Tuesday, April 13, 2010

லட்சிய நடிப்பு


"கோலங்​கள்" தீபா வெங்​கட் என்​றால் தெரி​யா​த​வர்​களே
"தங்கம்' தொடரில் வரும் வடிவு என்றாலே இளவஞ்சிக்கு வயிற்றில் புளிதான். வடிவைக் கொஞ்சம் நமது வாசகர்
களுக்காக சீண்டி பார்ப்போமே என்று சின்னத்திரை நடிகை வர்ஷாவை தொடர்பு கொண்டோம். இன்று
ஷூட்டிங் இல்லை ஜாலியா வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று சுந்தர தெலுங்கு கலந்த தமிழில் கூறினார். அவரைச் சந்தித்தோம்.
உங்கள் குடும்பத்தினர் பற்றி சொல்லுங்கள்?
என் குடும்பத்தைச் சேர்ந்த எல்லாரும் ஹைதராபாதில் உள்ளார்கள். நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் அங்குதான். நான் முஸ்லீம் மதத்தை சார்ந்தவள். இங்கே சென்னையில் என் அத்தை, மாமாவோடு தங்கியிருக்கேன்.
என்ன என்ன தொடர்கள் நடிச்சுகிட்டு இருக்கீங்க?
"தங்கம்', "இதயம்', "அம்மன்', "கஸ்தூரி' என நான்கு தொடர்கள் நடிக்கிறேன். இந்த நாலு தொடரிலுமே நான்கு வித்தியாசமான கதாபாத்திரங்கள் செய்துகிட்டு இருக்கேன். இப்படி வேற வேற டிபரண்ட்டா செய்வது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. "தங்கம்'ல கிராமத்துப் பெண்ணாக நடிக்கிறேன். "கஸ்தூரி'யில் மென்மையான கேரக்டர், "அம்மன்' தொடரில் போலீஸ் ஆபிசரா வருவேன். "இதயம்' தொடரில் இப்பொழுது தான் என் போர்ஷன் ஆரம்பமாகி இருக்கு அதுவும் நெகட்டீவ் ரோல் தான். அதற்கு எப்படி வரவேற்பு இருக்கும் என்று இனிமேதான் தெரியும்.
"தங்கம்' தொடரில் இளவஞ்சியை எதிர்த்து வெளுத்து வாங்குறீங்களே, எப்படி?
அந்த சீரியலில் காவேரி அக்காதான் எப்பவுமே எல்லாரையும் டாமினேட் செய்வாங்க. ஆனா நான் அவுங்களுக்கு டென்ஷன் கொடுக்கிற மாதிரி எதிர்த்து சண்டை போடுவேன். இது ஒரு வித்தியாசமான அனுபவமா இருக்கிறது. அதனாலயே என் கேரக்டர் மக்கள்கிட்ட நல்லா ரீச் ஆகியிருக்கிறது. வெளியே எங்கயாவது ஆடியன்ஸ் பார்த்தாகூட "எப்பங்க உங்களுக்கு கல்யாணம். நீங்க கல்யாணமாகி அங்கே போங்க அப்ப தான் நல்லா இருக்கும். நீங்க ரெண்டு பேரும் ஸ்கிரீன்ல வந்தாலே ரொம்ப இன்ட்ரஸ்ட்டா பார்ப்போம்'னு சொல்லுவாங்க.
நீங்கள் எப்படி சினிமாவைத் தேர்ந்தெடுத்தீங்க?
சின்னவயதில் எங்கள் வீட்டில் டிவி எல்லாம் பார்க்க கூடாது. ஒரே ஒரு ரேடியோ தான் இருக்கும் அது கூட எங்க அப்பாதான் வைத்திருப்பார். சின்ன வயதில் இருந்தே எனக்கு டிவியில் வருபவர்கள் போட்டிருக்கும் நகைகள்,டிரஸ் எல்லாம் பார்க்க ரொம்ப ஆசையாக இருக்கும்.
அதற்காகவே டி.வி. பார்ப்பேன். காலேஜ் முடிச்சதும் மாடலிங் துறையை தேர்ந்தெடுத்தேன். மாடலிங்கில் இருக்கும்போதுதான் "லட்சியம்' என்ற தொடரின் டைரக்டர் என்னைப் பார்த்துவிட்டு இந்தக் கேரக்டரை நான் செய்தால் நல்லா இருக்கும் என்று சொன்னார். அதுதான் என்னோட ப்ர்ஸ்ட் சீரியல். அதன் பிறகு பாலாஜி டெலி ஃபிலிம்ஸ் மூலமாக மற்ற தொடர்களில் நடிக்க ஆரம்பித்தேன்.
ஓய்வு நேரங்களில் என்ன செய்வீர்கள்?
நடனம் என்றால் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஏதாவது பாட்டுபோட்டுவிட்டு நானும் என் சிஸ்டரும் ஆடிக்கிட்டு இருப்போம். கலா மாஸ்டரோட சிஸ்டர் ஜெயந்தி அக்காவிடம் தான் நடிகர் சங்கத்துல போய் டான்ஸ் கற்றுக்கொண்டேன். நடிப்புக்கு அடுத்தபடியா எனக்கு டான்ஸ்தான் ரொம்ப பிடிக்கும்.
டான்ஸ் மீது இவ்வளவு ஆர்வமாக இருக்கும் நீங்கள் டிவியில் வரும் நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லையே ஏன்?
தொடர் முடிந்ததும், டான்ஸ் பிராக்டிஸ் போகணும். ஏற்கனவே இத்தனை தொடர்கள் போய்கிட்டு இருக்கு. நேரம் கிடையாது. இதற்கு மேல டான்ஸ் எடுத்துகிட்டா ரொம்ப கஷ்டமாகிவிடும். நடிப்பில் சரியா கவனம் செலுத்த முடியாது. ஒர்க் லோட் அதிகமாகிவிடும். சின்னத்திரை நிகழ்ச்சி, நட்சத்திர விழா எல்லாம் வரும் போது டான்ஸ் நிகழ்ச்சிகள் செய்யணும்னு ஆசை இருக்கு. ஆனால் போட்டிகள்ல கலந்துக்க விருப்பமில்லை.
ரம்யாகிருஷ்ணோட நடிக்கும் அனுபவம் எப்படி?
நான் அவருடைய படங்கள் நிறைய பார்த்திருக்கிறேன். அப்பவே எனக்கு அவரைப் ரொம்ப பிடிக்கும். ஆனால் படத்தில் பார்த்ததற்கும் இப்போது நேரில் பார்ப்பதற்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கு. ஒரு சாதாரண குடும்ப பெண் எப்படி இருப்பாங்களோ, பழகுவாங்களோ
அப்படிதான் பழகுவாங்க. பெரிய ஹீரோயின் என்ற பந்தாஎல்லாம் அக்காவிடம் கிடையாது. யார் எந்த சீன் நல்லா நடித்தாலும் உடனே நீ நல்லா செய்த நல்லா இருந்தது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது என்று பாராட்டுவாங்க.
பொட்டு வைத்து பூ வைத்துக் கொண்டு தமிழ் பெண்ணாக நடிக்கும்பொழுது உங்கள் நடிப்பைப் பார்த்து வீட்டில் என்ன சொல்லுவார்கள்?
சொல்லப் போனால் எங்கள் குடும்பத்தில் பலருக்கு நான் நடிப்பதே தெரியாது. எனக்கு பொட்டு வைத்துக் கொள்வது, பூ வைத்து கொள்வது எல்லாம் ரொம்ப பிடிக்கும்.
சமீபத்தில் பெண்கள் தினம் வந்ததில்லையா அதைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?
ரொம்ப சந்தோஷமாக இருந்தது. பெண்களுக்காக ஒரு தினம் வைத்து கொண்டாடுவது பெண்களுக்குக் கிடைத்த அங்கீகாரம் தானே? என்னை பொருத்தவரை பெண்கள் யாரும் அடிமையாக இருக்க கூடாது. சுதந்திரமா செயல்படணும். எப்பவும் தன்னம்பிக்கையோட இருக்கணும்,யாரையும் சார்ந்து வாழக் கூடாதுன்னு நினைப்பேன்.

No comments:

Post a Comment