத்திற்காகவே வீட்டிற்குப் போய் கண்ணாடி முன்னால நின்று ஒரு மணிநேரம் சிரித்துப் பழகுவேன்.​ என் கணவர் பார்த்துவிட்டு உனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா என்று கேட்பார்.​ கொஞ்ச நாள் அந்த மாதிரியேதான் திரிந்தேன்.​ வெளியில் போகிறபோது சின்னச்சின்ன குழந்தைகள்கூட என்னைப் பார்த்ததும் சிரிக்கத் தொடங்கிவிடுவார்கள்.' ​
இப்பொழுது எத்தனை தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள்?
'செல்லமே', ​ 'மாதவி' என்று இரண்டு தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.​ இரண்டுமே வேறுவேறு வித்தியாசமான கதாபாத்திரங்கள்.​ 'செல்லமே'வில் எல்லாரும் திட்டுவது மாதிரி பாத்திரம்.​ மாதவியில் எல்லாரும் பார்த்து பரிதாபப்படுகிற பாத்திரம்.​ இப்படி ஒரே நேரத்தில் இரண்டு வித்தியாசமான பாத்திரங்கள் செய்வது நல்ல அனுபவமாக இருக்கிறது.​ அதோடு 'ராம ராவணன்','மூன்று முகம்' என சில மலையாள படங்களில் நடிச்சுக்கிட்டு இருக்கேன்.​ ​
உங்கள் கணவரை இப்பொழுது தொடர்களில் பார்க்க முடியலையே?​ ​
மூன்று வருடங்களாக அவர் தொடர்களில் நடிப்பதில்லை.​ இது வரை மூன்று தொடர்களில்தான் நடித்திருக்கிறார்.​ பெரியதிரை வாய்ப்பு வந்ததால் அங்கு சென்று விட்டார்.​ தற்போது 'ரசிக்கும் சீமானே',​​ 'ஆறாவது வரம்' போன்ற படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
உங்கள் கணவரும் நீங்களும் நடிப்பைப் பற்றி விவாதிப்பீர்களா?
நான் நடிக்கும் தொடரைப் பார்ப்பதற்கு அவருக்கு நேரம் இருக்காது.​ நான் சிறுவயதில் இருந்து நடிப்பதால் என்னிடம் ஆலோசனை கேட்பார்.​ விமர்சனங்கள் எதுவும் சொல்ல மாட்டார்.​ ஆனால் என் திறமைக்கேற்ற பாத்திரம் கிடைக்கவில்லை என்கிற வருத்தம் அவருக்கு உண்டு.​ ​
சின்னத்திரை அல்லது சினிமாத்துறை இப்பொழுது எப்படி இருக்கிறது என்று நினைக்கிறிர்கள்?
எல்லாத் துறையும் நன்றாக வளர்ந்திருக்கிறது.​ ஆரோக்கியமாகவும் இருக்கிறது.​ நான் குழந்தை நட்சத்திரமாக நடித்தபோது பேபி அஞ்சு,​​ மீனா,​​ சாலினி என்று மூன்று நான்கு பேர் தான் இருப்போம்.​ இப்போது ஏகப்பட்ட படங்கள் வருகின்றன.​ ஏகப்பட்ட பேர் நடிக்கிறார்கள்.​ இது வளர்ந்திருப்பதைத்தானே காட்டுகிறது.​ இடையில் ​ கொஞ்ச நாள்களுக்கு முன் கிளாமருக்குத்தான் வாய்ப்பு அதிகமாக இருந்தது.​ ஆனால் இப்போது அந்த நிலைமையும் மாறிவிட்டது.​ புதுமுகங்களும் திறமை காட்டுவதற்கு ​ ​ நிறைய வாய்ப்பு இருக்கிறது.​ அதுபோல சினிமா என்றாலே ஒரு தப்பான துறை என்கிற மாதிரியான கருத்துகள் இருந்தன.​ அதுவும் இப்போது மாறிப்​ போய்விட்டது.
உங்கள் குழந்தைகள் பற்றி சொல்லுங்க?
என் மகன் தேஜஸ்வின்னுக்கு ஐந்து வயதாகிறது.​ என் மகள் பவதாரணிக்கு ஒரு வயது தான் ஆகிறது.​ என் அப்பா,​​ அம்மாவும் என் சித்தியும்தான் பார்த்துக் கொள்கிறார்கள்.​ பெரியவனாவது என்னோடு கொஞ்சம் நாள் இருந்தான்.​ ஆனால் மகள் தான் எட்டு மாதத்தில் இருந்தே அம்மாவிடம் வளர்ந்து வருகிறாள்.
-​ ஸ்ரீதேவிகுமரேசன்

No comments:

Post a Comment